கல்பனா சரோஜ்
கல்பனா சரோஜ் | |
---|---|
![]() குடியரசுத் தலைவர் பிரகல்பனா சரோஜுக்கு பத்மசிறீ விருதை வழங்கினார் | |
பிறப்பு | 1961 ரோபர்கெடா, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | ![]() |
பணி | கமானி டியூப்ஸ் என்ற நிறுவனதின் தலைவர் |
வாழ்க்கைத் துணை | Samir Saroj (தி. 1980; இற. 1989) Shubhkaran |
பிள்ளைகள் | சீமா சரோஜ், அமர் சரோஜ் |
கல்பனா சரோஜ் (Kalpana Saroj) ஓர் இந்திய தொழிலதிபரும் டெடெக்ஸ் பேச்சாளரும் ஆவார்.[1] இவர் இந்தியாவின் மும்பையில் உள்ள கமானி டியூப்ஸ் என்ற நிறுவனதின் தலைவராக உள்ளார்.
அசல் " சிலம்டாக் மில்லியனயர் " என்று விவரிக்கப்பட்ட இவர், கடினமான நிலையிலிருந்த கமானி டியூப்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கி, நிறுவனத்தை வெற்றிகரமாக லாபத்திற்கு இட்டுச் சென்றார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கல்பனா சரோஜ், 1961இல் இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள ரோபர்கெடா கிராமத்தில் ஒரு மராத்தி பௌத்த குடும்பத்தில் பிறந்தார். இவரது பெர்றோருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர் இதில் இவர் மூத்தவர். கல்பனாவின் தந்தை அகோலாவின் ரோபர்கெடா கிராமத்தில் ஒரு கவலராக பணியாற்றினார். இவர் தனது 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் குடும்பத்துடன் மும்பையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். கணவரின் குடும்ப உறுப்பினர்களால் வன்முறைக்கு ஆளான பிறகு, இவர் தனது தந்தையால் காப்பாற்றப்பட்டு, கணவனை விட்டுவிட்டு தன் பெற்றோருடன் வாழ தன் கிராமத்திற்கு திரும்பினார். ஆனால் கிராம மக்களால் விரட்டப்பட்டதால் இவர் தற்கொலைக்கு முயன்றார்.[3] 16 வயதில், இவர் தனது மாமாவுடன் வாழ மீண்டும் மும்பைக்கு திரும்பினார். தனது குடும்பத்தை ஆதரிக்க ஒரு ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். பட்டியல் சாதியினருக்கான அரசாங்கக் கடன்களைப் பயன்படுத்தி, இவர் வெற்றிகரமாக ஒரு தையல் வணிகத்தையும் பின்னர் ஒரு தளவாடங்கள் கடையையும் தொடங்கினார்.
தொழில்முனைவோர் முயற்சிகள்
[தொகு]இவர், கேஎஸ் புரொடக்சன் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தனது முதல் திரைப்படத்தைத் தயாரித்தார். இது ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. கைர்லாஞ்சி என்ற இந்த திரைப்படத்தை கல்பனா சரோஜின் பதாகையின் கீழ் தீலிப் மஸ்கே, ஜோதி ரெட்டி மன்னான் கோர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இவர் ஒரு வெற்றிகரமான அசையாச் சொத்து வணிகத்தை உருவாக்கினார். இவர் தனது தொடர்புகளுக்ககவும், தொழில்முனைவோர் திறன்களுக்காகவும் அறியப்பட்டார். கமானி டியூப்ஸ் குழுவில் இருந்தபோது, அது 2001இல் கலைக்கப்பட்டது, நிறுவனத்தை கையகபடுத்திக் கொண்ட இவர், அதை மறுசீரமைத்து மீண்டும் லாபத்திற்கு கொண்டு வந்தார்.[4][5][6]
இவருடைய சொந்த மதிப்பீடுகளின்படி, இவருக்கு தற்போது $ 112 மில்லியன் மதிப்புள்ள தனிப்பட்ட சொத்துக்கள் உள்ளன.[7]
சொந்த வாழ்க்கை
[தொகு]கல்பனா சரோஜ் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் அம்பேத்கரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பின்பற்றுகிறார்.[8][9][10] 1980ஆம் ஆண்டில், இவர் தனது 22 வயதில் சமீர் சரோஜ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அவருடன் அமர் சரோஜ் என்ற ஒரு மகனும், சீமா சரோஜ் என்ற ஒரு மகளும் பிறந்தனர்.[11][12] 1989ஆம் ஆண்டில், இவரது கணவர் இறந்தார். கல்பனா அவரது எஃகு அலமாரியை உற்பத்தி செய்யும் தொழிலைப் பெற்றார்.[13] இவர் தற்போது தற்போது சுப்கரன் என்பவரை மூன்றாவதாக மணந்தார்.
விருதுகளும் அங்கீகாரமும்
[தொகு]கல்பனா சரோஜுக்கு 2013இல் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[14]
இந்திய அரசாங்கத்தால் முதன்மையாக பெண்களுக்கான வங்கியான பாரதிய மகிளா வங்கியின் இயக்குநர் குழுவில் இவர் நியமிக்கப்பட்டார்.[15] இவர் பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TEDx Talks, The Power of 2 | Kalpana Saroj | TEDxHyderabad, retrieved 2019-01-03
- ↑ "From child bride to multi-millionaire in India". BBC News. Retrieved 10 April 2013.
- ↑ "From child bride to multi-millionaire in India". BBC News. Retrieved 10 April 2013."From child bride to multi-millionaire in India". BBC News. Retrieved 10 April 2013.
- ↑ "Former child bride grows up to be millionaire CEO". MSN. Archived from the original on 9 March 2013. Retrieved 13 April 2013.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Dalits seek escape from India's caste system". Al Jazeera News. Retrieved 13 April 2013.
- ↑ "India woman is an 'untouchable,' with a Midas touch". LA Times. Retrieved 13 April 2013.
- ↑ "Remarkable Climb for Self-Made Dalit Millionaire". India Real Time-Wall Street Journal. Retrieved 10 April 2013.
- ↑ "Caste No Bar" இம் மூலத்தில் இருந்து 16 சனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180116140050/http://epaper.timesofindia.com/Default/Layout/Includes/CREST/ArtWin.asp?From=Archive&Source=Page&Skin=CREST&BaseHref=TCRM%2F2010%2F05%2F29&ViewMode=HTML&PageLabel=5&EntityId=Ar00400&DataChunk=Ar00501&AppName=1.
- ↑ "Kalpana – Symbol of true grit". The Hans India (in ஆங்கிலம்). Retrieved 2018-01-16.
- ↑ "Meet Kalpana Saroj, Dalit entrepreneur who broke corporate hegemony". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-06-12. Retrieved 2020-04-11.
- ↑ "Kalpana Saroj - slumdog billionaire and more" இம் மூலத்தில் இருந்து 2018-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180116140213/http://www.thaindian.com/newsportal/india-news/kalpana-saroj-slumdog-billionaire-and-more_100158950.html.
- ↑ "Meet Kalpana Saroj, Dalit entrepreneur who broke corporate hegemony" (in en-US). http://indianexpress.com/article/business/meet-kalpana-saroj-dalit-entrepreneur-who-broke-corporate-hegemony/.
- ↑ "Saga of steely resolve" (in en-US). http://www.dnaindia.com/mumbai/report-saga-of-steely-resolve-1043252.
- ↑ "From grinding poverty to the Padma Shri". Rediff.com. 4 February 2013. https://www.rediff.com/news/report/from-grinding-poverty-to-the-padma-shri/20130204.htm.
- ↑ "Bhartiya Mahila Bank will offer higher interest rate on savings a/c: Highlights". firstpost.com. 2013-09-18. Retrieved 2013-11-20.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Web Site பரணிடப்பட்டது 2018-10-22 at the வந்தவழி இயந்திரம்
- Kalpana Saroj Motivational Stories In Telugu பரணிடப்பட்டது 2019-02-24 at the வந்தவழி இயந்திரம்