திருமலை
திருமலை తిరుమల | |||||||
அமைவிடம்: திருமலை తిరుమల, ஆந்திரப் பிரதேசம்
| |||||||
ஆள்கூறு | 13°39′00″N 79°25′12″E / 13.6500°N 79.4200°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | சித்தூர் மாவட்டம் | ||||||
அருகாமை நகரம் | திருப்பதி | ||||||
[[ஆந்திரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||
[[ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||
மக்களவைத் தொகுதி | திருமலை తిరుమల | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
18,013 (2004[update]) • 667/km2 (1,728/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
27 கிமீ2 (10 சதுர மைல்) • 976 மீட்டர்கள் (3,202 அடி) | ||||||
குறியீடுகள்
|
திருமலை என்பது திருப்பதி (சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்: கொங்கணவர் - திருப்பதி) நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாச்சி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், வெறுங்கைவேடன் என்பதே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும்.[1]
வரலாறு
[தொகு]திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.
இங்குள்ள ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல அரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்கோவில் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் என்ற தமிழ் மன்னனால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[2] கி.பி. நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர பேரரசாலும் இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. விசயநகர பேரரசின் மிகப்பெரிய மன்னனான கிருட்டிண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விசயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாகப் பின்பற்றப்பட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி-திருமலை, ஆழ்வார்களால் (வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் திருமால் மீது இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் பெற்றவர்கள். வைணவப் பண்பாட்டில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி-திருமலை ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் பூசை முறைகள் இராமானுச ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.
தமிழகத்தில் மாலிக் கபூர் தலைமையில் நடைபெற்ற இசுலாமிய படையெடுப்பின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்குக் கொண்டுவரப்பட்டு 60 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் கோயிலின் உள்ளே இருக்கிறது.[3][4]
திருவிழாக்கள்
[தொகு]வைகுண்ட ஏகாதசி, இராம நவமி, சென்மாட்டமி போன்ற வைணவ பண்டிகைகளை அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம் வருகின்ற பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்ச கணக்கில் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேசுவரரின் திரு உருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
இங்கு மட்டும் கொண்டாடப்படும் கங்கம்மா சத்ரா விசேசமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா கோவிந்தக் கடவுளின் தமக்கை ஆவார்.
திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள்
[தொகு]திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.
- அலிபிரி - திருப்பதிக்கு அருகில் உள்ளது. நெடுநாட்களாக பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருவது. 9 கிமீ நீளமுள்ள இந்த மலைப்பாதையில் ஐந்து கோபுரங்களுடன் மொத்தம் 3550 படிக்கட்டுகள் உள்ளன[5].
- சிரீவாரி மெட்டு - திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் சீநிவாச மங்காபுரத்திற்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து சமீப ஆண்டுகளில் திருப்பதி தேவசுதானத்தால் சீரமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
- ↑ "பார்க்க 2ஆம் பத்தி". Archived from the original on 2011-03-19. பார்க்கப்பட்ட நாள் 2011-04-08.
- ↑ 4th para
- ↑ 2nd para
- ↑ "திருப்பதியில் பாதயாத்திரை பக்தர்களுக்காக அலிபிரி மலைப்பாதையில் 7 இடங்களில் சிகிச்சை மையம்". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 20 மே 2015.[தொடர்பிழந்த இணைப்பு]