திருநெல்வேலித் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

திருநெல்வேலித் தமிழ் (Tirunelveli Tamil) அல்லது நெல்லைத் தமிழ் (Nellai Tamil), என்பது 'தென்பாண்டிச் சீமை' என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழி, பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இதிகாசங்களில் தகவல்கள் உள்ளன. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும்.[சான்று தேவை] எனவே நெல்லைத் தமிழைத் தமிழ் மொழியின் துவக்கநிலை அமைப்பைக் கொண்டுள்ள தூய தமிழ் வடிவமாக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக சில வார்த்தைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
  • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
  • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
  • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
  • முடுக்குது - நெருக்குகிறது
  • சொல்லுதான் - சொல்கிறான்
  • செய்தான் - செய்கிறான்

நெல்லைத்தமிழ் சொற்கள்[தொகு]

  • அண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
  • ஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
  • ஏல(லே) – நண்பனை அழைப்பது
  • மக்கா – நண்பா
  • பைதா – சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
  • கொண்டி – தாழ்ப்பாள்
  • பைய – மெதுவாக
  • சாரம் – லுங்கி
  • கோட்டி – மனநிலை சரியில்லாதவர்
  • வளவு – முடுக்கு, சந்து
  • சிரை – தொந்தரவு
  • சேக்காளி – நண்பன்
  • தொரவா – சாவி
  • மச்சி – மாடி
  • கொடை – திருவிழா
  • கசம் – ஆழமான பகுதி
  • ஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen)
  • துஷ்டி – எழவு, சாவு, இறப்பு (funeral)
  • சவுட்டு – குறைந்த
  • கிடா – பெரிய ஆடு (male)
  • செத்த நேரம் – கொஞ்ச நேரம்
  • குறுக்க சாய்த்தல் – படுத்தல்
  • பூடம் – பலி பீடம்
  • அந்தானிக்கு – அப்பொழுது
  • வாரியல் – துடைப்பம்
  • கூவை – ஆந்தை an owl (bird of bad omen)
  • இடும்பு – திமிறு (arrogance)
  • சீக்கு – நோய்
  • சீனி – சர்க்கரை (Sugar)
  • ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்
  • நொம்பலம் – தள்ளவும், தள்ளலாம்
  • கொட்டாரம் – அரண்மனை
  • திட்டு – மேடு
  • சிரிப்பாணி – சிரிப்பு
  • பாட்டம் – குத்தகை
  • பொறத்தால – பின்னாலே
  • மாப்பு – மன்னிப்பு
  • ராத்தல் – ஊர் சுத்துதல்
  • சோலி – வேலை
  • சங்கு – கழுத்து
  • செவி – காது
  • மண்டை – தலை
  • செவிடு – கன்னம்
  • சாவி – மணியில்லாத நெல், பதர்
  • மூடு – மரத்து அடி
  • குறுக்கு – முதுகு
  • வெக்க – சூடு, அனல் காற்று
  • வேக்காடு – வியர்வை
  • முடுக்குது – நெருக்குகிறது
  • சொல்லுதான் – சொல்கிறான்
  • செய்தான் - செய்கிறான்
  • முகரை – முகம்
  • இங்கன – இங்கு
  • புரவாட்டி – அப்புறம்
  • பிளசர் – கார்
  • களவானி – திருட்டுப்பயல்
  • சட்டுவம் - கரண்டி
  • தொறவா - சாவி
  • கோதி வை - மொண்டு வை
  • அண்டிப் பருப்பு - முந்திரிப் பருப்பு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநெல்வேலித்_தமிழ்&oldid=3298687" இலிருந்து மீள்விக்கப்பட்டது