பண்டமாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பண்ட மாற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பண்டமாற்று (barter) என்றால் ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு பொருளை பரிமாற்றி கொள்ளுதல். இது ஒரு பழங்கால செலாவணியாகும். உலகம் முழுவதும் பண்ட மாற்றுமுறை புழக்கத்தில் இருந்துள்ளது. அதாவது ஒரு கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பயறை பெற்றுக்கொள்ளலை எடுத்துக்காட்டாக கொள்ள முடியும். இதுவே ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்ட முறை ஆகும். இதில் பல வரையறைகள் காணப்பட்டன. ஆகையால் இம்முறை தோல்வியுற்றது. உதாரணம் ஒரு மாட்டைக் கொண்டு ஒரு சேவையை பரிமாற்ற முயலும் போது உள்ள பிரச்சினை. இதன் முலம் வியாபாரம் தோற்றம் பெற்றது[1].

தமிழகத்தில் பண்டமாற்று[தொகு]

பழங்காலத்தில் வாழ்ந்த தமிழர் அன்றாட தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலிய பொருள்களை காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். அதிக விலையுள்ள பொருளைமட்டும் காசு கொடுத்து வாங்கினார்கள். பெரிய பட்டினங்களிலும், நகரங்கிளிலும் காசுகொடுத்து வாங்கும் முறை இருந்தபோதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாக பண்டமாற்றே புழக்கத்தில் இருந்துள்ளது. மதுரை மாவட்ட கிராமங்களில் பண்டமாற்று முறை இப்போதும் நடைபெற்று வருகிறது.[2]

இலக்கியத்தில்[தொகு]

இடையான் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன் என்று (குறுந்தொகை 221.3-4) கூறுகிறார்.

முதன்மை வரையறைகள்[தொகு]

பண்டமாற்றில் முதன்மை வரையறைகள்:

  • இரட்டை பொருந்துகை இன்மை.
  • இடத்துக்கு இடம் சுமந்துசெல்வது சிரமம்.
  • சேவைகளுக்குப் பெறுமதி இடுவது சிரமம்.

கருவிநூல்[தொகு]

பழங்காலத் தமிழர் வாணிகம், மயிலை சீனி.வேங்கடசாமி

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. O'Sullivan, Arthur; Steven M. Sheffrin (2003). Economics: Principles in Action. Pearson Prentice Hall. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-063085-3. 
  2. "மதுரையில் பண்டம்மாற்று முறை: ஒரு படி நெல்லுக்கு ஒன்றரைப் படி உப்பு!". 25 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டமாற்று&oldid=3431026" இலிருந்து மீள்விக்கப்பட்டது