மாசுக்கோ மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசுக்கோ மாகாணம்
Moscow Oblast
மாகாணம்
Московская область
மாசுக்கோ மாகாணம் Moscow Oblast-இன் கொடி
கொடி
மாசுக்கோ மாகாணம் Moscow Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிமத்திய[2]
நிருவாக மையம்எதுவுமில்லை
அரசு
 • நிர்வாகம்மாகாண சட்டமன்றம்[3]
 • ஆளுநர்[4]அந்திரே வரபியோவ்
பரப்பளவு[5]
 • மொத்தம்45,900 km2 (17,700 sq mi)
பரப்பளவு தரவரிசை54வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[6]
 • மொத்தம்70,95,120
 • Estimate (2018)[7]75,03,385 (+5.8%)
 • தரவரிசை2வது
 • அடர்த்தி150/km2 (400/sq mi)
 • நகர்ப்புறம்80.1%
 • நாட்டுப்புறம்19.9%
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata[8] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-MOS
அனுமதி இலக்கத்தகடு50, 90, 150, 190
அலுவல் மொழிகள்உருசியம்[9]
இணையதளம்http://www.mosreg.ru

மாசுக்கோ மாகாணம் (Moscow Oblast, உருசியம்: Моско́вская о́бласть, மாஸ்கொவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் பரப்பளவு 45,900 கிமீ 2 (17,700 சதுர மைல்) இது மற்ற நடுவண் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, ஆனால் அது நாட்டின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும்.[12] இதன் மக்கள் தொகை 7,231,068 (2015) ஆகும், உருசியக் கூட்டமைப்பின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.[6] இந்த மாகாணம் 1929 இல் நிறுவப்பட்டது.

இதன் எல்லைகளாக வடமேற்கில் துவேர் மாகாணம், வடக்கில் யாரோசிலாவ் மாகாணம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் விளதீமிர் மாகாணம்ம், தென்கிழக்கில் ரியாசன் மாகாணம், தெற்கில் தூலா வட்டாரம், தென்மேற்கில் கலூகா மாகாணம், மேற்கில் சிமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. உலோகம், எண்ணெய் சுத்திகரிப்பு, இயந்திர பொறியியல், உணவு, எரிசக்தி, வேதிப்பொருட்கள் உற்பத்தி முதலிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்த ஓப்லஸ்து பெருமளவில் தொழில்மயமாகியுள்ளது.

நிலவியல்[தொகு]

மாஸ்கோ வட்டாரம் மற்றும் மாஸ்கோவின் வரைபடம்

ஓப்லஸ்து பெருமளவில் சமவெளியாக உள்ளது. இதில் சுமார் 160 மீ (520 அடி) உயரம் கொண்ட சில மலைகள் உள்ளன. மாஸ்கோ ஓப்லஸ்து கிழக்கு ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

காலநிலை[தொகு]

மாஸ்கோ ஓப்லஸ்து காலநிலையில் குறுகிய ஆனால் வெப்பமான கோடைக் காலமும், நீண்ட குளிர் காலமும் கொண்டது. சராசரி ஆண்டு வெப்பநிலை +3.5 °செல்சியஸ் (38.3 °பாரங்கீட்) முதல் +5.5 °செல்சியஸ் (41.9 °பாரங்கீட்) வரை இருக்கும்.

குளிரான மாதங்கள் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும். இம்மாதங்களின் சராசரி வெப்பநிலை மேற்கு பகுதிகளில் −9 °செல்சியஸ் (16 °பாரங்கீட்) கிழக்கில் −12 °செல்சியஸ் (10 °பாரங்கீட்). ஆர்க்டிக் காற்றுவீசும் காலத்தில், வெப்பநிலை - 20 °செல்சியஸ் (- 4 °பாரங்கீட்) வரை குறையும். இந்த குளிர்காலக்காற்று இருபது நாட்கள் வரை நீடிக்கும். சிலவேளைகளில் -45 °செல்சியஸ் (-49 °பாரங்கீட்) முதல் -54 °செல்சியஸ் (-65 °பாரங்கீட்) வரை வெப்பநிலை வீழ்ச்சியடைந்து காணப்படும்.

பொதுவாக நவம்பரில் பனிமழை துவங்கும், சிலசமயம் செப்டம்பரிலோ அல்லது திசம்பரிலோ துவங்கும். ஏப்ரல் மாதத்தினிடையில் (சில சமயம் மார்ச் மாத பிற்பகுதியில்) பனிமழை மறையும். பனி ஆழம் 25-50 சென்டிமீட்டர் (9.8-19.7 அங்குலம்) மண் 65-75 சென்டி மீட்டர் (26-30) வரை உறையும். வெப்பமான மாதம் சூலை மாதமாகும் சராசரி கோடைக்கால வெப்பநிலை வடமேற்கில் +18.0 °செல்சியஸ் (64.4 °பாரங்கீட்) தென்கிழக்கில் +20.0 °செல்சியஸ் (68.0 °பாரங்கீட்) ஆகும்.

அதிகபட்ச வெப்பநிலையான +40 °செல்சியஸ் (104 °பாரங்கீட்)ஆக கலோம்னா பகுதியில் 2010 இல் பதிவானது. சராசரி மழையளவு 450-650 மில்லி மீட்டர் (18-26 அங்குலம்), வடமேற்குப்பகுதிகளில் மிகுந்தும், தென்கிழக்குப்பகுதிகளில் குறைந்தும் மழை பொழியும்.[10][11][13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Moscow Oblast, Article 40
  4. Charter of Moscow Oblast, Article 30.2
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  6. 6.0 6.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  8. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  9. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  10. 10.0 10.1 "Московская область". Советская энциклопедия (in Russian). Яндекс.Словари. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  11. 11.0 11.1 "Moscow (oblast, Russia)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010.
  12. B. Prokhorov, A. Martynov, V. Artyukhov, V. Vinogradov (1999). "ru:Плотность населения и система расселения" (in Russian).{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)
  13. Myachkovo NA, Sorokin VN, Climate of Moscow Oblast, Moscow, 1991 (in Russian)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசுக்கோ_மாகாணம்&oldid=3756741" இலிருந்து மீள்விக்கப்பட்டது