நையோபியம் ஐந்தயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நையோபியம்(V) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13779-92-5 | |
பண்புகள் | |
Nb2I10 | |
வாய்ப்பாட்டு எடை | 1475 |
தோற்றம் | மஞ்சள் திண்மம் |
அடர்த்தி | 5.30 கி/செ,மீ3 |
உருகுநிலை | 543 °C (1,009 °F; 816 K) sublimes |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நையோபியம் ஐந்தயோடைடு (Niobium pentaiodide) என்பது Nb2I10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் எதிர்காந்தப் பண்புடன் ஈரத்திற்கு ஒவ்வாததாய் விளங்குகிறது. உலோக நையோபியத்துடன் அயோடின் சேர்த்து சூடுபடுத்தினால் நையோபியம் ஐந்தயோடைடு உருவாகிறது[1] . எக்சு-கதிர் விளிம்பு விலகல் பகுப்பாய்வு முறையில் இதனுடைய படிக அமைப்பு சரிபார்க்கப்பட்டதில், விளிம்பில் பகிர்ந்து கொண்டுள்ள இரட்டை எண்முக அமைப்பு கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. டாண்ட்டலம் மற்றும் நையோபியத்தின் பல ஐந்தாலைடுகளுக்கும் இதே படிக அமைப்பே அறியப்படுகிறது. விளிம்பில் உள்ள Nb-I பிணைப்புகளை விட நீளத்தை விட அயோடைடுகளின் பிணைப்பு 0.3 Å அளவுடன் நீளமாக உள்ளது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ G. Brauer "Hydrogen, Deuterium, Water" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1315.
- ↑ Krebs, Bernt; Sinram, Diethard "Darstellung, Struktur und Eigenschaften einer neuen Modifikation von NbI5 (Preparation, structure and properties of a new modification of NbI5" Zeitschrift fǔr Naturforschung, Teil B: Anorganische Chemie, Organische Chemie 1980, volume 35b, pp. 12-16.