நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) என்பது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் நெடுங்காலமாக இருக்கக்கூடிய ஒரு அழற்சி நோயாகும். பொதுவாக இது நெடுங்கால சுவாச அடைப்பு நோயில் (COPD) ஒன்றாக இருக்கும்.[1] இந்நோயை வரைவிலக்கணப்படுத்தும்போது, அடுத்தடுத்து வரும் இரு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து மூன்று மாத காலமாவது இந்நோய் விடாது இருக்குமாயின் அது நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி என அழைக்கப்படும் .[2]
இந்நோயின்போது தொடர்ந்து இருமல் இருப்பதுடன், சளி, சீதச்சவ்வு/சளிச்சவ்வு போன்றன வெளியேறும். இந்நோயில் மூச்சுப் பாதைகள் குறுகலடைந்து அடைப்புகள் ஏற்படும். எம்பைசீமா எனப்படும் நுரையீரல் வீக்கநோயுடன் இந்நோய் இணைந்திருக்கும். இதற்கு முற்றிய நுரையீரல் பாதைத் தடைநோய்
(Chronic obstructive lung disease - COLD) என்று பெயர். புகைத்தல் இவ்வகை நோய்க்கு ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது.