லஞ்ச திச்சன்
லஞ்ச திச்சன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கி.மு. 119 – கி.மு. 109 |
முன்னிருந்தவர் | துலத்தன |
கல்லாட நாகன் | |
அரச குலம் | சாக்கிய வம்சம் |
தந்தை | சத்தா திச்சன் |
இறப்பு | கி.மு. 109 |
லஞ்ச திச்சன் என்பவன் கி.மு. 119 தொடக்கம் கி.மு. 109 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனாவான். இவனின் மறுபெயர் லமினி திச்சன் ஆகும். இவன் பத்து ஆண்டுகள் அனுராதபுர இராச்சியத்தை ஆண்டான்.
ஆட்சி[தொகு]
அனுராதபுர மன்னர்களுள் ஒருவனான சத்தா திச்சனது மூத்த மகனே லஞ்ச திச்சன். சிங்கள மக்களின் கலாச்சாரப்படி சத்தா திச்சன் அனுராதபுரத்தை ஆட்சிசெய்த போது லஞ்ச திச்சன் உருகுணையின் மன்னனாகத் திகழ்ந்தான்.
சத்தா திச்சன் இறந்த பின்பு மகா விகாரையின், பிக்குகளின் அறிவுறுத்தலின் படி அரசனின் இளைய மகனான துலத்தனை ஆட்சிபீடம் ஏற்றினர். இச்செய்தி கேட்ட லஞ்ச திச்சன், உருகுணையிலிருந்து அணிவகுத்துச் சென்று துலத்தனை ஆட்சியிலிருந்து விலக்கி, சிம்மாசனத்தை தான் கைப்பற்றிக் கொண்டான்.
ஆரம்பத்தில் லஞ்ச திச்சனுக்கும் பிக்குகளுக்கும் இடையே முறுகல் நிலையே காணப்பட்டது. எனினும் பின்பு லஞ்ச திச்சன் பௌத்த மதத்தை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
விசய வம்சம் (கி.மு. 477–கி.மு. 237, கி.மு. 215–கி.மு. 205) |
|
---|---|
சோழ வம்சம் (கி.மு. 205 – கி.மு.161) |
|
விசய வம்சம் (கி.மு. 161 –கி.மு.103 ) |
|
பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (103 BC–89 BC) |
|
விசய வம்சம் (89 BC–66 AD) |
|
House of Lambakanna I (66–436) |
|
இராசராட்டிரப் பாண்டியர் (436–463) |
|
House of Moriya (463–691) |
|
House of Lambakanna II (691–1017) |
|
சாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும். |