உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்காராயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருக்காறாயில் கண்ணாயிரநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்காறாயில்
பெயர்:திருக்காறாயில் கண்ணாயிரநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்காரவாசல் (திருக்காரைவாசல்)
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கண்ணாயிர நாதர், கண்ணாயிரம் உடையார்
தாயார்:கைலாச நாயகி
தல விருட்சம்:பலா, அகில்.
தீர்த்தம்:பிரம தீர்த்தம், சேஷ தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில் (திருக்காறாயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 119ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் கபால முனிவருக்குக் காட்சி தந்தார் என்பதும் பதஞ்சலிக்கு எழுவகைத் தாண்டவங்களையும் காட்டினார் என்பதும் தொன்நம்பிக்கைகள்.

மேலும் இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் தைலத்தை பயன்படுத்தி வர கண் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.

இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.

பக்தி இலக்கியங்களில் 'காறை' எனக் குறிப்பிடப்படுவது இவ்வூரே ஆகும்.

சப்தவிடங்கத் தலங்களில் இத்திருத்தலம் ஆதிவிடங்கத் தலம்.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 249

வெளி இணைப்புகள்

[தொகு]

தினமலர் கோயில்கள் தளம் - அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில்