வாகதீச்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாகதீச்வரி கருநாடக இசையின் 34 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு போகாச்சாயாநாட என்று பெயர்.

இலக்கணம்[தொகு]

வாகதீச்வரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி331 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம13 ரி3
  • ருது என்றழைக்கப்படும் 6 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகிறன.
  • சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
  • விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நாசிகாபூஷணி (70) ஆகும்.
  • வாகதீச்வரி மேளத்தின் மத்திமத்தை கிரக பேதம் செய்தால் நாகாநந்தினி (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் பவப்பிரியா (44) மேளமும் தோன்றுகிறன (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பரமாதமுடு தியாகராஜர் ஆதி
கிருதி நாதானு சந்தான கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி வாகதீஸ்வரி சுத்தானந்த பாரதியார் ஜம்பை

ஜன்ய இராகங்கள்[தொகு]

வாகதீச்வரியின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகதீச்வரி&oldid=3830712" இலிருந்து மீள்விக்கப்பட்டது