இறைச்சி தயாரித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறைச்சி தயாரித்தல் என்பது சுகாதாரமான முறையில் இறைச்சியைத் தயாரிப்பதைக் குறிப்பது ஆகும்.

கோழி இறைச்சி தயாரிக்கும் முறை

இறைச்சிக்கான கோழிகளுக்கு 12 மணி நேரத்திற்கு முன்னரே தீவனமளிப்பதை நிறத்தி நீர் மட்டும் கொடுக்க வேண்டும். இதனால் கோழிகளின் உள் உறுப்புகளில் காணப்படும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது .

இறைச்சிக்கு வெட்ட வேண்டிய கோழிகளின் கால்களை கட்டி தொங்க விட்டு மின்சாரத்தை பாய்ச்சி அல்லது தலையில் இலேசாக அடித்து உணர்விழக்க செய்ய வேண்டும். பின்னர் கழுத்து பகுதியில் உள்ள இரத்த குழாயை அறுத்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும் . இறகுகளை நீக்கி , தலையை துண்டித்து தேவையற்ற உள்ளுறுப்புகளை அகற்ற வேண்டும். உடல் பாகங்களை கழுவி குளிரூட்ட அறைகளில் சேமித்து வைத்து நுண்ணுயிர்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும். பின்னர் தேவைக்கேற்ப இறைச்சியின் வெவ்வெறு பகுதிகளை துண்டாக்கி பாலிதீன் பைகளில் தயார் செய்த நிறுவனத்தின் பெயர், கோழி இறைச்சி பகுதி, தயாரிக்கபட்ட நாள், காலாவதி நாள் மற்றும் எடை ஆகியவற்றை குறிப்பிட்டு சிப்பமிட வேண்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைச்சி_தயாரித்தல்&oldid=3325736" இருந்து மீள்விக்கப்பட்டது