விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்கிப்பீடியா, ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு தமிழில் தட்டச்சு செய்ய:

1) பக்கத்தின் முதல் வரியில் உள்ள “தட்டச்சு செய்ய” இணைப்பினைத் தேர்வு செய்யுங்கள்:

    • புகுபதிகை செய்தவர்கள்
Tamiltyping1.JPG
    • புகுபதிகை செய்யாதவர்கள்
Tamiltyping2.JPG

2) செயலாக்குக என்ற சதுரப்பெட்டியைத் தெரிவு செய்யுங்கள்

நுட்பம்

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்

பயனர் சாசிகள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!

விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

3) எழுத்துப்பெயர்ப்பு அல்லது தமிழ்99 ஆகிய முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

4) இத்தேர்வு செய்த பின்னர் பக்கத்தில் அனைத்து பெட்டிகளிலும் நீங்கள் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சுக் கருவி தேர்வு செய்யப்பட்டிருப்பதின் அடையாளமாக, பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும்.

5) இது குறித்த மேலதிக தொழில்நுட்ப தகவல்களுக்கு காண்க - விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சுக் கருவி

பொருளடக்கம்

பிற புற முறைகள்

  • விண்டோசு விசுடா மற்றும் விண்டோசு 7 இயக்குதளம் கொண்ட கணினிகளில் தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. Control Panel > Regional Language Options > Keyboards and Languages க்குச்சென்று Change Keyboards ஐ அழுத்தவும். வெளிப்படும் Text Services and Input Languages என்ற திரையில் General > Add > Tamil (India) > Keyboard > Tamil ஐத் தேர்வு செய்க. OK செய்தவுடன் Default Input Language ல் தமிழ் தென்படும். தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். Language Bar ல் தமிழின் குறியீடு 'TA' ஆகும். Alt + Left Shift செய்து ஆங்கிலம் அல்லது தமிழுக்கு மாறாலாம்.
  • மேக்க்கின்டாச் கணினிகளில் (Mac OS X 10.4 முதல்) தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. System Preferences > International > Input Methods க்குச்சென்று Tamil Input Method ஐத் தேர்வு செய்க.

தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்99 விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்சு செய்ய உதவும்; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.

தமிழ்த் தட்டச்சுக்கு பிற வழிகள்

  • முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிப்பீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவிப் பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள Puthuvai Online Writerஅல்லது http://www.iit.edu/~laksvij/language/tamil.html எழுதியை பயன்படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
  • http://www.alltamil.com/unicode.html ஆல்தமிழ் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தி அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
  • http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
  • http://specials.msn.co.in/ilit/Tamil.aspx மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
  • உங்களது கணினியில் விசைப்பலகை செலுத்துவானை (Keyboard Driver) நிறுவ முடியாத சந்தர்ப்பங்களில், உங்களுக்கு தமிழ் ஒருங்குறியில் தட்டெழுத்திட w3Tamil உதவி புரிகிறது. இங்குள்ள எழுதியில் தட்டச்சிட்ட பின்பு அதனைப் பிரதிசெய்து நீங்கள் வேண்டிய இடத்தில் ஒட்டலாம். இந்த எழுதியில் உங்களது கணினியின் விசைப்பலகையை உபயோகித்தோ அல்லது w3Tamil இணைய விசைப்பலகையினை உபயோகித்து சுட்டி உதவியுடன் கிளிக் செய்வதனூடகவோ தட்டச்சிட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனை தமிழ்99 விசைப்பலகை பயிற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.
  • தமிழ் நண்பர்கள் தட்டச்சி என்ற தமிழ் எழுத்து மாற்றியை பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம். [Supports Tamil Thanglish, Tamil99, Tamil typewriter]
  • கிளிக்-எழுதி, இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோசிலோ லிநூக்சிலோ அல்லது மக்கின்டோசிலோ இயங்கக் கூடியது. மேலும் விபரங்களுக்கு கிளிக்கெழுதி
  • அழகி எனும் மென்பொருளை உபயோகித்து கணினியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழை ஒருங்குறியில் பதிவு செய்ய இயலும். இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. விவரங்களுக்கு: http://www.azhagi.com/
  • இந்த தளத்திற்குச் சென்று இங்குள்ள இடதுபுறக் கட்டத்தில் ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சு செய்து வலது புறத்தில் தமிழ் எழுத்துக்களைப் பெற்று இங்கிருப்பதை அப்படியே பிரதி செய்து அல்லது வெட்டி ஒட்டலாம்.

இதையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி