அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம்

ஆள்கூறுகள்: 28°37′30″N 77°11′56″E / 28.625°N 77.199°E / 28.625; 77.199
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனை
Atal Bihari Vajpayee Institute of Medical Sciences and Dr. Ram Manohar Lohia Hospital
முந்தைய பெயர்
முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி (2009-2019)
குறிக்கோளுரைseva karuna nishtha kaushal
வகைபொது
உருவாக்கம்2009
பட்ட மாணவர்கள்300 (As of 1 April 2022)
அமைவிடம், ,
28°37′30″N 77°11′56″E / 28.625°N 77.199°E / 28.625; 77.199
வளாகம்நகரம்
சேர்ப்புகுரு கோபிந் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம்
இணையதளம்rmlh.nic.in


அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனை (Atal Bihari Vajpayee Institute of Medical Sciences and Dr. RML Hospital), முன்பு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி என்பது இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது மருத்துவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. முதுநிலை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக 2009-ல்[1] தொடங்கப்பட்டது. 2019-ல் 100 இடங்களுடன் கூடிய இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவையியல் படிப்பைத் தொடங்கியது.

வரலாறு[தொகு]

முன்னாள் பிரதமர் மற்றும் பாரத ரத்னா சிறீ அடல் பிகாரி வாச்பாயின் முதலாவது நினைவு தினமான 16 ஆகத்து 2019 அன்று மாண்புமிகு இந்தியச் சுகாதார அமைச்சர் மருத்துவர் அர்சவர்தன் இக்கல்லூரியினை திறந்துவைத்தார். இளநிலை மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதி ஆகத்து 2019-ல் கல்லூரியில் சேர்ந்தது.

இந்த நிறுவனத்தில் மருத்துவம் அல்லாத பாடங்களுக்கு வி. எம். எம். சி. & சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட மூத்த பேராசிரியர்கள் மற்றும் முனைவர் இரா. ம. லோ. மருத்துவமனை ஆசிரியர்களும் உள்ளனர். தற்போதைய உள்கட்டமைப்பு, இளநிலைப் பட்டதாரிகளின் கல்வியாளர்களுக்கான பிரத்தியேக கட்டிடம், முதுநிலைப் பட்டதாரிகளுக்கான 16-அடுக்கு விடுதிக் கட்டிடம் மற்றும் உறைவிட மருத்துவர்களுக்கு மேலும் மேம்படுத்தப்படும்.

இணைப்புகள்[தொகு]

அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனை தில்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு[தொகு]

முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனை வளாகத்துடன் இணைந்த புது தில்லியின் பட்ட மேற்படிப்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டிடத்தில் கல்லூரி இயங்குகிறது. இது அதிநவீன விரிவுரை அரங்குகள், அறிவைக்கூடம், உடலியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் ஆய்வகங்கள் மற்றும் அதிநவீன நூலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆண்டு விழா[தொகு]

அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவமனை ரெவல்சு என்றழைக்கப்படும் வருடாந்திர விழாவை நடத்துகின்றன. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ரெவெல்சு 2020 ரத்து செய்யப்பட்டது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Post-graduate institute at RML becomes a reality - Hindustan Times". Archived from the original on 9 April 2012.