தமிழ் எழுத்து முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்
வகை அபுகிடா
மொழிகள் தமிழ், சௌராஷ்டிரம், சமஸ்கிருதம்
காலக்கட்டம் சுமார் 700 முதல்
மூல முறைகள் பிராமி
 → தமிழ் பிராமி
  → வட்டெழுத்து
   → தமிழ்
நெருக்கமான முறைகள் மலையாளம்
சிங்களம்
துளு


கிரந்தம்
வட்டெழுத்து

ஒருங்குறி அட்டவணை U+0B80–U+0BFF
ஐஎஸ்ஓ 15924 Tamil
Tamil Sample.svg


தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

எழுத்துக்கள்[தொகு]

உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராத சில கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.

தமிழ் எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்படும்.

தமிழ் எழுத்துக்களின் வரலாறு[தொகு]

தமிழ் எழுத்துக்களின் வரலாறு

தமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துக்கள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது.[1] தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துக்களை ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல அம்சங்களில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்ககாலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துக்களில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துக்கள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்கள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.

2 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுக்களில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துக்களில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர் தமிழ் எழுத்துக்கள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன. கிபி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளில் இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன.

தற்காலத் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துக்கள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துக்கள். 8 ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழ்ககத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11 ஆம் நூற்றாண்டில் பாண்டிநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது.

தமிழ் எழுத்துக்கள்[தொகு]

உயிரெழுத்துக்கள் (12)[தொகு]

உயிரெழுத்துக்களில் , , , , என்னும் ஐந்து எழுத்துக்கள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை "குறில்கள்" என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட , , , , என்னும் எழுத்துக்கள் "நெடில்கள்" என்றும் குறிக்கப்படுகின்றன. , என்னும் இரு எழுத்துக்களும் கூட்டெழுத்துக்கள். இவை முறையே + , + என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புக்களைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடன்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப் பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் சேர்த்து இப்போது என எழுதப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் , ஆகிய எழுத்துக்களைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எழுத்து பெயர் சொல்
அகரம் அம்மா
ஆகாரம் ஆடு
இகரம் இலை
ஈகாரம் ஈட்டி
உகரம் உடை
ஊகாரம் ஊஞ்சல்
எகரம் எட்டு
ஏகாரம் ஏணி
ஐகாரம் ஐந்து
ஒகரம் ஒன்பது
ஓகாரம் ஓடம்
ஒளகாரம் ஒளவை

மெய்யெழுத்துக்கள் (18)[தொகு]

பிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துக்களும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது.

மெய்யெழுத்து ISO 15919 பகுப்பு IPA
க் k வல்லினம் [k], [ɡ], [x], [ɣ], [h]
ங் மெல்லினம் [ŋ]
ச் c வல்லினம் [t͡ʃ], [d͡ʒ], [ʃ], [s], [ʒ]
ஞ் ñ மெல்லினம் [ɲ]
ட் வல்லினம் [ʈ], [ɖ], [ɽ]
ண் மெல்லினம் [ɳ]
த் t வல்லினம் [], [], [ð]
ந் n மெல்லினம் [n]
ப் p வல்லினம் [p], [b], [β]
ம் m மெல்லினம் [m]
ய் y இடையினம் [j]
ர் r இடையினம் [ɾ]
ல் l இடையினம் [l]
வ் v இடையினம் [ʋ]
ழ் இடையினம் [ɻ]
ள் இடையினம் [ɭ]
ற் வல்லினம் [r], [t], [d]
ன் மெல்லினம் [n]

உயிர்மெய்யெழுத்துக்கள் (216)[தொகு]

உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். உயிர்மெய் எழுத்துக்களின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17 ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துக்கள், பின்வருமாறு திரிபடைகின்றன:

  • மேல் விலங்கு பெறுதல்
  • கீழ் விலங்கு பெறுதல்
  • கோடு பெறுதல்
  • புள்ளி பெறுதல்
  • கோடும் புள்ளியும் பெறுதல்

தற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன.

  • மெய்கள் இகரத்துடனும், ஈகாரத்துடனும் சேரும்போது மேல் விலங்கு பெறுகின்றன. இதைத் தற்காலத்து "விசிறி"யை ஒத்தது. எடுத்துக்காட்டாக, கி, கீ என்பன இவ்வாறு விசிறி பெற்ற எழுத்துக்கள்.
  • உகரத்துடனும், ஊகாரத்துடனும் சேரும்போது மெய்கள் கீழ் விலங்கு பெறுகின்றன. கு, கூ போன்றவை கீழ் விலங்கு பெற்ற மெய்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
  • "கோடு" என்பது தற்காலத்து ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றை ஒத்தது. எகர, ஏகார உயிர்மெய்கள் இவ்வாறானவை. கெ, கே என்னும் மெய்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
  • ஆகாரத்தோடு சேர்ந்த மெய்கள் புள்ளி பெற்றுத் திரிபடைவதற்கு எடுத்துக்காட்டுகள். தற்காலத்தில் இது கா, சா போன்றவற்றை ஒத்தது.
  • ஒகர, ஓகார மெய்கள் கோடும், புள்ளியும் பெறுவன. தற்கால எழுத்துக்களில் கொ, கோ போன்றவற்றை இவற்றுடன் ஒப்பிடலாம்.

தொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம்.

கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.

தமிழ் அரிச்சுவடி
உயிரெழுத்துக்கள்→
மெய்யெழுத்துக்கள்
க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்த எழுத்து (1)[தொகு]

அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து.

எழுத்து பெயர் சொல்
அஃகேனம் எஃகு

கிரந்த எழுத்துக்கள்[தொகு]

கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் உபயோகிக்கப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஒரு லிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் உபயோகம் பெருமளவு குறைந்து விட்டது.

தமிழில் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லாத இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

வார்ப்புரு:கிரந்த அரிச்சுவடி

தமிழ் எழுதும் முறைமை[தொகு]

தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலேப் பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.

தமிழ் எண்கள்[தொகு]

தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், வருடம், செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
நாள் மாதம் வருடம் செலவு வரவு மேலேயுள்ளபடி ரூபாய் இலக்கம்

தமிழ் எழுத்துக்களும் கணினியும்[தொகு]

தமிழ் ஒருங்குறி U+0B80 முதல் U+0BFF வரை உள்ளது.

தமிழ்[1]
Unicode.org chart (PDF)
  0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
U+0B8x
U+0B9x
U+0BAx
U+0BBx ி
U+0BCx
U+0BDx
U+0BEx
U+0BFx
Notes
1.^ As of Unicode version 6.1
தமிழ் ஒருங்குறி மொழியியல்
உயிரெழுத்துக்கள் →
மெய்யெழுத்துக்கள்

0B85

0B86

0B87

0B88

0B89

0B8A

0B8E

0B8F

0B90

0B92

0B93

0B94
க்
0B95
0BCD

0B95
 
கா
0B95
0BBE
கி
0B95
0BBF
கீ
0B95
0BC0
கு
0B95
0BC1
கூ
0B95
0BC2
கெ
0B95
0BC6
கே
0B95
0BC7
கை
0B95
0BC8
கொ
0B95
0BCA
கோ
0B95
0BCB
கௌ
0B95
0BCC
ங்
0B99
0BCD

0B99
 
ஙா
0B99
0BBE
ஙி
0B99
0BBF
ஙீ
0B99
0BC0
ஙு
0B99
0BC1
ஙூ
0B99
0BC2
ஙெ
0B99
0BC6
ஙே
0B99
0BC7
ஙை
0B99
0BC8
ஙொ
0B99
0BCA
ஙோ
0B99
0BCB
ஙௌ
0B99
0BCC
ச்
0B9A
0BCD

0B9A
 
சா
0B9A
0BBE
சி
0B9A
0BBF
சீ
0B9A
0BC0
சு
0B9A
0BC1
சூ
0B9A
0BC2
செ
0B9A
0BC6
சே
0B9A
0BC7
சை
0B9A
0BC8
சொ
0B9A
0BCA
சோ
0B9A
0BCB
சௌ
0B9A
0BCC
ஞ்
0B9E
0BCD

0B9E
 
ஞா
0B9E
0BBE
ஞி
0B9E
0BBF
ஞீ
0B9E
0BC0
ஞு
0B9E
0BC1
ஞூ
0B9E
0BC2
ஞெ
0B9E
0BC6
ஞே
0B9E
0BC7
ஞை
0B9E
0BC8
ஞொ
0B9E
0BCA
ஞோ
0B9E
0BCB
ஞௌ
0B9E
0BCC
ட்
0B9F
0BCD

0B9F
 
டா
0B9F
0BBE
டி
0B9F
0BBF
டீ
0B9F
0BC0
டு
0B9F
0BC1
டூ
0B9F
0BC2
டெ
0B9F
0BC6
டே
0B9F
0BC7
டை
0B9F
0BC8
டொ
0B9F
0BCA
டோ
0B9F
0BCB
டௌ
0B9F
0BCC
ண்
0BA3
0BCD

0BA3
 
ணா
0BA3
0BBE
ணி
0BA3
0BBF
ணீ
0BA3
0BC0
ணு
0BA3
0BC1
ணூ
0BA3
0BC2
ணெ
0BA3
0BC6
ணே
0BA3
0BC7
ணை
0BA3
0BC8
ணொ
0BA3
0BCA
ணோ
0BA3
0BCB
ணௌ
0BA3
0BCC
த்
0BA4
0BCD

0BA4
 
தா
0BA4
0BBE
தி
0BA4
0BBF
தீ
0BA4
0BC0
து
0BA4
0BC1
தூ
0BA4
0BC2
தெ
0BA4
0BC6
தே
0BA4
0BC7
தை
0BA4
0BC8
தொ
0BA4
0BCA
தோ
0BA4
0BCB
தௌ
0BA4
0BCC
ந்
0BA8
0BCD

0BA8
 
நா
0BA8
0BBE
நி
0BA8
0BBF
நீ
0BA8
0BC0
நு
0BA8
0BC1
நூ
0BA8
0BC2
நெ
0BA8
0BC6
நே
0BA8
0BC7
நை
0BA8
0BC8
நொ
0BA8
0BCA
நோ
0BA8
0BCB
நௌ
0BA8
0BCC
ப்
0BAA
0BCD

0BAA
 
பா
0BAA
0BBE
பி
0BAA
0BBF
பீ
0BAA
0BC0
பு
0BAA
0BC1
பூ
0BAA
0BC2
பெ
0BAA
0BC6
பே
0BAA
0BC7
பை
0BAA
0BC8
பொ
0BAA
0BCA
போ
0BAA
0BCB
பௌ
0BAA
0BCC
ம்
0BAE
0BCD

0BAE
 
மா
0BAE
0BBE
மி
0BAE
0BBF
மீ
0BAE
0BC0
மு
0BAE
0BC1
மூ
0BAE
0BC2
மெ
0BAE
0BC6
மே
0BAE
0BC7
மை
0BAE
0BC8
மொ
0BAE
0BCA
மோ
0BAE
0BCB
மௌ
0BAE
0BCC
ய்
0BAF
0BCD

0BAF
 
யா
0BAF
0BBE
யி
0BAF
0BBF
யீ
0BAF
0BC0
யு
0BAF
0BC1
யூ
0BAF
0BC2
யெ
0BAF
0BC6
யே
0BAF
0BC7
யை
0BAF
0BC8
யொ
0BAF
0BCA
யோ
0BAF
0BCB
யௌ
0BAF
0BCC
ர்
0BB0
0BCD

0BB0
 
ரா
0BB0
0BBE
ரி
0BB0
0BBF
ரீ
0BB0
0BC0
ரு
0BB0
0BC1
ரூ
0BB0
0BC2
ரெ
0BB0
0BC6
ரே
0BB0
0BC7
ரை
0BB0
0BC8
ரொ
0BB0
0BCA
ரோ
0BB0
0BCB
ரௌ
0BB0
0BCC
ல்
0BB2
0BCD

0BB2
 
லா
0BB2
0BBE
லி
0BB2
0BBF
லீ
0BB2
0BC0
லு
0BB2
0BC1
லூ
0BB2
0BC2
லெ
0BB2
0BC6
லே
0BB2
0BC7
லை
0BB2
0BC8
லொ
0BB2
0BCA
லோ
0BB2
0BCB
லௌ
0BB2
0BCC
வ்
0BB5
0BCD

0BB5
 
வா
0BB5
0BBE
வி
0BB5
0BBF
வீ
0BB5
0BC0
வு
0BB5
0BC1
வூ
0BB5
0BC2
வெ
0BB5
0BC6
வே
0BB5
0BC7
வை
0BB5
0BC8
வொ
0BB5
0BCA
வோ
0BB5
0BCB
வௌ
0BB5
0BCC
ழ்
0BB4
0BCD

0BB4
 
ழா
0BB4
0BBE
ழி
0BB4
0BBF
ழீ
0BB4
0BC0
ழு
0BB4
0BC1
ழூ
0BB4
0BC2
ழெ
0BB4
0BC6
ழே
0BB4
0BC7
ழை
0BB4
0BC8
ழொ
0BB4
0BCA
ழோ
0BB4
0BCB
ழௌ
0BB4
0BCC
ள்
0BB3
0BCD

0BB3
 
ளா
0BB3
0BBE
ளி
0BB3
0BBF
ளீ
0BB3
0BC0
ளு
0BB3
0BC1
ளூ
0BB3
0BC2
ளெ
0BB3
0BC6
ளே
0BB3
0BC7
ளை
0BB3
0BC8
ளொ
0BB3
0BCA
ளோ
0BB3
0BCB
ளௌ
0BB3
0BCC
ற்
0BB1
0BCD

0BB1
 
றா
0BB1
0BBE
றி
0BB1
0BBF
றீ
0BB1
0BC0
று
0BB1
0BC1
றூ
0BB1
0BC2
றெ
0BB1
0BC6
றே
0BB1
0BC7
றை
0BB1
0BC8
றொ
0BB1
0BCA
றோ
0BB1
0BCB
றௌ
0BB1
0BCC
ன்
0BA9
0BCD

0BA9
 
னா
0BA9
0BBE
னி
0BA9
0BBF
னீ
0BA9
0BC0
னு
0BA9
0BC1
னூ
0BA9
0BC2
னெ
0BA9
0BC6
னே
0BA9
0BC7
னை
0BA9
0BC8
னொ
0BA9
0BCA
னோ
0BA9
0BCB
னௌ
0BA9
0BCC
ஶ்
0BB6
0BCD

0BB6
 
ஶா
0BB6
0BBE
ஶி
0BB6
0BBF
ஶீ
0BB6
0BC0
ஶு
0BB6
0BC1
ஶூ
0BB6
0BC2
ஶெ
0BB6
0BC6
ஶே
0BB6
0BC7
ஶை
0BB6
0BC8
ஶொ
0BB6
0BCA
ஶோ
0BB6
0BCB
ஶௌ
0BB6
0BCC
ஜ்
0B9C
0BCD

0B9C
 
ஜா
0B9C
0BBE
ஜி
0B9C
0BBF
ஜீ
0B9C
0BC0
ஜு
0B9C
0BC1
ஜூ
0B9C
0BC2
ஜெ
0B9C
0BC6
ஜே
0B9C
0BC7
ஜை
0B9C
0BC8
ஜொ
0B9C
0BCA
ஜோ
0B9C
0BCB
ஜௌ
0B9C
0BCC
ஷ்
0BB7
0BCD

0BB7
 
ஷா
0BB7
0BBE
ஷி
0BB7
0BBF
ஷீ
0BB7
0BC0
ஷு
0BB7
0BC1
ஷூ
0BB7
0BC2
ஷெ
0BB7
0BC6
ஷே
0BB7
0BC7
ஷை
0BB7
0BC8
ஷொ
0BB7
0BCA
ஷோ
0BB7
0BCB
ஷௌ
0BB7
0BCC
ஸ்
0BB8
0BCD

0BB8
 
ஸா
0BB8
0BBE
ஸி
0BB8
0BBF
ஸீ
0BB8
0BC0
ஸு
0BB8
0BC1
ஸூ
0BB8
0BC2
ஸெ
0BB8
0BC6
ஸே
0BB8
0BC7
ஸை
0BB8
0BC8
ஸொ
0BB8
0BCA
ஸோ
0BB8
0BCB
ஸௌ
0BB8
0BCC
ஹ்
0BB9
0BCD

0BB9
 
ஹா
0BB9
0BBE
ஹி
0BB9
0BBF
ஹீ
0BB9
0BC0
ஹு
0BB9
0BC1
ஹூ
0BB9
0BC2
ஹெ
0BB9
0BC6
ஹே
0BB9
0BC7
ஹை
0BB9
0BC8
ஹொ
0BB9
0BCA
ஹோ
0BB9
0BCB
ஹௌ
0BB9
0BCC
க்ஷ்
0B95
0BCD
0BB7
0BCD
க்ஷ
0B95
0BCD
0BB7
 
க்ஷா
0B95
0BCD
0BB7
0BBE
க்ஷி
0B95
0BCD
0BB7
0BBF
க்ஷீ
0B95
0BCD
0BB7
0BC0
க்ஷு
0B95
0BCD
0BB7
0BC1
க்ஷூ
0B95
0BCD
0BB7
0BC2
க்ஷெ
0B95
0BCD
0BB7
0BC6
க்ஷே
0B95
0BCD
0BB7
0BC7
க்ஷை
0B95
0BCD
0BB7
0BC8
ஷொ
0B95
0BCD
0BB7
0BCA
க்ஷோ
0B95
0BCD
0BB7
0BCB
ஷௌ
0B95
0BCD
0BB7
0BCC

மேலும் காண்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_எழுத்து_முறை&oldid=1690922" இருந்து மீள்விக்கப்பட்டது