கிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிருட்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருட்டிணன்
Sri Mariamman Temple Singapore 2 amk.jpg
கிருஷ்ணர்
இற்கு அதிபதி
தேவநாகரி कृष्ण
சமசுகிருதம் Kṛṣṇa
தமிழ் எழுத்து முறை கிருஷ்ணா
வகை விஷ்ணுவின் அவதாரம்
இடம் பிருந்தாவனம், கோகுலம், துவாரகை
மந்திரம் ஓம் நமோ நாராயணா
ஆயுதம் சுதர்சன சக்கரம்
துணை ருக்மணி, சத்யபாமா, சம்பவதி,
நாக்னஜிதி, காலிந்தி, மித்ரவிந்தா,
பத்ரா, லக்ஷ்மணா
நூல்கள் மகாபாரதம், ஹரிவம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம்

கிருட்டிணன் இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார்.இவர் விட்டுணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, உரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.

கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது ஒரு கடவுள் குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது.அவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், ஹரிவம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.

கிருஷ்ண வழிபாடு, பால கிருஷ்ணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் 4 வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது.எனினும் 10 ஆம் நூற்றாண்டிலன் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருஷ்ணர் வழிபாட்டுஉச்சத்தி அடைந்தது.ஒரிசாவில் ஜெகன்னாதர், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் உள்ள விதோபா என கிருஷ்ண உருவங்கள் பல வடிவங்களில் உருவாக்கப்பட்டன.1960 களில் உருவாக்கப்பட்ட சர்வதேச கிருஷ்ணா பக்தி சமூகம் கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது.

பெயர்கள் மற்றும் புனைபெயர்கள்

கிருஷ்ணா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு கரிய அல்லது அடர்ந்த என்று பொருள் படும.கிருஷ்ணன் கரிய நிறமுடையவன் என்பதால் இப்பெயரிட்டு அழைக்கபடுகின்றது.சில நேரங்களில் "கவர்ச்சிகரமான" எனவும் இச்சொல் மொழிபெயர்க்கப்படுகிறது. கிருஷ்ணன் பல்வேறு பெயர்கள், அடைமொழிகள் கொண்டுள்ளார்.அவற்றுள் "பெண்களை வசீகரிப்பவர்" என பொருள் படும் மோகன், "பசுக்களை கண்டுபிடிப்பவன்" என பொருள் படும் கோவிந்தா, "பசுக்களை பாதுகாப்பவன்" என பொருள் படும் கோபாலன் ஆகியவை குறிப்பிடதக்கவை ஆகும்.

கிருஷ்ணரின் கதை

இளமை

வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார்.

கிருஷ்ணரை மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு, யமுனை ஆறு வழியாக வசுதேவர் கொண்டு செல்தல்
கிர்ஷ்ணனை குளிப்பாட்டும் யசோதா

புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருஷ்ணாரின் பிறந்த தேதி கி.மு 3228 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆகவும் மற்றும் அவரின் இறப்பு கி.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.

குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை கைப்பற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த கலிங்கன் என்ற பாம்பையும் அடக்கினர் என்று கூறப்படுகிறது.

வாலிபம்

இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

பசுகளுடன் கிருஷ்ணன்

வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

கிருஷ்ணன் கோவர்த்தன மலையை தூக்குதல்
வெண்ணெய் உண்ணும் கண்ணன்

குடும்பம்

கிருஷ்ணன் மொத்தம் 16.108 மனைவிகளை கொண்டிருந்தார் அவற்றுள் அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர் அவர்கள் ருக்மணி,சத்யபாமா,சம்பவதி,நாக்னஜிதி,காலிந்தி,மித்ரவிந்தா,பத்ரா,லக்ஷ்மணா ஆவர் மற்றும் பிற 16.100 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள்.கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருஷ்ணர் ஒரே நாளில் மணந்தார்.அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார்.எனினும் அவர் தனது எட்டு மனைவிகளை தவிர மற்றவர்களுடன் எந்த வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

மகன்

கண்ணன் உபமன்யு முனிவரிடம் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணின் பாசுபத விரதத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார். கண்ணன் மற்றும் ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது.[1]

கீதை

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு

ஜரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருட்டிணன்

பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டதத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவர் வேண்டுதலுக்கு ஏற்ப அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். முனிவர்களின் சாபத்தின்படி யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது.

காண்க

சமீபத்திய ஆராய்ச்சி

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.[2] அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.[3]

வெளியிணைப்புக்கள்

உசாத்துணை

  1. கூர்ம புராணம் - கிருஷ்ணனின் தவம்
  2. A.S. Gaur, Sundaresh and Sila Tripati (Number 21, 2005). "ANCIENT DWARKA: STUDY BASED ON RECENT UNDERWATER ARCHAEOLOGICAL INVESTIGATIONS" 77. பார்த்த நாள் செப்டம்பர் 06, 2012.
  3. "History has it. Dwarka inundated by tsunami!". Times of India (Jan 4, 2005). பார்த்த நாள் செப்டம்பர் 06, 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணன்&oldid=1628253" இருந்து மீள்விக்கப்பட்டது