தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை கற்றல், கண்டுபிடித்தல், மேம்படுத்தல்
வகை தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம்
உருவாக்கம் 2012
அமைவிடம் நாகப்பட்டினம்,, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம் http://www.tnfu.ac.in

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University -TNFU) தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது.[1]

படிப்புகள்[தொகு]

இப்பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளது. மாணவர்கள் இப்பல்கலைகழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

  1. நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc) .
  2. எட்டு படிப்புகளில் இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc)
  3. நான்கு படிப்புகளில், மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு[2]

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள்[தொகு]

எண். கல்லூரியின் பெயர் இடம் மாவட்டம் இணைப்பு நிறுவிய ஆண்டு இணையதளம்
1 மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 1977 [3]
2 மீன்வள தொழில்நுட்ப கழகம் பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2012 [4]
3 மீன்வள பொறியியல் கல்லூரி நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் 2012 [5]
4 மீன்வள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மாதவரம் சென்னை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் [6]
5 மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் [7]
6 மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் பரக்கை கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் [8]

பிற மையங்கள்[தொகு]

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக்த்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

  1. பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
  2. மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம், (FITT) சென்னை http://www.tnfu.org.in/university/wp/?page_id=3683

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]