கோடர்மா
கோடர்மா மாவட்டம் | |
---|---|
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் நேர் வடக்கில் கோடர்மா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°28′N 85°36′E / 24.47°N 85.6°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | கோடர்மா |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.47 km2 (2.50 sq mi) |
ஏற்றம் | 397 m (1,302 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 24,633 |
• அடர்த்தி | 3,800/km2 (9,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 825410 |
தொலைபேசி குறியீடு | 06534 |
வாகனப் பதிவு | JH-12 |
இணையதளம் | koderma |
கோடர்மா (Kodarma, also spelled as Koderma), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் நேர் வடக்கில் உள்ள கோடர்மா மாவடத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடக்கில் 164 கிலோ மீட்டர் தொலைவில் கோடர்மா நகரம் உள்ளது. கோடர்மா நகரத்தின் தெற்கில் தன்பாத் நகரம் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 6.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4337 வீடுகளும் கொண்ட கோடர்மா பேரூராட்சியின் மக்கள் தொகை 24633 ஆகும். அதில் ஆண்கள் 12941 மற்றும் 11692 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3853 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3270 மற்றும் 136 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 18,537, இசுலாமியர் 5872, கிறித்தவர்கள் 152 மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[1]
பொருளாதாரம்
[தொகு]தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தால் கோடர்மாவில் இயக்கப்படும் 1000 மெகா வாட் திறன் கொண்ட கோடர்மா நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையம் இயங்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]