பேச்சு:நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு பொருத்தமானதா[தொகு]

Chronic bronchitis என்பதை நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நாட்பட்ட சுவாசக்குழாய் அழற்சி என்பதே பொருத்தமானதாக இருக்குமென நினைக்கின்றேன். மற்றவர்களின் கருத்தை அறிய விளைகின்றேன். --Kalaiarasy 21:30, 11 ஏப்ரல் 2011 (UTC)

  • எனது கருத்து:

"chronic" என்பதற்கு "நெடுங்கால" என்று இங்கே: நெடுங்கால சுவாச அடைப்பு நோய் பயன்படுத்தி உள்ளேன்.

[French chronique, from Latin chronicus, from Greek khronikos, of time, from khronos, time.]
நாட்பட்ட எனும் போது நோயின் இறுதி நிலையைக் குறிப்பதுபோல உள்ளது.
அனைத்து "Chronic" நோய்களிலும் "நாட்பட்ட" என்று மாற்றவேண்டும் அல்லது "நெடுங்கால" என்று மாற்றவேண்டும்.

அதன்படி நீங்கள் கூறிய தலைப்புக்கள் அல்லது "நெடுங்கால மூச்சுக்குழாய் அழற்சி" எனலாம், "மூச்சுக்குழாய்க்குப் பதிலாக "மூச்சுக்குழல்" (நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி) என்பது சிறப்பாக உள்ளது. இதன்படி இவற்றையும் மாற்றவேண்டும்:

  1. தீவிர மார்புச்சளி நோய் :---> தீவிர மூச்சுக்குழல் அழற்சி
  2. மார்புச்சளி நோய் :---> மூச்சுக்குழல் அழற்சி

நாட்பட்ட என்பதற்கு ஒரு உதாரணம்: "நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு ஏற்படலாம்."

--சி. செந்தி 22:11, 11 ஏப்ரல் 2011 (UTC)
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி பொருத்தமாயுள்ளது. தீவிர என்பது intensive எனும் பொருள் தருவது போல் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:11, 11 ஏப்ரல் 2011 (UTC)
தீவிர என்பது "acute" என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது, எனினும் நீங்கள் கூறியது போன்று அதனது பொருள் சரிவரப் பொருந்தவில்லை.
ஒரு நோய்க்கு acute என்றால் உடனடியாக என்னும் பொருள்வருமாற்போல் இருத்தலே உரிய கருத்தைத் தரும். தீவிரமான என்பது உகந்தது அல்ல. chronic என்றால் காலப்போக்கில் நீண்டகாலமாக (எனது பரிந்துரை: நெடுங்கால) ஒரு நோய் இருப்பதைக் குறிக்கும். இவை எல்லா நோய்களுக்கும் பொதுவாக இருத்தல் சிறந்தது. யாரவது ACUTE என்பதற்கு உகந்த சொல் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.--சி. செந்தி 23:30, 11 ஏப்ரல் 2011 (UTC)

Acute என்பதற்கு தமிழ் விக்சனரியில் கொடுக்கப்பட்டிருப்பதையும் பாருங்கள். --Kalaiarasy 23:34, 11 ஏப்ரல் 2011 (UTC)

  • தமிழ் விக்சனரியில் கொடுக்கப்பட்டுள்ளது acute எனும் சொல்லின் இயல்பான மொழிபெயர்ப்பு. மருத்துவத்தில் கூர்மையான; கடுமையான; தீவிரமான எனும் கருத்தில் எடுக்க முடியாது. ஏனெனில் மருத்துவத்தில் உடனடியாக, திடீரென்று தோன்றும், குறுகியகாலத்து என்கின்ற கருத்திலேயே கையாளப்படுகின்றது. அதாவது உடனடியாகத் தோன்றி கடுமையாக உள்ள நோய்.

(chronic என்பது நெடுங்காலமாக இருந்துவரும் நோய், இங்கும் நோய் கடுமையானதே!)

acute pain என்பதன் கருத்து கடுமையான வலி என்று வரும், ஆனால் acute bronchitis என்றால் தீவிர மூச்சுக்குழல் அழற்சி என்று சொல்லல் தகாது.
Collins English Dictionaryயில் இவ்வாறு தரப்பட்டுள்ளது:
acute :'
-sharp or severe; intense 
- (Medicine) (of a disease)
a.  arising suddenly and manifesting intense severity

விரிவாக இங்கு பார்க்கலாம். சொல் விளக்கம் : http://www.thefreedictionary.com/acute

    • இதற்கு மொழிவல்லுனரின் உதவி தேவை.--சி. செந்தி 23:58, 11 ஏப்ரல் 2011 (UTC)
கடி என்ற தமிழ்சொல்லுக்கு உடனடி, விரைவாக என்ற பொருள் உண்டு. இறைவனைக் கடிது வரவேண்டும் என்பர். இதனையொட்டி கந்தர் சட்டிக் கவசத்தில் "கடிதுயர்" என்ற சொல் உடனடியான நோய் என்ற பொருளில் வருகிறது.

கடிவிட விஷங்கள் கடிதுயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

இது இங்கு பொருந்துமா என ஆராயவும்.--மணியன் 03:33, 12 ஏப்ரல் 2011 (UTC)

அப்படியானால் chronic என்பதை நெடுங்கால என்று வைத்துக் கொள்ளலாம். Acute என்பதை எப்படி அழைப்பது என்று சரியாகத் தெரியவில்லை. Acute திடீரெனத் தோன்றும் தீவிர என்ற பதத்தை பயன்படுத்தலாமா? எ.கா: Acute Bronchitis = திடீரெனத் தோன்றும் தீவிர மூச்சுக்குழல் அழற்சி . ஆனால் அது மிக பெரிய சொல்லாக இருக்கின்றதோ? --Kalaiarasy 07:27, 12 ஏப்ரல் 2011 (UTC)

  • மணியன், சிறப்பான சொல் ஒன்றைக் கூறி இருக்கின்றீர்கள். த.இ.பல்கலைக்கழகத்தில் "கடி"யின் பயன்பாடு கண்ணுற்றேன்..

இங்கு பகிர்கின்றேன்: http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512315.htm

கடி என்ற ஓர் உரிச்சொல் கூர்மை, காப்பு, புதுமை, விரைவு முதலான பல பொருள்களைத் தரும்.
(எ.டு):
எம் அம்பு கடிவிடுதும் : 	(எம் அம்பினை விரைவாக விடுவோம்)
கடி நுனைப் பகழி :	(கூர்மையான நுனியை உடைய அம்பு)
    • கடி என்பதற்கு விரைவாக என்பதுடன், (கந்தர் சட்டி கவசத்தில்"உடனடி") "கூர்மையான" எனும் அர்த்தமும் தரப்பட்டுள்ளது. இச்சொல்லையே கையாளலாம் என்றால், "கடிதான மூச்சுக்குழல் அழற்சி" அல்லது கடிய மூச்சுக்குழல் அழற்சி என்பது சரியா?

திடீரெனத் தோன்றும் தீவிர மூச்சுக்குழல் அழற்சி என்பது பெரிய சொல்லாகவே இருக்கின்றது. --சி. செந்தி 15:27, 12 ஏப்ரல் 2011 (UTC)