ஏகநாதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பைத்தான் என்னும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி, கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தீண்டத்தகாதோரிடம் எல்லையற்ற அன்புடையவரானார். கண்ணனை அனைத்திலும் கண்டார். கண்ணனின் தீவிர பக்தர், பெரிய பாகவத புருஷர், சிறந்த இல்லற நெறியாளர், பெரிய ஞானி. இன்றும் மக்களுக்கு உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.