வட்டெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட்டெழுத்து
வகை அபுகிடா
மொழிகள் தமிழ், மணிப்பிரவாளம்
காலக்கட்டம் கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை
மூல முறைகள் பிராமி
 → தமிழ் பிராமி
  → வட்டெழுத்து
தோற்றுவித்த முறைகள் தமிழ் எழுத்துமுறை
நெருக்கமான முறைகள் கிரந்தம்
Vatteluttu.png
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வட்டெழுத்துக்களில்
பிராமி எழுத்துமுறையும் அவற்றின் வழித்தோன்றல்களும்

பிராமி

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்த்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தில் இருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை பல்லவ எழுத்துமுறை எனவும் கூறுவர்

[தொகு] வட்டெழுத்து தோற்றம்

வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாறுபடுத்தியதால், வட்டெழுத்து தோன்றியது என பொதுவாக கருதப்படுகின்றது[1]. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்( கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதுனால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவை வட்ட வடிவமாக உருமாற்றப்பட்டு எழுதுப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.

ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர்[2]. மு.வரதராசனார் தன்னுடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் வெட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்துமுறை என்றும் வட பிராமி தென் பிராமியாக திரிபுற்றது வட்டெழுத்தை ஒட்டி வளர்ந்த வளர்ச்சியே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை[யார்?]

கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது[3]. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்