உள்ளடக்கத்துக்குச் செல்

வடகரை கீழ்படுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகரை கீழ்படுகை
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் இரஞ்சித் சிங், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

20,821 (2011)

820/km2 (2,124/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 25.40 சதுர கிலோமீட்டர்கள் (9.81 sq mi)
குறியீடுகள்
இணையதளம் https://www.townpanchayat.in/vadakaraikilpidagai

வடகரை கீழ்படுகை (ஆங்கிலம்: Vadakarai Keezhpadugai Town Panchayat), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.[3] 25.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வடகரை கீழ்படுகை பேரூராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இது பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.

பேரூராட்சியில் அமைந்த பகுதிகள்

[தொகு]
  1. பசும்பொன் நகர்
  2. அண்ணாநகர்
  3. சாம்பவர் காலனி
  4. வாவாநகரம்
  5. உதயசெல்வன்பட்டி
  6. கோட்டைதிரடு

இதனருகில் அமைந்த நகரங்கள்

[தொகு]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 18 வார்டுகளும், 5,047 வீடுகள் கொண்ட வடகரை கீழ்படுகை பேரூராட்சியின் மக்கள்தொகை 20,821 ஆகும். அதில் ஆண்கள் 10,643 மற்றும் பெண்கள் 10,178 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 956 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.04% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 76.58% ஆகவுள்ளது.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வடகரை கீழ்படுகை பேரூராட்சி
  4. Vadakarai Keezhpadugai Town Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகரை_கீழ்படுகை&oldid=4513647" இலிருந்து மீள்விக்கப்பட்டது