உள்ளடக்கத்துக்குச் செல்

நோட்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோட்பேடு

மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
விண்டோசு ஏழில் நோட்பேடு
Details
வகைஉரைத் தொகுப்பி
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
அனைத்து மைக்ரோசாப்ட் விண்டோசு பதிப்புகளிலும்
விண்டோசு எக்சு. பி.யில் நோட்பேடு

நோட்பேடு அல்லது நோட்பேட் (ஆங்கிலம்: Notepad) என்பது மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்குதளத்துக்கான ஓர் உரைத் தொகுப்பி ஆகும்.[1] 1985இலிருந்து விண்டோஸ் 1.0இலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோசு இயங்குதளத்தின் அனைத்துப் பதிப்புகளிலும் நோட்பேடு இடம்பெற்றிருக்கின்றது.

வசதிகள்

[தொகு]

நோட்பேடு ஒரு பொதுவான உரைத் தொகுப்பி ஆகும். இதில் சேமிக்கப்படும் கோப்புகள் .txt நீட்சியைக் கொண்டிருக்கும்.[2] நோட்பேடு இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளையும் வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழிகளையும் ஆதரிக்கின்றது. நோட்பேடு மென்பொருளின் முன்னைய பதிப்புகளில் உரையைக் கண்டுபிடிப்பது போன்ற அடிப்படையான செயற்பாடுகளையே செய்ய முடிந்தது. ஆனால், புதிய விண்டோஸ் இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நோட்பேடு மென்பொருளில் அதிக வசதிகள் உள்ளன. நோட்பேடு மென்பொருளை எச். டி. எம். எல். உருவாக்கத்துக்கும் பயன்படுத்த முடியும்.

ஒருங்குறி ஆதரவு

[தொகு]

நோட்பேடு மென்பொருளின் விண்டோஸ் என்டி பதிப்பு ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கக் கூடியதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்பேடு&oldid=2229518" இலிருந்து மீள்விக்கப்பட்டது