பயனர் பேச்சு:Arularasan. G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →உதவி... |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) →பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
||
வரிசை 484: | வரிசை 484: | ||
மிக்க நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:54, 2 சூன் 2016 (UTC) |
மிக்க நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:54, 2 சூன் 2016 (UTC) |
||
== பதக்கம் == |
|||
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |
|||
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]] |
|||
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம் |
|||
|- |
|||
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 17:28, 2 சூன் 2016 (UTC) |
|||
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#28|பதிகை]])</small> |
|||
|} |
17:28, 2 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள்!
வாருங்கள், Arularasan. G, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--நந்தகுமார் (பேச்சு) 14:42, 5 செப்டம்பர் 2014 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், Arularasan. G!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
-- mohamed ijazz(பேச்சு) 09:02, 9 செப்டம்பர் 2014 (UTC)
பயனர் பக்கம் துவக்கம் , மேற்கோள் சுட்டுதல்
வணக்கம் Arulghsr . தங்கள் பயனர் பக்கத்தை துவங்களாமே :) மேலும் , இங்கு தாங்கள் செய்துள்ள தொகுப்பின் நம்பகத்தன்மையை அதிகரித்திட , மேற்கோள்களை சுட்டவும் . ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என் பேச்சு பக்கத்தில் கேளுங்கள் . --Commons sibi (பேச்சு) 01:37, 11 செப்டம்பர் 2014 (UTC)
பதிப்பு வரலாறு குறித்து
நீங்கள் சங்ககால நூல்கள் தொடர்பான கட்டுரைகளில் பதிப்பு வரலாறு என்கின்ற உப பிரிவை உருவாக்கிவருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் தட்டச்சிடும்போது ==பதிப்பு வரலாறு== [தொகு]
எனத் தட்டச்சிடாமல் ==பதிப்பு வரலாறு==
எனத் தட்டச்சிடவும். [தொகு] என்பது தன்னியக்கமாக இடைமுகத்தில் காண்பிக்கப்படும் இணைப்பாகும். இதனை நாம் தட்டச்சிடத் தேவையில்லை. நீங்கள் தொடர்ந்து பங்களிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள் :) --ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:09, 12 செப்டம்பர் 2014 (UTC)
கீழ்ப்பளுவூர் சின்னச்சாமி
கீழ்ப்பளுவூர் சின்னச்சாமி கட்டுரையில் தரப்பட்டுள்ள ஆண்டுகள் குழப்பமாக உள்ளன. சரி பாருங்கள். கட்டுரை பற்றிய மேலதிக ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள். நீங்கள் தந்துள்ளது வலுவானதாக இல்லை.--Kanags \உரையாடுக 12:01, 15 செப்டம்பர் 2014 (UTC)
வேண்டுகோள்
வணக்கம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தம்மை மாய்த்துக் கொண்டவர்களின் வரலாறுகளை எழுதிவருகிறீர்கள். மகிழ்ச்சி. நான் அக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து, முதல் பத்தியில் சில வரிகளைச் சேர்த்திருக்கிறேன். இத்தகைய போராளிகள் குறித்து நீங்கள் மீண்டும் தொடங்கும் புதுக் கட்டுரைகளிலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரேயொரு ஆதாரத்தை மட்டும் கட்டுரைகள் சார்ந்திராமல் மேலும் வேறு சான்றுகள் இருந்தால் நல்லது. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:04, 23 செப்டம்பர் 2014 (UTC)
உங்கள் பார்வைக்கு
பேச்சு:ஒசூர் கோட்டை இங்கு கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையில் சரியான ஆண்டுகள் குறிப்பிடப்படுதல் அவசியமாகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:30, 28 செப்டம்பர் 2014 (UTC)
தலைப்பில் பெயர்
நபர்கள் பற்றிய கட்டுரைகளில் தலைப்பிடும் போதும் கட்டுரையில் அந்நபர்களின் பெயர்களை எழுதும் போதும் முதலெழுத்த்க்கும், பெயருக்கும் இடையில் ஓர் இடைவெளி விட வேண்டும். எ+கா: மு.அ.சிதம்பரம் என்ற பெயர் மு. அ. சிதம்பரம் என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 09:30, 14 அக்டோபர் 2014 (UTC)
பதக்கம்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
வணக்கம்! பாராட்டுகளும், நன்றிகளும்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 21 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம் தொடர்ந்தும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 14:56, 21 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம் -- mohamed ijazz(பேச்சு) 15:02, 21 அக்டோபர் 2014 (UTC)
தலைப்பு திருத்தம்
ஓரு கட்டுரையின் பெயர் க. அ. செல்லப்பன் என்று இருந்திருக்கவேண்டும் ஆனால் க. அ. முத்தையா என்று தவறுதலாக இட்டுவிட்டடேன் தவறை இப்போதுதான் கண்டுபிடித்தேன் இதை சரிசெய்ய யாராவது உதவ முடியுமா எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை−முன்நிற்கும் கருத்து Arulghsr (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- நீங்களே சரி செய்ய முடியும். அந்த கட்டுரைக்கு செல்லுங்கள். எ.கா: க. அ. முத்தையா. கட்டுரைப் பக்கம் வந்தவுடன், அதற்கு மேலே, “படிக்கவும், தொகு, வரலாற்றைக் காட்டவும்” என்று பல வசதிகள் இருக்கும். அதன் அருகில் கீழ்நோக்கிய அம்புகுறி இருக்கும். அதை அழுத்தினால் “நகர்த்துக” என்று வரும். அதை அழுத்துங்கள். அடுத்த பக்கத்தில், எந்த பக்கத்துக்கு நகர்த்த விரும்புகிறீர்களோ, அதை பெட்டியில் எழுதுங்கள். பின்னர், நகர்த்து என்ற பொத்தானை அழுத்தினால் கட்டுரையை நகர்த்தலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:30, 24 அக்டோபர் 2014 (UTC)
தமிழ்க்குரிசில் அவர்களே தங்கள் உதவிக்கு நன்றி பக்கத்தை நகர்த்திவிட்டேன் (பயனர்பேச்சு:Arulghsr)
தங்களின் கவனத்திற்கு...
வணக்கம்! முனைவர் என இரட்டைச்சுழி னை போட்டு எழுதுவதே சரியானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:52, 31 அக்டோபர் 2014 (UTC)
ஒருசில கட்டுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளன ஆனால் அந்த பக்கங்களை பார்க்கும்போது ஆங்கிலத்தில் பார்த்தால் தமிழில் அப்பக்கம் இருப்பதற்கான மொழிகள் பகுதியில் தமிழ் என்ற சொல் இல்லாமல் உள்ளது இதே போலத்தான் தமிழ் கட்டுரைகளிலும் ENGLISH என்பது இல்லாமல் உள்ளது இதனால் ஆங்கிலக் கட்டுரையை பார்த்து இது தமிழில் இல்லைபோலும் என்று எண்ணி தொகுத்த இருகட்டுரைகள் ஏற்கெனவே இருந்த காரணத்தால் நீக்கப்பட்டன. இதை சரிசெய்வது எவ்வாறு.--arulghsr
- கட்டுரைகள் பல இவ்வாறு இணைப்புகள் தரப்படாமல் உள்ளன. அவற்றை இனங்காண வேண்டும். முன்னர் இந்த இணைப்புகளை தானியங்கிகளே செய்தன. இப்போது கட்டுரைகளை எழுதுபவர்களோ அல்லது வேறு யாரேனுமோ அவற்றை விக்கிதரவில் சென்று இணைக்க வேண்டி உள்ளது. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பவர்கள் தலைப்பின் பொருத்தமான ஆங்கிலச் சொல்லை கட்டுரையின் ஆரம்பத்தில் தரவேண்டும். இவ்வாறு செய்வதனால், ஆங்கிலச் சொல்லில் தேடினாலும் கட்டுரை தேடுபொறியில் அகப்படும். உதாரணமாக, இன்று ஆரம்பிக்கப்பட்ட அரை-திறந்த செங்குத்து வரிசை என்ற கட்டுரைக்கு இணைப்பும் தரப்படவில்லை, அதன் ஆங்கிலச் சொல்லும் தரப்படவில்லை. இதற்கு இணைப்பு வழங்குவதற்குப் பெரும் சிரமப்பட வேண்டியுள்ளது.--Kanags \உரையாடுக 11:34, 10 திசம்பர் 2014 (UTC)
- என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன் Kanags, மொழிபெயர்க்கையில் உடன் ஆங்கிலச்சொல்லை தட்டச்சிட முடியவில்லை, இனிக் கவனமாக இருப்பேன். :( :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:51, 13 திசம்பர் 2014 (UTC)
- அதில் ஒன்றும் இல்லை -ஆதவன். தமிழ்த் தலைப்பு நேரடி மொழிபெயர்ப்பில்லாததால் தேட வேண்டியிருந்தது.--Kanags \உரையாடுக 09:56, 13 திசம்பர் 2014 (UTC)
- என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன் Kanags, மொழிபெயர்க்கையில் உடன் ஆங்கிலச்சொல்லை தட்டச்சிட முடியவில்லை, இனிக் கவனமாக இருப்பேன். :( :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:51, 13 திசம்பர் 2014 (UTC)
- நேரடி மொழிபெயர்ப்புக்களில் உள்ள சிக்கல்களால் நான் மொழிபெயர்ப்பதில்லை. உதவ வேண்டுகின்றேன். நன்றி கனக்ஸ்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:02, 13 திசம்பர் 2014 (UTC)
மத்திகிரி பக்கம் குறித்து
வணக்கம் மத்திகிரி என்ற பேரூராட்சியை பற்றிய பக்கம் உள்ளது இந்த மத்திகிரி பேரூராட்சி ஓசூர் நகராட்சியுடன் 2011 இல் இணைக்கப் பட்டுவிட்டது. தற்போது நடப்பில் மத்திகிரி பேரூராட்சி இல்லை. இந்த கட்டுரையை என்ன செய்வது. நீக்குவதா அல்லது திருத்துவதா நீக்குவதாயின் எவ்வாறு--arulghsr
- நீக்க வேண்டாம். திருத்தி எழுதப்பட வேண்டும். ஆங்கில விக்கிக் கட்டுரை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி இங்கும் திருத்தலாம். இது பற்றி உரையாட கட்டுரையின் உரையாடல் பக்கத்தைப் பயன்படுத்துவதே சிறந்தது. உரையாடல்களில் உங்கள் கையொப்பத்தை நாள், நேரத்துடன் இடுவதற்கு ~~~~ எனத் தட்டுங்கள்.--Kanags \உரையாடுக 08:35, 13 திசம்பர் 2014 (UTC)
விக்கித்தரவுகள்
வணக்கம், நீங்கள் புதிதாக உருவாக்கும் கட்டுரைகளுக்கு (இருந்தால்) பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன் இணைப்பினை ஏற்படுத்திவிடுங்கள். பார்க்க விக்கித்தரவுகள். நன்றி. --AntonTalk 16:21, 17 திசம்பர் 2014 (UTC)
ஆரம்பம், வாழ்த்துக்கள்
- காட்டுரைகளை, //வேப்பனபள்ளி அல்லது வேப்பனஹள்ளி இது கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராகும் // , என எழுதாமல் வேப்பனபள்ளி அல்லது வேப்பனஹள்ளி என்பது கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராகும். அல்லது வேப்பனபள்ளி அல்லது வேப்பனஹள்ளி, கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராகும். என எழுதுங்கள். மற்றும் கட்டுரைகளைத் தொடங்க முதல் முடித்தற்குறிகள், எழுத்துப்பிழைகளை பார்த்து திருத்தி விடுங்கள். விக்கியில் துப்பரவு வேலைகளைக் குறைக்கும். நன்றி
- தங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை, தொடர்ந்தும் பங்களியுங்கள். கோட்டைகள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கும் போது சில கட்டுரைகளை ஊர்கள், மாவட்டங்களோடு சேர்த்து எழுதியிருக்கிறீர்கள். அவற்றிலும் திருத்தம் தேவை. எ. கா- கிருட்டிணகிரி மாவட்ட கட்டுரையில் கிருட்டினகிரிக் கோட்டை பற்றிக் கட்டுரை எழுதும் போது நேரடியாக, இது ஒரு மலைக் கோட்டையாகும் போன்று எழுதாதீர்கள். மாறாக கிருட்டினகிரியின் மத்தியில் ஒரு மலைக் கோட்டை அமைந்துள்ளது எழுதுங்கள். அல்லது அதை தனிக்கட்டுரையாக்கி கிருட்டினகிரிக் கோட்டை எனும் கட்டுரையை எழுதுங்கள். நான் குறிப்பிட்டவை எடுத்துக்காட்டுக்களே. வேறு உதவி வேண்டும் எனில் கேளுங்கள். தங்களது அருமைப் பங்களிப்பை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:06, 25 திசம்பர் 2014 (UTC)
- நன்றி ♥ ஆதவன் ♥ தங்ளது கருத்துகளைக்கும், ஆலோசனைகளுக்கும் தங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன் .--User:arulghsr61.3.200.153 05:34, 25 திசம்பர் 2014 (UTC)
- மிக்கநன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:24, 25 திசம்பர் 2014 (UTC)
மீன்கள் பற்றி கட்டுரைகள்
நீங்கள் உருவாக்கியுள்ள மீன்கள் பற்றி கட்டுரைகளில் பின்வரும் விடயங்களை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ஆங்கில விக்கி கட்டுரைகளுக்கும் இவற்றுக்குமிடையில் தரவு வித்தியாசங்கள் உள்ளன. எ.கா: ரோகு மீன்
- கட்டுரைகள் எல்லாவற்றிலும் "இனப்பெருக்கக் காலம்" என்பது ஒன்றாகவே உள்ளது. இவற்றிற்கு சான்று சேருங்கள்.
- தகவற்பெட்டிகளில் ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழ்ப்படுத்திவிடுங்கள்.
- உசாத்துணை/மேற்கோள் இணைக்கப்பட வேண்டும். காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை என்பது போதுமானதாக இல்லை. ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் உசாத்துணை இணைக்கப்பட்டுள்ள முறையினைப் பாருங்கள். எ.கா: en:Grass carp
--AntonTalk 06:34, 26 திசம்பர் 2014 (UTC)
- கட்டுரைகளில் ஒரே தன்மையான தகவல்களைக் கொண்டுள்ளனவே. ஏன்? எ.கா: இவை அதிகப் பட்சம் 3 அடி நீளமும், 30 கிலோ எடையளவும் வளரும் என்பது அணைத்துக் கட்டுரைகளிலும் உள்ளனவே. --AntonTalk 06:42, 26 திசம்பர் 2014 (UTC)
மீன்கள் பற்றி கட்டுரைகள், விளக்கம்
அன்புள்ள AntanO கெண்டை இன மீன்களின் இனப்பெருக்கக் காலம் ஒரே காலமாகத்தான் இருக்கும். தமிழக கடலில் ஆயிரக்கணக்கான இன மீன்கள் உள்ளன ஆனால் மீன்களின் இனப்பெருக்க காலம் என மூன்று மாதங்களை வரையறுத்து குறிப்பிட்ட 3 மாதங்கள் மீன்பிடி தடைவிதிப்பதை இதனுடன் ஒப்பு நோக்கலாம்
இவை அதிகப் பட்சம் 3 அடி நீளமும், 30 கிலோ எடையளவும் வளரும் என்பது இரண்டு கட்டுரைகளில் மட்டும் உள்ளது. தவறுதலாக மற்றொரு கட்டுரையில் இடம்பெற்றதை நீக்கிவிட்டேன் arulghsrArulghsr (பேச்சு) 11:15, 26 திசம்பர் 2014 (UTC)
- விருப்பம் --AntonTalk 15:12, 26 திசம்பர் 2014 (UTC)
வேண்டுகோள்...
வணக்கம்! நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உடனடியாக மேற்கோள்களை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:39, 30 திசம்பர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
வணக்கம் Arularasan. G!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
- இம்மாதம் சிறப்பான பங்களிப்பைத் தந்தமைக்கு நன்றி :) --இரவி (பேச்சு) 02:11, 30 சனவரி 2015 (UTC)
வேண்டுகோள்....
இந்த மாற்றத்தை கவனித்து தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்குக. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:02, 30 திசம்பர் 2014 (UTC)
அன்புடையீர் 'இரசினி கோத்தாரி' என்னும் என் கட்டுரையில் 'பன்முகம்' என்பதை 'பண்முகம்' என்று மாற்றியிருக்கிறீர்கள். பல+முகம்= பன்முகம் என்பதே சரி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ``செம்மல்50 22-01-2015
பண்டமாற்று
வணக்கம் Arulghsr. தாங்கள் ஆரம்பித்த பண்டமாற்று தொடர்பான கட்டுரை இன்னொன்று பண்ட மாற்று த. வி.யில் உள்ளது. இரண்டையும் இணக்கப் பரிந்துரைக்கின்றேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:44, 27 சனவரி 2015 (UTC)
கட்டுரைகள்
நீங்கள் எழுதும் கட்டுரைகள் குறைந்தது 3 வசனங்களுடன் போதிய உள்ளடக்கம் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் நீக்கப்படுதலுக்கான வாய்ப்புக்கள் உள்ளன. போதிய தகவல்களைத் திரட்டி, பின்னர் கட்டுரையாகத் தொகுப்பது நன்று. நன்றி. --Natkeeran (பேச்சு) 14:40, 30 சனவரி 2015 (UTC)
250 தொகுப்புகள் மைல்கல்
வணக்கம், Arularasan. G!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 12:57, 31 சனவரி 2015 (UTC)
அன்புள்ள இரவி தாங்கள் கொடுத்த ஊக்கத்துக்கு நன்றி அனபுள்ள arulghsrArulghsr (பேச்சு)Arulghsr (பேச்சு) 13:11, 31 சனவரி 2015 (UTC)
பகுப்பு பெயர் மாற்றம்
வணக்கம், பகுப்புகளின் தலைப்புகளை கட்டுரைகளின் தலைப்பு மாற்றுவது போல மாற்ற முடியாது. புதிய பகுப்பை ஆரம்பித்து, பழைய பகுப்பில் உள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக இடம் மாற்றிய பின்னர் பழைய தலைப்பை நீக்க வேண்டும். வழிமாற்றும் வைத்திருக்கக் கூடாது.--Kanags \உரையாடுக 20:14, 10 பெப்ரவரி 2015 (UTC)
அன்புள்ள Kanags தாங்கள் சொன்ன கருத்தை இனி கவணத்தில்வைக்கிறேன். இதற்கு முன் இவ்வாறு புதிய பகுப்பை ஆரம்பித்து, பழைய பகுப்பில் உள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக இடம் மாற்றியுள்ளேன். ஆனால் பழைய தலைப்பை நீக்க்கத் தெரியாதலால் அந்த பழைய தலைப்பு காலியாக அப்படியே உள்ளது அதை எவ்வாறு நீக்குவது. User:arulghsr117.217.242.255 04:18, 11 பெப்ரவரி 2015 (UTC)
- நீக்க வேண்டிய பகுப்பு அல்லது கட்டுரையில் delete வார்ப்புருவை சேர்த்து விடுங்கள். நிருவாகிகள் கவனித்துக் கொள்வார்கள்.--Kanags \உரையாடுக 08:24, 11 பெப்ரவரி 2015 (UTC)
புதிய பகுப்புகள்
ஒரு பகுப்பில் நிறைய கட்டுரைகள் வருமாறு இருக்கும் போது மட்டும் (அல்லது வருங்காலத்தில் இதே பகுப்பில் நிறைய கட்டுரைகள் எழுதப்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் போது மட்டும்) புதிய பகுப்புகளை உருவாக்க வேண்டுகிறேன். ஒரு பகுப்புக்கு ஒன்றிரண்டு கட்டுரைகள் என்று இருப்பதால் பெரிய பயனில்லை. துப்புரவுப் பணியின் சுமையையும் கூட்டக்கூடும்.--இரவி (பேச்சு) 08:34, 25 பெப்ரவரி 2015 (UTC)
- அன்புள்ள இரவி அவர்களே வருங்காலத்தில் இதே பகுப்பில் நிறைய கட்டுரைகள் எழுதப்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதாலே பகுப்புகளை உருவாக்கினேன் தேவை இல்லை எனில் இனி உருவாக்கவில்லை User:arulghsrArulghsr (பேச்சு) 08:59, 25 பெப்ரவரி 2015 (UTC)
- இத்தனை ஆண்டுகள் தமிழ் விக்கிப்பீடியாவைக் கவனித்து வரும் அனுபவத்தில் கூறுகிறேன். தவறாக இருந்தால் மற்றவர்கள் கருத்தை வரவேற்கிறேன். பிற மாநில மாவட்டங்கள் தொடர்பான நிறைய கட்டுரைகள் உடனடியாக எழுதப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. எனவே, இவ்வாறான பகுப்புகளைத் தவிர்க்கவும். மராட்டிய மாவட்டங்கள், தெலுங்கானா மாவட்டங்கள் என்பது போன்ற பெரும் பகுப்புகளை உருவாக்கி அவற்றின் கீழ் அனைத்து மாவட்டங்கள் தொடர்பான கட்டுரைகளையும் காட்டலாம். ஒரு மாவட்டத்துக்கு ஒரு கட்டுரை மட்டும் உள்ள பகுப்புகள் வேண்டாம். நன்றி. --இரவி (பேச்சு) 09:20, 25 பெப்ரவரி 2015 (UTC)
உங்கள் கவனத்திற்கு
பேச்சு:கே. வி. பீட்டர் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 14:16, 2 மார்ச் 2015 (UTC)
மைசூர் அரசர்கள்
தற்போது மைசூர் உடையார் மரபின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளயதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் பெயரை யாராவது மைசூர் அரசர்கள் வாற்புருவில் சேர்த்து உதவுங்கள் எப்படி சேர்பது என்று எனக்குத் தெரியவில்லை.வார்ப்புரு:ArulghsrArulghsr (பேச்சு) 12:39, 8 மார்ச் 2015 (UTC)
ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 13:46, 8 மார்ச் 2015 (UTC)
பயனர் பெயர்மாற்றவேண்டி உதவி கோரிக்கை
அன்புள்ள Kanags அவர்களே எனது பயனர் பெயரை Arularasan என்று மாற்ற விரும்புகிறேன். மாற்ற இயலுமா உதவுங்கள் ArulghsrArulghsr (பேச்சு) 15:00, 17 மார்ச் 2015 (UTC)
கவனத்திற்க்கு
நீங்கள் எழுதியுள்ள கட்டுரை சிறீவில்லிப்புத்தூர் மலை அணில் காட்டுயிர் உய்விடம், என்பது ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் தமிழ் விக்கியில் உள்ளது. முடிந்தால் அழித்துவிடவும்.--Muthuppandy pandian (பேச்சு) 11:00, 21 மார்ச் 2015 (UTC)
- பேச்சு:கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் பார்க்கவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:23, 22 மார்ச் 2015 (UTC)
வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் கட்டுரையைத் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:42, 5 ஏப்ரல் 2015 (UTC)
கட்டுரை இணைக்க கோரிக்கை
வணக்கம் நண்பரே, பேச்சு:திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பகுதியில் இக்கட்டுரையை திருமலை கட்டுரையுடன் இணைக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதன் உள்ளடக்கம் கோயிலைப் பற்றியது. நீங்கள் குறிப்பிடும் திருமலை கட்டுரை ஊரைப் பற்றியது. இரு உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகளை இணைக்க கோரியுள்ளீர்கள். அதனை விரிவாக தெரிவித்தால் இணைக்க ஏதுவாக இருக்கும். உடன் அக்கோரிக்கையில் கையெழுத்தினை இடவில்லை. நீங்கள் பேச்சுப் பக்கத்தில் கருத்தினைக் குறிப்பிட்டவுடன், கையெழுத்தினை இடுவது விக்கியில் யார் கருத்தினைத் தெரிவிக்கின்றாகள் என்பதை அறிய உதவும். விக்கிப்பீடியா:கையெழுத்து கட்டுரையை காண்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:28, 8 ஏப்ரல் 2015 (UTC)
உங்கள் பார்வைக்கு
பேச்சு:நீல துர்கம் இங்கு உங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:00, 8 ஏப்ரல் 2015 (UTC)
ஐயம்...
வணக்கம்! தாங்கள் அண்மையில் எழுதும் கட்டுரைகளில் திருக்கோயில் தரங்களின் மருத்துவப் பயன்கள் எனும் நூலினை மேற்கோளாக சுட்டுகிறீர்கள். தரங்களின் எனும் சொல் உணர்த்தும் பொருள் என்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:20, 16 ஏப்ரல் 2015 (UTC)
மரங்களின் எனத் திருத்தியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:37, 16 ஏப்ரல் 2015 (UTC)
வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நான்தான் தங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கவேண்டும் நன்றி (பேச்சு) Arulghsr (பேச்சு) 10:06, 16 ஏப்ரல் 2015 (UTC)
- விருப்பம் மிகச் சிறிய பிழைகளையும் கண்டறிந்து செயல்படும் செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு நன்றிகள்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:47, 16 ஏப்ரல் 2015 (UTC)
பொதுத் தன்மை
நீங்கள் உருவாக்கும் மரங்கள் கற்றிய கட்டுரைகளில் பொதுத் தன்மையும், வரையறுக்கப்பட்ட தன்மையும் காணப்படுகின்றது. எ.கா: கடுக்காய் - தமிழக மலைக்காடுகளில் தன்னிச்சையாய் வளரும் மரவகையாகும். ஆனால் அது ஆ.வி. native to southern Asia from India and Nepal east to southwestern China (Yunnan), and south to Sri Lanka, Malaysia and Vietnam என உசாத்துணையுடன் குறிப்பிடுகிறது. மேலும் நீங்கள் அளித்துள்ள www.shaivam.org எனும் வலைத்தளம், திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள் நூல்கள் என்பனவற்றை முக்கிய சான்றாகக் கொள்ள முடியாது. மரங்கள் பற்றிய ஆய்வு செய்த வலைத்தளங்கள், நூல்கள் என்பனவே சிறந்த சான்றாகும். நீங்கள் கொடுத்துள்ள சான்றுகள் கேள்விக்குட்டுத்தப்படக் கூடியன என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள். நன்றி. --AntanO 16:44, 17 ஏப்ரல் 2015 (UTC)
உங்கள் கவனத்திற்கு
இணையத்தளங்கள், புத்தகங்கள் போன்றவற்றிலிருந்து தகவல்களை அப்படியே படியெடுத்து இங்கு பயன்படுத்தாதீர்கள். இது பற்றி உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் அவ்வாறு நிகழாது பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது பதிப்புரிமை மீறலாகும் (en:Wikipedia:Copyright violations, இதையும் பார்க்க: en:Wikipedia:Close paraphrasing). உசாத்துணை, மேற்கோள் போன்றன மெய்யறிதன்மையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட மூலங்களில் இருந்தே சுட்டிக்காட்டப்பட வேண்டும். வலைப்பூக்கள், நம்பமற்ற மூலங்கள் என்பன கட்டுரைகளில் இருந்து நீக்கப்படும். மேலும், தலமரமாக x உள்ளது என்ற வரிகள், குறித்த வலைத்தள முகவரியுடன் பல கட்டுரைகளில் ஒரே மாதிரியாக இடம்பெறுகின்றது. இதுபற்றி முன்பும் அறியத் தந்திருந்தேன். en:Wikipedia:Conflict of interest என்பதைப் பாருங்கள். கட்டுரை உருவாக்கத்தின்போது இவ்வாறான விருப்பு முரண் எழாதவாறு இருப்பது முக்கியம். நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு சிறப்பான முறையில் பங்களிக்கின்றீர்கள். இதுபோன்ற கருத்துக்கள் உங்களுக்கு பயன்படும் எனக் கருதுகிறேன். தெளிவு தேவையென்றால் குறிப்பிடுங்கள். பதிப்புரிமை மீறல், விருப்பு முரண் என்பனை தடையை ஏற்படுத்தி விடுபவை என்பதால் இவை பற்றி உங்களுக்கு அறியத்தந்துள்ளேன். நன்றி. --AntanO 18:58, 21 ஏப்ரல் 2015 (UTC)
அன்புள்ள AntanO இனிமேல் இவ்விசயத்தில் கவணமாக இருக்கின்றேன் நன்றி ArulghsrArulghsr (பேச்சு) 04:14, 23 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)
வேண்டுகோள்...
வணக்கம். புதிய கட்டுரைகளை எழுதியபிறகு, ஒருமுறை முழுவதுமாக படித்து, எழுத்துப் பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:09, 7 மே 2015 (UTC)
உதவி கோரிக்கை
அன்புள்ள AntanO வழிமாற்றுகளை உருவாக்குவது எவ்வாறு என சொல்ல இயலுமா (பேச்சு)Arulghsr (பேச்சு) 04:00, 8 சூன் 2015 (UTC)
உங்கள் பார்வைக்கு
நீங்கள் அண்மையில் உருவாக்கியுள்ள ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த ஊர்களுக்கான கட்டுரைகளில் மேற்கோளாக இணைக்கப்பட்டுள்ள மக்கட்தொகை-2001க்கான இணையப் பக்கம் செயலில்லை. எனவே அதனை நீக்கிவிட்டு மக்கட்தொகைக்கான சரியான இணைப்பை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:38, 26 சூன் 2015 (UTC)
உதவி
கொல்லப்பள்ளி கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரை en:Collapalli. ஆங்கில விக்கியில் en:Gollapalle என்று மற்றொரு கட்டுரையும் உள்ளது. இரண்டும் ஒரே ஊரைக் குறிக்கின்றனவா இல்லை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு ஊர்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. எனது இந்தக் குழப்பத்தைத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 06:05, 28 சூன் 2015 (UTC)
Booradleyp1 கொல்லப்பள்ளி என்ற பெயரில் உத்தனப்பள்ளி ஊராட்சியைச்சேர்ந்த ஊர் உள்ளது இவ்வூரின் உச்சரிப்பு Gollapalle என்றேவரும். எனவே கொல்லப்பள்ளி ஊருக்கு கொடுக்கப்பட்ட ஆங்கில இணைப்பை en:Collapalli. க்கு பதில் en:Gollapalle மாற்றிவிடுவது உத்தமம் எனக் கருதுகிறேன். அவ்வாறு செய்ய இயலுமா கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கொல்லப்பள்ளி என்ற பெயரில் ஊர் உள்ளதாக படித்துள்ளேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு கொல்லப்பள்ளிகளும் ஆங்கில விக்கியில் ஒசூர் வட்டத்திலேயே உள்ளதான உள்ளது.arulghsrArulghsr (பேச்சு) 09:40, 29 சூன் 2015 (UTC)
ஆங்கில விக்கியிலும் தவறுகள் இருக்கலாம் அருளரசன். தமிழ்நாடு அரசு இணையதளத்திலும் Gollapalle என்றுதான் உள்ளது. நீங்களும் அந்த மாவட்டத்தை அறிந்திருப்பதால் Gollapalle க்கே இணைப்பை மாற்றிவிடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 12:39, 29 சூன் 2015 (UTC)
உதவி தேவை
Booradleyp1 en:Collapalli.யில் இருந்து en:Gollapalle க்கு இணைப்பை மாற்றிவிடுவது எப்படி என எனக்குத் தெரியாது எப்படி எனக்கூறினால் மாற்றிவிடுகிறேன்அருளரசன்Arulghsr (பேச்சு) 13:16, 29 சூன் 2015 (UTC)
நான் மாற்றியிருக்கிறேன்.
இணைப்பை மாற்ற:
- மற்ற மொழிகளில்-இதன் கீழுள்ள ”இணைப்புக்களைத் தொகு” அழுத்தினால் விக்கித்தரவுகள் பக்கம் திறக்கும். அங்கு ஏற்கனவேயுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரையை நீக்கிவிட்டு அப்பக்கத்தை சேமிக்கவும்
- இப்பொழுது தமிழ்க் கட்டுரையில் ஆங்கில இணைப்பு இல்லாமல் இருக்கும்.
- பின் எப்பொழுதும் இணைப்பது போல தேவையான ஆ.வி கட்டுரையை இணைத்துக் கொள்ளலாம்.--Booradleyp1 (பேச்சு) 14:40, 29 சூன் 2015 (UTC)
Booradleyp1 மிக்க நன்றி அருளரசன்Arulghsr (பேச்சு) 14:44, 29 சூன் 2015 (UTC)
ஒருவரிக் கட்டுரை
தாங்கள் தொடங்குகின்ற சிற்றூர்கள் குறித்த ஒருவரிக் கட்டுரைகளைக் குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்கும்படி மேம்படுத்த வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருவரிக் கட்டுரைகள் வரவேற்கப்படுவதில்லை. --மதனாகரன் (பேச்சு) 13:48, 7 சூலை 2015 (UTC)
மதனாகரன் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்களைப்பற்றி ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரைகளை அதில் உள்ள உள்ளடக்கங்களோடு தமிழ்படுத்தி வருகிறேன். இனி பெரிய கட்டுரைகளைமட்டும் தமிழ்படுத்துகிறேன் arulghsrArulghsr (பேச்சு) 14:41, 7 சூலை 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
வணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--Kanags \உரையாடுக 12:20, 8 சூலை 2015 (UTC)
பதக்கம்
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
நந்தகுமார் (பேச்சு) 05:55, 25 சூலை 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நந்தகுமார் அவர்களே பதக்கம் வழங்கியமைக்கு நன்றி அருளரசன்Arulghsr (பேச்சு) 09:06, 25 சூலை 2015 (UTC)
- விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:36, 25 சூலை 2015 (UTC)
உளங்கனிந்த நன்றி!
வணக்கம்!
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 25 சூலை 2015 (UTC)
கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்
தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்
--Natkeeran (பேச்சு) 13:05, 29 சூலை 2015 (UTC)
பகுப்புகள் உருவாக்குதல்
வணக்கம், புதிய பகுப்புகள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியவை:
- புதிய பகுப்பு குறைந்தது ஒரு தாய்ப் பகுப்புக்குள்ளாவது (கட்டாயமாக) இணைக்கப்பட வேண்டும். உ+ம்: [1].
- உருவாக்கும் புதிய பகுப்புக்கு இணையான ஆங்கில மொழி விக்கிப் பகுப்பு இருந்தால், அதற்கும் (விக்கித்தரவின் மூலம்) இணைப்புக் கொடுங்கள்.
நன்றி.--Kanags \உரையாடுக 23:28, 31 சூலை 2015 (UTC)
சிறு குறிப்பு
பறவைகள் குறித்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் தகவற்பெட்டியில் \\படிமம்:Status IUCN3.1 NT-ta.svg\\ என்பது சிவப்பு இணைப்பாக வருவதைத் தவிர்ப்பதற்கு,
கட்டுரையின் தொகுக்கும் பக்கத்தில் தகவற்பெட்டியில் இருக்கும் \\ |status_system = IUCN3.1 \\ வரியில் உள்ள IUCN3.1 ஐ iucn3.1 என மாற்றிவிட்டு சேமித்தால் சரியான படிமம் தோன்றுகிறது. இதன் பின்னால் உள்ள தொழில்நுட்பச் சிக்கல் குறித்து எனக்குத் தெரியவில்லை. நிர்வாகிகள் எவரேனும் சரிசெய்யும்வரை நான் தந்துள்ள குறிப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:57, 2 ஆகத்து 2015 (UTC)
- @Booradleyp: விக்கித்திட்டங்களில் தலைப்புகள் பேரெழுத்து, சிற்றெழுத்து வேறுபாடுகளுக்கு உணர்திறன் (Case Sensitive) மிக்கவை. iucn என்றே கட்டாயம் எழுத வேண்டும். en:AbduL Kalam என்று எழுதினால் en:Abdul Kalam என்ற பக்கத்திற்குச் செல்ல முடியாது. --மதனாகரன் (பேச்சு) 15:58, 2 ஆகத்து 2015 (UTC)
- @மதனாஹரன்: ஆனால் அந்த தகவற்பெட்டியில் IUCN3.1 என்றுதான் உள்ளது. என் போன்ற சாதாரணப் பயனர்கள் ஆங்கில விக்கியிலிருந்து அப்படியே படியெடுத்து ஒட்டி மொழி பெயர்க்கும்போது படிமம் அறுபட்டக் கோப்புகளாகத் தோன்றுகிறது. இச்சிக்கலைச் சரிசெய்வதற்கு, சிறிய எழுத்துக்களாக மாற்றப்பட வேண்டும் என எவ்வாறு எல்லோரும் இனங்காண முடியும்? சோடாபாட்டில் சமீபத்தில் தொடங்கியிருந்த பறவைகள் கட்டுரைகளில் அப்படிமச் சிக்கல் இல்லாமல் இருந்ததன் மூலம் இவ்வாறு இதனைச் சிறிய எழுத்துக்களுக்கு மாற்ற வேண்டுமெனத் தெரிந்து கொண்டேன். ஆனால் இச்சிக்கல் அந்தத் தகவற்பெட்டியின் அமைப்புகளின் அடிப்படையில் சரிசெய்யப்படுதல் நல்லது. சிக்கல் குறித்து என்னால் உங்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்த முடிந்ததா எனத் தெரியவில்லை. முடிந்த வரை முயற்சித்திருக்கிறேன். உங்களால் முடிந்தால் தகவற்பெட்டியைச் சரிபண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:25, 2 ஆகத்து 2015 (UTC)
- @@மதனாஹரன்: @Booradleyp1:, இது தகவற்பெட்டியில் உள்ள பிழை இல்லை. இனங்களின் நிலை பற்றிய தமிழ்ப் படிமங்கள் காமன்சில் /Status iucn3.1 NT-ta.svg/ என்ற முறையில் தான் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் /Status IUCN3.1 NT.svg/ எனும் வகையில் பதிவேற்றத்தில் உள்ளது. இச்சிக்கலை தகவற்பெட்டியின் அடிப்படையில் சரி செய்யமுடியாது. தகவற்பெட்டி நீங்கள் கட்டுரையில் IUCN3.1 என உள்ளிட்டால் வார்ப்புரு வெளியில் படிமம்:Status {இங்கு அதை உள்ளிட்டு} NT-ta.svg வெளிப்படுத்தும். ஆகவே காமன்சில் படிமங்களை IUCN3.1 என்பதற்கு நகர்த்த வேண்டும். இந்தப் பிரச்சினையை நாளை வேகமான இணைப்பை பெற்றவுடன் சரிசெய்ய முயல்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:48, 31 ஆகத்து 2015 (UTC)
- தற்போது IUCNx.x அல்லது iucnx.x என்றிருந்தாலும் வேலை செய்யுமாறு வார்ப்புரு இற்றைப்படுத்தப்பட்டது. இதில் வேறு சிக்கல் இருந்தால் குறிப்பிடுங்கள். CC: @Booradleyp1:, @மதனாஹரன்: --AntanO 18:49, 24 செப்டம்பர் 2015 (UTC)
பதக்கம்
சிறப்புப் பதக்கம் | ||
பறவைகள் பற்றிய கட்டுரைகளை தமிழில் உருவாக்கி வருவதை பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:06, 20 ஆகத்து 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
தினேஷ்குமார் பொன்னுசாமி பதக்கம் வழங்கியமைக்கு நன்றி arulghsrArulghsr (பேச்சு) 03:47, 21 ஆகத்து 2015 (UTC)
இடைவெளிகள்
தொடர் பங்களிப்புக்கு முதலில் எனது நன்றிகள் :) , கட்டுரைகளில் தேவையற்ற வகையில் பந்திகளுக்கு இடையில் இடைவெளி விடத்தேவையில்லை. மேலும் குறியீடுகளுக்கு முன் இடைவெளி தேவையில்லை ஆனால் குறியீடுகளின் பின் ஒரு இடைவெளி விடவேண்டும். இத்தொகுப்பை பார்க்க நன்றி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:39, 31 ஆகத்து 2015 (UTC)
பக்க இணைப்பு
பக்கங்களை இணைக்க விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் என்பதன்படி இணையுங்கள். தேவையென்றால் அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள் --AntanO 06:14, 12 செப்டம்பர் 2015 (UTC)
விளக்கம்
Antan தாங்கள் எதைக்குறித்து எழுதி இருக்கிறீர்கள் என விளங்கவில்லை பக்க இணைப்புகள் குறித்து பேச்சுப்பக்கத்தில் தான் தெரிவித்து வருகிறேன் எந்த பக்கத்தையும் நான் இதுவரை இணைத்ததில்லைarulghsrArulghsr (பேச்சு) 09:02, 12 செப்டம்பர் 2015 (UTC)
- உதாரணம்: தமிழ் எனும் கட்டுரையை தமிழர் எனும் கட்டுரையுடன் இணைக்க விரும்பினால் 'தமிழ்' என்னும் பக்கதை தொகுத்து {{mergeto|தமிழர்}} என்று வார்ப்புரு இடவும். இணைக்கும் வேளையை நிருவாகி ஒருவார் செய்துவிடுவார். பேச்சுப்பக்கத்தில் தெரிவித்தால் இணைப்புக் கோரிக்கை கவனிக்காது விடப்படலாம். --AntanO 09:12, 12 செப்டம்பர் 2015 (UTC)
Antan இனி தாங்கள் கூறியபடியே இணைக்கவேண்டிய கட்டுரையில் வாற்புருவை இடுகிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 10:02, 12 செப்டம்பர் 2015 (UTC)
தலையூர் காளிங்கரையர்
தலையூர் காளிங்கரையர் என்னும் எனது கட்டுரையை ஏன் மாற்றினீர்கள். இக்கதையின் நாயகனது உன்மையான பெயரை ஆராய்ந்து கொடுக்கப்பட்டது. வெறும் தலையூர் காளி என்பது மக்களால் அழைக்கப்படுவது.தலையூர் காளிங்கரையர் என்பதே முழுமையான பெயர் எனவே தலையூர் காளி கட்டுரையை தலையூர் காளிங்கரையர் என்னும் பக்கத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிரேன். நன்றி
- அவர் மாற்றவில்லை. கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. தேவையான மாற்றம் குறித்து கட்டுரை பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். --AntanO 08:55, 12 செப்டம்பர் 2015 (UTC)
ஆனால் கட்டுரையின் தலைவனது உன்மையான பெயரையே தலைப்பாக கொள்ள வேண்டும் அல்லவா. அதுவே கதை நாயகனுக்கு கொடுக்கும் மரியாதையாக நினைக்கிரேன்.எனவே தலையூர் காளி கட்டுரையை தலையூர் காளிங்கரையர் என்னும் பக்கத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிரேன். நன்றி
வேண்டுகோள்...
வணக்கம். புதிய கட்டுரைகளை எழுதியபிறகு, ஒருமுறை முழுவதுமாக படித்து, எழுத்துப் பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:00, 16 செப்டம்பர் 2015 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அருளரசன் என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 11:45, 17 அக்டோபர் 2015 (UTC)
நன்றி
வணக்கம் இரவி முதல் பக்க அறிமுகத்துக்கு கேட்டதற்கு நன்றி. ஓரிரு நாட்களில் குறிப்பை தருகிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 12:27, 17 அக்டோபர் 2015 (UTC)
- அறிமுகத்துக்கு நன்றி. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளோம். திசம்பர் மாதம் உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 09:28, 25 அக்டோபர் 2015 (UTC)
உரை நடை
இந்த திருத்தத்ததைக் கவனியுங்கள். தகவற்பெட்டி வடிவச் சீர், பிழையான உள்ளிணைப்பு நீக்கம்/திருத்தம், ஆங்கில ஒலிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் (போலார் கரடிகளை, துருவக் கரடிகளை), தேவையற்ற இடைவெளி நீக்கம்/தேவையான இடைவெளி, கிரந்தத்திற்குப் பதில் தமிழ் ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளிலும் வேண்டிய திருத்தங்கள் செய்வது விக்கிக்கு ஏற்ற கட்டுரையாக்கத்திற்கு உதவும். நன்றி. --AntanO 02:23, 6 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம், 2015
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
- இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
ஆசிய மாதம் - முதல் வாரம்
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
- இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
- இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி
வணக்கம். மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி அளித்து வருகிறோம். இதில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் நாளை கலந்து கொண்டு பயிற்சி அளிக்க முடியுமா? இயலும் எனில், மற்ற விவரங்களை அறியத்தருகிறேன். என் தொடர்பு எண் 9986 99 3336.--இரவி (பேச்சு) 06:56, 18 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
வணக்கம்!
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)
முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்
வணக்கம் அருளரசன். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து வழமை போல் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். நன்றி. --இரவி (பேச்சு) 19:32, 1 திசம்பர் 2015 (UTC)
முதற்பக்க அறிமுகம் தர இருப்பதற்கு இரவிக்கு நன்றி- அருளரசன்117.241.78.251 04:28, 2 திசம்பர் 2015 (UTC)
- உங்களது முதற்பக்க அறிமுகம் பார்த்தேன். வாழ்த்துகள்--Booradleyp1 (பேச்சு) 05:33, 2 திசம்பர் 2015 (UTC)
- நல்வரவு, உங்களது முதற்பக்க அறிமுகம் அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள். -- பா.ஜம்புலிங்கம்(பேச்சு) 02:07, 5 திசம்பர் 2015 (UTC)
வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி Booradleyp1, பா.ஜம்புலிங்கம் அன்பன் அருளரசன்Arulghsr (பேச்சு) 03:48, 5 திசம்பர் 2015 (UTC)
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் | |
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC) |
தற்காவல்
வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 03:25, 5 சனவரி 2016 (UTC)
விருப்பம் அருள் உருவாக்கும் பல்வேறு கட்டுரைகளை ரோந்திடவேண்டிய தேவை இருந்தது. தற்போது அந்த சிரமம் நமக்கில்லை நன்றி அன்ரன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:30, 5 சனவரி 2016 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:40, 5 சனவரி 2016 (UTC)
ஆசிய மாதம் - நிறைவு
வணக்கம்!
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.
குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)
விக்கிமூலம் வருக!
https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்கள் எண்ணங்களை இடுக.--த♥உழவன் (உரை) 15:44, 18 சனவரி 2016 (UTC)
வார்ப்புருக்களை இணைத்தல்
உங்கள் கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள இந்த மாற்ரத்தைக் கவனியுங்கள். குறிப்பாக வார்ப்புருக்களைக் கட்டுரைகளில் எவ்வாறு இணைப்பது என்பது குறித்துக் கவனத்தில் எடுங்கள்.--Kanags \உரையாடுக 07:59, 30 சனவரி 2016 (UTC)
வேண்டுகோள்...
வணக்கம். தற்போது பதவியில் இல்லாத தமிழக அமைச்சர்கள் குறித்த கட்டுரைகளில் பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள் எனும் பகுப்பினை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:15, 31 சனவரி 2016 (UTC)
மேற்கோள்கள்
வெறும் இணையதள முகவரிகளை மேற்கோளாக இடுவதைவிட கூடுதலாகச் சில தரவுகளைத் தந்தால் கட்டுரைகள் சிறப்பாக அமையும். உங்கள் உதவிக்கு: விக்கிப்பீடியா:புரூவ் இட் கருவியைப் பயன்படுத்துங்கள்.--மணியன் (பேச்சு) 05:45, 5 பெப்ரவரி 2016 (UTC)
Address Collection Notice
Hi there, thank you for contributing to Wikipedia Asian Month in November 2015. You are qualified to receive (a) postcard(s) but we did not hear your back in past two months, or it could be an error on Google's server or a mistake. If you still willing to receive one, please use this new surveyto submit your mailing address. The deadline will be March 20th.
--AddisWang (talk) 14:40, 9 March 2016 (UTC)
நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 13:03, 27 மார்ச் 2016 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
நீங்கள் பங்களித்த டிராகன் பழம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 30, 2016 அன்று வெளியானது. |
விக்கிக்கோப்பை
விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:35, 3 ஏப்ரல் 2016 (UTC)
தட்டச்சு
நீங்கள் எந்த தட்டச்சினைப் பயன்படுத்துகிறீர்கள்? இங்கு புரியாத வடிவங்கள் அமைந்து கட்டுரையில் வடிவத்தை மாற்றின (காண்க). கட்டுரையைத் திறந்து நகல் எடுத்து நோட்பேடு இல் ஒட்னால் அவ் வடிவங்களைக் காணலாம். --AntanO 12:57, 21 ஏப்ரல் 2016 (UTC)
AntanO தாங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நான் விக்கிபீடியாவின் மொழிபெயற்பு பக்கத்தில் மொழிபெயர்த்தேன் இப்பக்கத்தில் சில சமயம் இதுபோன்ற புரியாத வடிவங்கள் கூடுதலாக இணைந்துவிடுகின்றன. அவற்றை இவ்வப்போது களைந்து விடுகிறேன் சிலசமயம் என் பார்வையில் இருந்து தப்பிவிடுகின்றன. arulghsrArulghsr (பேச்சு) 13:09, 21 ஏப்ரல் 2016 (UTC)
கவனிக்க
வணக்கம். தில்லியில் உள்ள புராணா கிலா கோட்டைக்கு அசாமில் உள்ள கோட்டைகள் என்ற பகுப்பை இணைத்துள்ளீர்கள். காரணம் அறியலாமா?நன்றி. தற்பொழுது நீக்கியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 15:42, 6 மே 2016 (UTC)
விளக்கம்
--நந்தகுமார் (பேச்சு) புராணா கிலா கோட்டை தில்லி கோட்டைகள் என்ற பகுப்பில்தானே உள்ளது, ஓ நீங்கள் சரிசெய்தீர்களா நான்றி தவறுதலாக நடந்திருக்கலாம்
தங்களின் கவனத்திற்கு...
வணக்கம்! இது போன்ற திருத்தம், வேறு சில கட்டுரைகளிலும் தேவைப்படுகிறது. கவனத்திற் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 30 மே 2016 (UTC)
உதவி...
வணக்கம்! இங்கு உதவ இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 1 சூன் 2016 (UTC)
மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 2 சூன் 2016 (UTC)
பதக்கம்
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
--நந்தகுமார் (பேச்சு) 17:28, 2 சூன் 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |