மேற்கு கரை பிரிவு
மேற்கு கரை பிரிவு (மலாய் மொழி: Bahagian Pantai Barat; ஆங்கிலம்: West Coast Division) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள்.
கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
சபா மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் 7,588 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மாநில நிலப்பரப்பில் 10.3%; மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 30% கொண்டுள்ளது.[1] மேற்கு கரை பிரிவு 1,440 கி.மீ. நீளமான கடற்கரையைக் கொண்டது.
அமைவிடம்
[தொகு]பஜாவ் (Bajau), பிசாயா (Bisaya), புருணை மலாய்க்காரர்கள் (Bruneian Malay), டூசுன் (Dusun), இல்லானுன் (Illanun), கடசான் (Kadazan) மற்றும் கெடாயன் (Kedayan) பூர்வீகப் பழங்குடி மக்களுடன்[2] கணிசமான எண்ணிக்கையிலான சீனர்களையும் உள்ளடக்கியது.[3]
கோத்தா கினபாலு துறைமுகம் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது.[1] சபா மாநிலத்தின் நீர்ப் போக்குவரத்திற்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது. இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 4,031,000 டன் சரக்குகளைக் கையாளுகிறது. அத்துடன் கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம், மாநிலத்தின் முக்கிய வான்வழி நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.[1]
மாவட்டங்கள்
[தொகு]மேற்குக் கடற்கரைப் பிரிவு பின்வரும் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:[1]
- கோத்தா பெலுட் மாவட்டம் (1,386 கி.மீ.2) கோத்தா பெலுட்
- கோத்தா கினபாலு மாவட்டம் (350 கி.மீ.2) கோத்தா கினபாலு
- பாப்பார் மாவட்டம் (1,234 கி.மீ.2) பாப்பார்
- பெனாம்பாங் மாவட்டம் (466 கி.மீ.2) பெனாம்பாங்
- புத்தாத்தான் மாவட்டம் (29,7 கி.மீ.2) புத்தாத்தான்
- ரானாவ் மாவட்டம் (2,978 கி.மீ.2) ரானாவ்
- துவாரான் மாவட்டம் (1,165 கி.மீ.2) துவாரான்
இவற்றையும் பார்க்க
[தொகு]நூல்கள்
[தொகு]- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
- State of Sabah: Administrative Divisions Ordinance – Sabah Cap. 167 (PDF) of 1 November 1954; last amended on 16 September 1963, as amended in August 2010;
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "General Information". Lands and Surveys Department of Sabah. Borneo Trade. Archived from the original on 23 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Frans Welman (9 March 2017). Borneo Trilogy Volume 1: Sabah. Booksmango. pp. 167–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-616-245-078-5.
- ↑ Danny Wong Tze-Ken (2004). Historical Sabah: The Chinese. Natural History Publications (Borneo). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-812-104-0.