உள்ளடக்கத்துக்குச் செல்

கோவளம், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவளம்
Cobelong
Suburban Village
கோவளம் கடற்கரை தெற்குப் பகுதி
கோவளம் கடற்கரை தெற்குப் பகுதி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அருகில் உள்ள நகரம்சென்னை

கோவலம் (Covelong அல்லது Kovalam) என்பது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமமாகும். இது சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது. கோவலத்தை ஒரு துறைமுக நகராக ஆர்காடு நவாப் சாதித் அலி வளர்த்தார். இது 1746 இல் பிரஞ்ச்சுக்கார்களால் கைப்பற்றப்பட்டு, பின் 1752 இல் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.

காலனி ஆதிக்கக் காலத்தில் டச்சுக்காரர்களால் இங்கு ஒரு கோட்டை கட்டப்பட்டது. தற்காலத்தில் இங்கு ஒரு தனியார் ஆடம்பர கடற்கரை விடுதி ஃபிஷர்மேன்ஸ் கோவ் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்கரையில் உள்ள பண்டைய கத்தோலிக்க தேவாலயம் கவனத்தைக் கவரக்கூடியது. மேலும் இங்கு கடற்கரை அருகில் ஒரு தர்கா, கோயில் ஆகியன உள்ளன.

சென்னை கோவளம் கடற்கரையில் இருந்து ஒரு நடுக்கடல் பயணம்.

கோவளம் கடற்கரை கிராமம் மீன்பிடி தொழிலுக்குப் பிரபலமானது. இதனால் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, இது இந்தியாவின் முதல் நீர்சறுக்கு (surf ) கிராமமாகும். இங்கு நீர்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகள் நடக்கின்றன. இங்கு நீர்சறுக்கு போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.[1]

கோவளம் கடற்கரை கிழக்குக் கடற்கரையில் காற்று நீர்சறுக்கு உள்ள ஒரு சில இடங்களில் ஒன்று ஆகும். கடற்கரையில் நீர்சறுக்குப் பள்ளியுடன் கூடிய விடுதி உள்ளது.

அடையும் வழி

[தொகு]

பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவை வழியாக சென்னையில் இருந்து செல்ல உகந்த வழியாகும்.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) ஆகிய போக்குவரத்துத் துறையின் பேருந்துகள் சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கோவளத்திற்குப் பேருந்துகளை இயக்கி வருகிறன. சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டில் இருந்தும் கடற்கரையோரமாக படகின் வழியாகவும் இங்கு வந்து சேர இயலும்.

மேலும் காண்க

[தொகு]
  • கோவளம்
  • மீனவக் கிராமங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவளம்,_சென்னை&oldid=3169531" இலிருந்து மீள்விக்கப்பட்டது