அச்சரப்பாக்கம்
அச்சரப்பாக்கம் | |
ஆள்கூறு | 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | மதுராந்தகம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,362 (2011[update]) • 1,303/km2 (3,375/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.95 சதுர கிலோமீட்டர்கள் (3.07 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/atchirupakkam |
அச்சரப்பாக்கம் அல்லது அச்சிறுபாக்கம் (Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி, மாவட்ட தலைமையகமான செங்கல்பட்டிலிருந்து 39 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 96 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கத்தில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.95 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 123 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,565 வீடுகளும், 10,362 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 89.80% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
கோயில்கள்
[தொகு]அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இறைவன் | பாக்கபுரேசுரர்[5] |
இறைவி | சுந்தரநாயகி |
தீர்த்தம் | வேததீர்த்தம் |
விருட்சம் | கொன்றை |
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அச்சரப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Acharapakkam Population Census 2011
- ↑ தேவாரம்.ஆர்க் தளம்