பிராமணத் தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராமணத் தமிழ் என்பது தமிழ் மொழியின் ஒரு வழக்கு. இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமிழ்ப் பிராமணர்கள் ஆவார்.
பொருளடக்கம் |
எடுத்துக்காட்டுகள் [தொகு]
பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- அகம் - வீடு
- அத்திம்பேர்- அத்தை வீட்டார்
- அம்மாஞ்சி - அம்மான் சேய் - மாமா மகன்/மகள்
- ஆம்படையான் - அகமுடையான் - கணவன்/வீட்டுக்காரன்
- நன்னா - நன்றாக
- வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
- என்ன ஓய் - முன்னிலை விளி
- பிள்ளாண்டான் - பிள்ளை ஆண்டவன்
- பட்டவர்த்தனமா -தெளிவாக
- செத்த நேரம் - சற்று நேரம்
- நாழி ஆயிடுத்து - நாழிகை ஆகிவிட்டது
(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு [தொகு]
- ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
- பேஷிண்டு - பேசிக்கொண்டு
(வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள் [தொகு]
- வந்தேள் - வந்தீர்கள்
- போனேள்-போனீர்கள்
(வினை)+டுத்து - (வினை)+ விட்டது [தொகு]
- வந்துடுத்து - வந்துவிட்டது
- போயிடுத்து - போய்விட்டது
(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று [தொகு]
- தோணித்து- தோன்றிற்று
(வினை)+அறது- (வினை)+ கிறது [தொகு]
- வர்றது - வருகிறது
- படுத்தறது - படுத்துகிறது
- வர்றன் - வருகிறான்
- அவா(ள்) - அவர்கள்
- பெரியவா -பெரியவர்கள்
- வந்தா: - வந்தார்கள்
- வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
- போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?