வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
![]() | |
நிறுவப்பட்டது | 1937 |
---|---|
அமைவிடம் | நேசனல் மால், 3வது மற்றும் 7வது தெருக்களுக்கு இடையில், கான்ஸ்சிடியூட்டன் அவென்யூ NW, வாசிங்டன், டிசி, 20565, நேசனல் மால், வாசிங்டன், டிசி. |
வருனர்களின் எண்ணிக்கை | 4.2 மில்லியன் (2012)[1]
|
இயக்குனர் | இயேல் ஏ. பவுல் III Metrorail Interactive Map |
வலைத்தளம் | www.nga.gov |
வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் (National Gallery of Art ) என்பது ஐக்கிய அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாசிங்டனில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். 1937இல் துவக்கப்பட்ட இவ்வருங்காட்சியகத்தைப் பார்வையாளர்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.
இவ்வருங்காட்சியகம் மேற்குக் கட்டடம், கிழக்குக் கட்டடம் என இரண்டு கட்டடங்களைக் கொண்டு இயங்குகிறது. மேற்குக் கட்டடம் மரபுசார்ந்த முறையிலும் கிழக்குக்கட்டடம் நவீன முறையிலும் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்டடங்களிலும் வாயில்கள் உள்ளன எதில் வேண்டுமானாலும் நுழையலாம் இரு கட்டடங்களையும் இணைக்கும் விதத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது.
கிழக்குக் கட்டடம்[தொகு]
கிழக்குக் கட்டடத்தின் நுழைவாயிலில் ஹென்றிமூரின் மிகப்பெரிய நவீனச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் நவீன மற்றும் சமகால ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஓவியங்கள், கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் சிறப்பு காட்சிக்கூடம் இக்கட்டத்தில்தான் உள்ளது. இக்கட்டடம் வெளிப்புறமட்டுமல்லாது உட்புறமும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்காவின் சமகால ஓவியர்களின் ஓவியங்களும்,சிற்பங்களும், நவீனபாணி ஓவியர்களான பிக்காசோ, மேக்ஸ் பெக்மன் போன்ற புகழ்வாய்ந்த பல கலைஞர்களின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
மேற்குக் கட்டடம்[தொகு]
இக்கட்டடம் தரைத்தளம், முதன்மைத்தளம் என இரு தளங்களைக்கொண்டுள்ளது. முதன்மைத்தளத்தில் 93 அறைகள் உள்ளன. இக்கட்டடத்தில் பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையிலான ஐரோப்பிய, அமெரிக்க ஓவியங்களும்,சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. லியானார்டோ டாவின்சியின், ஜினோவ்ரா தெ பென்சி (Ginevra de Benci) ஓவியம் இங்குதான் உள்ளது.
முதன்மையான தொகுப்புகள்[தொகு]


Rogier van der Weyden, Portrait of a Lady, c. 1460
கியார்கியோன், Adoration of the Shepherds, c. 1500
Raphael, Cowper Madonna, 1504–5
கியார்கியோன் and Titian, Portrait of a Venetian Nobleman, c. 1507
Giovanni Bellini and Titian, The Feast of the Gods, c. 1514
Nicolas Poussin, The Assumption of the Virgin, c. 1626
Rembrandt van Rijn, The Mill, 1648
Johannes Vermeer, A Lady Writing a Letter, 1665-1666
Jean-Honoré Fragonard, A Young Girl Reading, c. 1776
Jean Auguste Dominique Ingres, Marcotte d'Argenteuil, 1810
Eugène Delacroix, Columbus and His Son at La Rábida, 1838
Édouard Manet, The Old Musician, 1862
Édouard Manet, The Plum, 1878
Claude Monet, The Artist's Garden at Vétheuil, 1880
Vincent van Gogh, Self-portrait, August 1889
Paul Gauguin, Self-portrait, 1889
Paul Cézanne, Boy in a Red Waistcoat, 1888–1890
Vincent van Gogh, Woman in White, 1890
Henri Rousseau, The Equatorial Jungle, 1909
தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க தொகுப்புகள்[தொகு]


John Singleton Copley, Watson and the Shark, (original version), 1778
Gilbert Stuart, The Skater, 1782
Edward Savage, The Washington Family 1789-96
Edward Hicks, Peaceable Kingdom, c. 1834
Thomas Cole, The Voyage of Life: Childhood
Thomas Cole, The Voyage of Life: Youth
Thomas Cole, The Voyage of Life: Manhood
Thomas Cole, The Voyage of Life: Old Age
Thomas Cole, A View of the Mountain Pass Called the Notch of the White Mountains (Crawford Notch), 1839
Thomas Eakins, The Biglin Brothers Racing, 1873
Winslow Homer, Breezing Up (A Fair Wind), 1873–76
Frederic Edwin Church, Morning in The Tropics, (1877)
Mary Cassatt, The Loge, 1882
Albert Pinkham Ryder, Siegfried and the Rhine Maidens, 1888-1891
Robert Henri, Snow in New York, 1902
George Bellows, Both Members of This Club 1909
Childe Hassam, Allies Day, May 1917, 1917
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Visitor Figures 2012. Exhibition & museum attendance survey பரணிடப்பட்டது 2015-01-02 at the வந்தவழி இயந்திரம் // The Art Newspaper № 245. — 2013. — April.
- ↑ தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.35
- ↑ "Provenance". Nga.gov. 2009-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-22 அன்று பார்க்கப்பட்டது.