பையூர் 1 நீலம் மாம்பழம்
Appearance
பையூர் 1 நீலம் மாம்பழம் என்பது நீலம் மாம்பழங்களில் ஒரு தனித்தேர்வு வகையாகும். இது கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் இரகம் ஆகும்.
இவ்வகை மாமரம் வருடாவருடம் சீரான மகசூல் தரும் இரகம் ஆகும். இம்மரங்கள் குட்டையாக வளரும் தன்மையுடையன. இதன் பழங்கள் தரம் கொண்டவை. நல்ல சுவை உடையது. நல்ல இருப்புத் தன்மை கொண்டதால் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்லலாம்.
உசாத்துணை
[தொகு]- ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.
இவற்றையும் காண்க
[தொகு]- பையூர் ஊராட்சி
- பையூர் - 1 (நெல் வகை)
வெளியிணைப்புகள்
[தொகு]- "மா'-வில் கூடுதல் லாபம் பெற யோசனை நாளிதழ்:தினமணி, நாள்:ஜூலை 1, 2010
- அதிக லாபம் தரும் "மா'], நாளிதழ்: தினமணி, நாள்: மே 21, 2015]
- தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: மா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்]