புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி (rhinosinusitis), என்பது நாசிப்பக்க வடிகுழல்களில் அழற்சியினால் ஏற்படும் அறிகுறிகளைக் குறிப்பிடுகிறது. பொதுவான அறிகுறிகளாகக் கெட்டியான மூக்குச்சளி, மூக்கடைப்பு, முகத்தில்வலி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்[1]. காய்ச்சல், தலைவலி, நாற்றம், தொண்டைக் கமறல், இருமல் போன்றவை பிற அறிகுறிகளாகும்[2][3]. இருமல் இரவு நேரங்களில் கடுமையானதாக இருக்கும். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுவது அரிதான ஒன்றாகும்.[3] நான்கு வாரங்களுக்குக் குறைவான காலம் நீடித்தால் கடிய நாசிப்புரையழற்சி எனவும் [(acute rhinosinusitis (ARS)], பன்னிரெண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் நாட்பட்ட நாசிப்புரையழற்சி [chronic rhinosinusitis (CRS)] எனவும் அழைக்கப்படுகிறது[1].
↑ 1.01.1Rosenfeld, RM; Piccirillo, JF; Chandrasekhar, SS; Brook, I; Ashok Kumar, K; Kramper, M; Orlandi, RR; Palmer, JN et al. (ஏப்ரல் 2015). "Clinical practice guideline (update): adult sinusitis executive summary.". Otolaryngology--head and neck surgery : official journal of American Academy of Otolaryngology-Head and Neck Surgery152 (4): 598–609. doi:10.1177/0194599815574247. பப்மெட்:25833927.