உள்ளடக்கத்துக்குச் செல்

தசைநாண் அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசைநாண் அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புவாதவியல்
ஐ.சி.டி.-10M77.9
ஐ.சி.டி.-9726.90
நோய்களின் தரவுத்தளம்31624
மெரிசின்பிளசு001229
ஈமெடிசின்emerg/570
ம.பா.தD052256
சில்லெலும்புத் தசைநாண் அழற்சி

தசைநாண் அழற்சி (Tendinitis; tendonitis) என்பது தசை நாண்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. இவ்வகைத் தசை நாண் நோயானது சாதாரணமாகக் காணப்படும் அழற்சியல்லாத ஆனால் ஒரேமாதிரியான அறிகுறிகளுடன் உள்ள, வேறுவகையான சிகிச்சைகள் தேவைப்படுகின்ற, நாட்பட்டத் தசை நாண் காயங்களுடன் (tendinosis) இணைத்து ஒரு தெளிவற்ற, குழப்பமான நோய் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகிறது[1]. எனவே, தசைநாண் அழற்சி என்னும் சொல் தீவிரமான அழற்சியினால் ஏற்படும் பெரிய அளவுத் தசை நாண் காயங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். பொதுவாகத் தசைநாண் அழற்சி, உடலின் எந்தப் பகுதியிலுள்ள தசை நாண் பாதிப்படைகிறதோ அதன்படி வகைப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, குதிக்கால் தசைநார்களைப் (Achilles tendon) பாதிப்பது குதிக்கால் தசைநாண் அழற்சி என்றும் சில்லெலும்பு நாண்களைப் (patellar tendon) பாதிப்பது சில்லெலும்புத் தசைநாண் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khan, KM; Cook JL; Kannus P; Maffulli N; Bonar SF (2002-03-16). "Time to abandon the "tendinitis" myth : Painful, overuse tendon conditions have a non-inflammatory pathology". BMJ 324 (7338): 626–7. doi:10.1136/bmj.324.7338.626. பப்மெட்:11895810. பப்மெட் சென்ட்ரல்:1122566. http://bmj.bmjjournals.com/cgi/content/full/324/7338/626. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசைநாண்_அழற்சி&oldid=1774055" இலிருந்து மீள்விக்கப்பட்டது