பிராகிருதம்
| பிராகிருதம் | |
|---|---|
| புவியியல் பரம்பல்: |
— |
| மொழி வகைப்பாடு: | *இந்திய-ஐரோப்பிய * இந்திய-ஈரானிய
|
| துணைப்பிரிவு: |
—
|
| ISO 639-2 and 639-5: | pra |
பிராகிருதம் (வடமொழி प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல. ஒரு மொழிக்குடும்பத்தை குறிக்கின்றது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்ட மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், அந்தணர்கள் அதை வடமொழிக்கு புறம்பாகவே கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தாலும், எந்த ஒருபிரிவினரதும் தாய் மொழியாக அவை கருதப்படவேயில்லை[மேற்கோள் தேவை].
பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் பேசப்பட்டு வந்தது. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தில் இருந்தே தோன்றின.
பொருளடக்கம் |
சொற்பிறப்பியல் [தொகு]
பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து உதித்தது ஆகும். பிரகிருதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மாறாக சமஸ்கிருதம் (संस्कृतं) என்றால் திருத்தப்பட்டது என பொருள்.
பிராகிருத மொழிகள் [தொகு]
பல பிராகிருத மொழிகள் உள்ளன அவற்றும் பலதரப்பட்ட இலக்கிய மரபுடையன மூன்று அவை ஸௌரஸேனி, மகதி மற்றும் மஹாராஷ்ட்ரி. ஜைன பிராகிருதத்தையும் இத்தோடு சேர்த்துக்கொள்ளலாம். பைஸாகி, காந்தாரி என்ற பிராகிருத மொழிகளையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. அர்த்தமகதி என்ற மொழி ஜைன நூல்களை எழுத பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழியாகும்.
புத்தர் கூட ஒரு பிராகிருத மொழியிலேயே தனது போதனைகளை செய்தார். பாளி மொழியும் ஒரு பிராகிருத மொழியே. பெரும்பாண்மைய தேரவாத புத்த மத நூல்களும், சூத்திரங்களும் பாளி மொழிலேயே உள்ளன. அசோகரின் கல்வெட்டுகளும் இம்மொழிலேயே உள்ளது. எனினும் பல்வேறு இனபேத காரணங்களுக்காக [மேற்கோள் தேவை] வடமொழி நூலாசிரியர்கள் பாளியை ஒரு பிராகிருத மொழியாக கருதவில்லை. தற்காலத்தில் அது பிராகிருத மொழியாகவே கருதப்படுகிறது [மேற்கோள் தேவை].
பெரும்பான்மையான தற்கால வட-இந்திய மொழிகள் பிராகிருத்தில் இருந்து தோன்றிய அபப்ரம்ஸா என்ற இடைக்கால மொழியிலிருந்தே தோன்றின