தமிழ்ப் பிராமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் பிராமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்

தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி (தாமிழி) எனவும் அழைக்கப்படுகிறது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றன. அவை:

  1. தமிழி (அ) தாமிழி
  2. வட்டெழுத்து.

கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, பன்னவயன சுத்தா ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று.[1] தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின

சிரோண்மனி மற்றும் ஐராவதம் மகாதேவன் போன்ற தொல்லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியிலிருந்தே அசோகன் பிராமி தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.

பொருளடக்கம்

[தொகு] அசோகனின் பிராமிக்கு தமிழ் பிராமிக்கு உள்ள வேறுபாடுகள்

அசோகன் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காக புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகன் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை ற,ன,ள,ழ ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகன் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறு படுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்து பிராமி எழுத்துக்களை தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும்.

பழனி அருகே பிராமி எழுத்து அடங்கிய பொருட்களுடன் இருந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. அதிலுள்ள தானியகளின் காலத்தை அமெரிக்க நிறுவணம் கி.மு.490 என்று கணித்துள்ளது. இதனால் தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[2]


[தொகு] தமிழ்ப் பிராமியில் 'தமிழ்' என்ற சொல்

Tamilbrahmi.jpg


[தொகு] தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

  • எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப் பட்டது.[3]
  • ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு[4]
  • தாய்லாந்து நாட்டில் தமிழ்ப்பிராமி எழுத்துக்களுடன் பானை.[5]

[தொகு] மேற்கோள்கள்

  1. T.V.Mahalingam, Early South Indian Palaeography, page 110-111, 1974 Second Edition
  2. "Palani excavation triggers fresh debate" (in ஆங்கிலம்). The Hindu. Jul 16, 2006. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece. Retrieved 2011-08-30. 
  3. "Tamil Brahmi script in Egypt" (in ஆங்கிலம்). The Hindu. Nov 21, 2007. http://www.hinduonnet.com/2007/11/21/stories/2007112158412400.htm. Retrieved 2007-12-06. 
  4. T.S., Subramanian (Feb 17, 2005). "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" (in ஆங்கிலம்). The Hindu. http://www.hinduonnet.com/2005/02/17/stories/2005021704471300.htm. Retrieved 2007-12-06. 
  5. "Tamil-Brahmi inscription on pottery found in Thailand" (in ஆங்கிலம்). The Hindu. Jul 16, 2006. http://www.hindu.com/2006/07/16/stories/2006071603952000.htm. Retrieved 2007-12-06. 

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_பிராமி&oldid=1096363" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்