சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: krc:10 июнь |
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:10. юн |
||
வரிசை 159: | வரிசை 159: | ||
[[ro:10 iunie]] |
[[ro:10 iunie]] |
||
[[ru:10 июня]] |
[[ru:10 июня]] |
||
[[rue:10. юн]] |
|||
[[sah:Бэс ыйын 10]] |
[[sah:Бэс ыйын 10]] |
||
[[scn:10 di giugnu]] |
[[scn:10 di giugnu]] |
02:06, 4 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
ஜூன் 10 கிரிகோரியன் ஆண்டின் 161ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 162ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1190 - மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.
- 1786 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1801 - சிவகங்கையின் சின்னமருது "ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்" என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
- 1838 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1846 - கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
- 1886 - நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.
- 1898 - அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
- 1945 - ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
- 1956 - இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1967 - இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.
- 1984 - தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
- 1986 - யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1996 - வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
- 1998 - முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
- 1999 - கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
- 2000 - இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
- 2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
- 1925 - வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி
- 1971 - பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்
இறப்புகள்
- கிமு 323 - மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)
- 1836 - அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)
- 2004 - ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)
சிறப்பு நாள்
- போர்த்துக்கல் - தேசிய நாள்