இட்ரியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம் அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மூவயோடோ இட்ரியம், இட்ரியம் மூவயோடைடு,[1] இட்ரியம்(3+) மூவயோடைடு
இனங்காட்டிகள்
13470-38-7 Y
ChemSpider 75345
EC number 236-737-1
InChI
  • InChI=1S/3HI.Y/h3*1H;/q;;;+3/p-3
    Key: LFWQXIMAKJCMJL-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83510
SMILES
  • [Y](I)(I)I
UNII IWJ2Y80D1J Y
பண்புகள்
YI
3
வாய்ப்பாட்டு எடை 469.6193 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 1,000 °C (1,830 °F; 1,270 K)
கொதிநிலை 1,310 °C (2,390 °F; 1,580 K)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்ரியம் அயோடைடு (Yttrium iodide) என்பது YI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்ரியமும் ஐதரயோடிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[2][3] நிறமற்ற படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையும்.

தயாரிப்பு[தொகு]

இட்ரியத்துடன் அயோடினைச் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தினால் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்.

இட்ரியம் ஆக்சைடுடன் அமோனியம் அயோடைடு சேர்த்து சூடுபடுத்தினாலும் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்:

இட்ரியம் ஆக்சைடு அல்லது இட்ரியம் ஐதராக்சைடை ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலமும் இட்ரியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்[தொகு]

இட்ரியம் அயோடைடு நிறமற்ற செதில் போன்ற படிகங்களாக உருவாகிறது. BiI3 கட்டமைப்பின் வகையை இதன் படிக அமைப்பும் கொண்டிருக்கிறது.[4]

தண்ணீர் மற்றும் எத்தனாலில் நன்றாக கரைகிறது. ஈரெத்தில் ஈதரில் கரையாது.

மூன்று மற்றும் அறுநீரேற்றுகளாகவும் இட்ரியம் அயோடைடு தோன்றுகிறது.[5]

பயன்[தொகு]

தாழ் வெப்பநிலைகளில் இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்தி வேதிப் பொருட்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இட்ரியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "yttrium triiodide" (in ஆங்கிலம்). webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  2. (in en) Quarterly Metallurgical Progress Report. United States Atomic Energy Commission, Technical Information Service Extension.. June 1960. பக். 5. https://www.google.ru/books/edition/Quarterly_Metallurgical_Progress_Report/_VyONY3KfhkC?hl=en&gbpv=1&dq=Yttrium+iodide&pg=PA5&printsec=frontcover. பார்த்த நாள்: 2 November 2021. 
  3. "Yttrium Iodide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
  4. Jongen, L.; Meyer, G. (1 August 2005). "Yttrium triiodide, YI3" (in en). Acta Crystallographica Section E 61 (8): i151–i152. doi:10.1107/S1600536805019847. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-5368. http://scripts.iucr.org/cgi-bin/paper?S1600536805019847. பார்த்த நாள்: 2 November 2021. 
  5. Emeleus, H.J.; Sharpe, Alan G. (1981). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-023624-9. https://archive.org/details/advancesininorga0024unse_a3x7. 
  6. "Yttrium(III) iodide". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்_அயோடைடு&oldid=3583093" இலிருந்து மீள்விக்கப்பட்டது