தாம்பரம் சானடோரியம்
தாம்பரம் சானடோரியம் (Tambaram Sanatorium) என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பகுதியாகும். சென்னைக் கடற்கரை - விழுப்புரம் பிரிவில் உள்ள தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையத்தால் சென்னை புறநகர் இருப்புவழியில் தாம்பரம் தொடருந்து நிலையம் வழியாக இந்த பகுதி தோடருந்து சேவை செய்யப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள்
[தொகு]தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனம் என்பது தம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவத்திற்காக அமைந்துள்ள ஒரு முதன்மை நிறுவனமாகும்.
தாம்பரம் காசநோய் சானடோரியம் என்று பிரபலமாக அறியப்படும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை 1928 இல் தொடங்கப்பட்டது.[1] இது தேசிய நெடுஞ்சாலை எண் 45 இல் அமைந்துள்ளது. [2]
நலமளிப்பு நிலையம்
[தொகு]நலமளிப்பு நிலையம் (Sanatorium) என்பது நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், அவர்கள் உடல்நலம் தேறுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு மருத்துவக் கட்டமைப்பு ஆகும். இத்தகைய நிலையங்கள் குறிப்பாக 1800-களின் பிற்பகுதியிலும் 1900-களின் முற்பகுதியிலும் காசநோய் போன்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடமாகத் திகழ்ந்தன. அக்காலத்தில் காசநோயைக் குணப்படுத்த முறையான மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது மற்றும் அவர்களுக்குத் தூய்மையான காற்றை வழங்குவது மட்டுமே தீர்வாகக் கருதப்பட்டது. இதற்காக இத்தகைய நிலையங்கள் பெரும்பாலும் மலைப் பகுதிகள், அடர்ந்த காடுகள் அல்லது கடற்கரை ஓரங்கள் போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் அமைக்கப்பட்டன.
குறிப்புகள்
[தொகு]- ↑ நாட்டிலேயே காச நோய்க்கு சிறப்பான சிகிச்சை: தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு கவுரவம்!
- ↑ Manikandan, K. (19 March 2013). "GHTM lab gets NABL recognition". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/ghtm-lab-gets-nabl-recognition/article4523018.ece. பார்த்த நாள்: 24 Mar 2013.