விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உதவி: #சில எண்ணங்கள் பெயரிடல் குறித்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
பயனர்:மதனாகரன் ?
வரிசை 464: வரிசை 464:
#முசா × பாரடைசியாக்கா என்று தலைப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி 01:52, 3 சனவரி 2016 (UTC)
#முசா × பாரடைசியாக்கா என்று தலைப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி 01:52, 3 சனவரி 2016 (UTC)
#:நானும் உங்களைப் போன்றே, முதலில் எண்ணினேன். ஆனால், வாழையில் பல சிற்றினங்கள் உள்ளன. நாம் தேடுசாளரத்தில் தேடும் போது, வாழை என்று அடித்தால், அதன் கீழே இதுவும் தோன்ற வாய்ப்புண்டு. தாவரவியல் பெயரில் தேடுபவர் குறைவே, அப்படியே தேடினாலும், மற்ற சிற்றனங்களை, தேடு சாளரத்திலேயே காண இயலாது போகிவிடும் என்பதால் மேற்கண்ட பெயரை பரிந்துரைத்தேன். ஒரு கட்டுரயைத் தேடி வருபவர், அவர் தேடும் போது, நமது கட்டுரை வளத்தையும் காண வைக்க வேண்டியது, நமது கடமையாக எண்ணுகிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:00, 3 சனவரி 2016 (UTC)
#:நானும் உங்களைப் போன்றே, முதலில் எண்ணினேன். ஆனால், வாழையில் பல சிற்றினங்கள் உள்ளன. நாம் தேடுசாளரத்தில் தேடும் போது, வாழை என்று அடித்தால், அதன் கீழே இதுவும் தோன்ற வாய்ப்புண்டு. தாவரவியல் பெயரில் தேடுபவர் குறைவே, அப்படியே தேடினாலும், மற்ற சிற்றனங்களை, தேடு சாளரத்திலேயே காண இயலாது போகிவிடும் என்பதால் மேற்கண்ட பெயரை பரிந்துரைத்தேன். ஒரு கட்டுரயைத் தேடி வருபவர், அவர் தேடும் போது, நமது கட்டுரை வளத்தையும் காண வைக்க வேண்டியது, நமது கடமையாக எண்ணுகிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:00, 3 சனவரி 2016 (UTC)

==பயனர்:மதனாகரன்==
[http://onlineuthayan.com/news/6097 இந்தச் செய்தியின்]படி சிறப்புப் பெறுபேறு பெற்றவர் [[பயனர்:மதனாஹரன்]] அல்லவா? உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 08:36, 3 சனவரி 2016 (UTC)

08:36, 3 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஆலமரத்தடிக்கு வருக! ஆலமரத்தடிப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நுட்ப விடயங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகள், கலைச்சொற்கள், உதவிக் குறிப்புகள் போன்றவை ஆலமரத்தடிக் கிளைகளில் உரையாடப் பயன்படுகின்றன. நீங்களும் பொருத்தமான கீழ்கண்ட ஒரு கிளையைத் தேர்தெடுத்து உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கங்களில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Caution! Please, do not edit this page, but you may edit on suitable sections such as Policy, Technical, Announcement, Ideas and Help desk. Thank you!
குறுக்கு வழி:
விக்கிப்பீடியா:ஆலமரத்தடி
WP:AM

ஆலமரத்தடிக் கிளைகள்


கொள்கை
கவனிக்க
கொள்கைகளும் வழிகாட்டல்களும் தொடர்பான உரையாடல்கள், முன்மொழிவுகளுக்கான களம்.


தொழினுட்பம்
கவனிக்க
இது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும்.


அறிவிப்புகள்
கவனிக்க
விக்கிப்பீடியா தொடர்பான தகவல்களை, அறிவித்தல்களை இங்கே பகிருங்கள்.


புதிய கருத்துக்கள்
கவனிக்க
பொது உரையாடல்கள். புதிய எண்ணங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள்.

ஒத்தாசை
ஒத்தாசை
கவனிக்க
விக்கியைத் தொகுப்பதில், பயன்படுத்துவதில், பொருத்தமான கட்டுரைகளை எழுதுவதில் சிக்கல்கள் இருந்தால் இங்கே கேளுங்கள்.

உசாத்துணைப் பக்கம் | பயிற்சி | சமுதாய வலைவாசல் | ஆலமரத்தடியில் எல்லாவிடயங்களும் ஒரே பார்வையில்
இந்தியாவில் ஓர் ஆலமரத்தடி. [சேர்]
இன்றைய அலுவலகங்களில் நடக்கும் கலந்துரையாடல்களைப் போல, கிராமத்து ஆலமரத்தடியில் நடக்கும் கலந்துரையாடல்களும், விவாதங்களும் புதிய சிந்தனைகளுக்கு வழி ஏற்படுத்துகின்றன.
பிற உதவிக்கும் உரையாடல்களுக்கும்
எனக்கு... எங்கே செல்ல
விக்கிப்பீடியாவை பயன்படுத்த உதவி தேவை... ஒத்தாசைப் பக்கம்
தொகுப்பது பற்றி விளக்கம் வேண்டும்... பயிற்சி
சில கேள்விகள் அல்லது கருத்து உள்ளது... கேள்விகள்

வார்ப்புரு:ஆலமரத்தடி இடையிணைப்புகள்

UPDATE: 2015 Global Congress on Intellectual Property and the Public Interest

Hello,
Apologies for writing in English, please feel free to translate this message to your language. Earlier, we announced in the mailing lists informing you all about the 2015 Global Congress on Intellectual Property and the Public Interest that is going to be held between 15 and 17 December at National Law University, Delhi. 10 Wikimedians from various Indian language Wikimedia communities and Indian English Wikipedia/Wikimedia community will be selected to attend this event where the event is aimed at helping them to work on various policy level works for their respective communities.

So far, from your community we have got one nomination. We would like more applications from your community from which you would be selecting only one participant by endorsing. Please edit the subsections below and endorse the applicant you think should be representing your community in the event. We also encourage more applicants, especially more female applicants, to apply and share their application with other fellow Wikimedians in your language community for endorsements. Though we understand it is quite difficult to assess one’s contribution on the basis of endorsements

Last date of nomination/endorsement is: 15 November 2015, 23:59 (IST) --Titodutta (பேச்சு) 10:16, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

User:Commons_sibi

Endorsements

  1. Support. User:Commons_sibi is a Wikipedian well experienced in policy making discussions. --இரவி (பேச்சு) 11:26, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  2. Support--பாஹிம் (பேச்சு) 11:40, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  3. Support--சிவகோசரன் (பேச்சு) 17:17, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  4. Support --AntanO 18:28, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  5. Support--நந்தகுமார் (பேச்சு) 19:01, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  6. Support--Booradleyp1 (பேச்சு) 04:33, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  7. Support--செல்வா (பேச்சு) 05:37, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  8. ஆதரவு--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:54, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  9. Support--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:57, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  10. Support --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:37, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  11. Support-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:50, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  12. Support--Kanags \உரையாடுக 21:18, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  13. ஆதரவு--மணியன் (பேச்சு) 15:09, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  14. Support -- Mdmahir (பேச்சு) 15:48, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  15.  ஆதரவு--உழவன் (உரை) 16:54, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  16.  ஆதரவு--Natkeeran (பேச்சு) 18:33, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
  17.  ஆதரவு-- மயூரநாதன் (பேச்சு) 05:16, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி / Thanks

எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி . நிகழ்வில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது . இந்த நிகழ்வின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ள //The 2015 Congress seeks to produce three outcomes- first, the mobilization of existing scholarly research directly into the hands of civil society advocates, business leaders and policy makers, leading to evidence-based policies and practices; second, the collaborative identification of urgent, global and local research priorities and generation of a joint research/advocacy agenda; and third, the solidification of an inter-disciplinary, cross-sector and global networked community of experts and practitioners focused on public interest aspects of IP policy and practice.Alongside focused keynote speakers and plenary sessions, the 2015 Global Congress will carry out discussions through 4 parallel “tracks”, in the fields of “Openness”, “Access to Medicines”, “User Rights”, and “IP & Development”. There will also be cross-track sessions to accommodate discussions falling within more than one track.// இடங்களில் , தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் , சாமானிய மக்களுக்கும் , கட்டற்ற அறிவின் பரவலுக்கும் உதவும் விதமான எனது பயணத்தை அமைத்துக் கொள்வேன் . நிகழ்வின் முடிவில் , எனது கற்றலை இங்கு இடுகிறேன் . ___________________________
Thanks to all who have endorsed my application . Have got invite to the event .As stated in the event objectives //Alongside focused keynote speakers and plenary sessions, the 2015 Global Congress will carry out discussions through 4 parallel “tracks”, in the fields of “Openness”, “Access to Medicines”, “User Rights”, and “IP & Development”. There will also be cross-track sessions to accommodate discussions falling within more than one track.

This year’s Congress will also feature an additional "Room of Scholars". "The Room of Scholars" has been conceptualized as that cross­cutting space, not restricted to a particular track but as running along side them. The "Room of Scholars" will be an opportunity for the presentation of longer, more detailed academic research papers on the theme of the Congress.// , I would look into the areas which would benefit Tamil Wikipedia Community , Common man and Free Knowledge . I will try to make the best use of the conference towards achieving the above objectives . Post the conference , I commit to write a report on the learnings and subsequent way forward from the learning .--Commons sibi (பேச்சு) 06:28, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Update

Thanks for getting involved.. Based on your discussion and endorsements the following user has been selected: User:Commons_sibi . --Titodutta (பேச்சு) 05:17, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விமானச் சேவைகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்சு, நேபாள் ஏர்லைன்சு என்றவாறு நிறுவனப் பெயர்களை எழுதிக் கொண்டிருக்காமல் ஸ்ரீலங்கன் விமானச் சேவை, நேபாள விமானச் சேவை, இந்திய விமானச் சேவை (Indian Airlines), இந்திய வான் வழிகள் (Indian Airways) என்றவாறு மொழிபெயர்த்துத் தலைப்பிடுவது சாலச் சிறந்ததென்று நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:40, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஐபிஎம் என்ற நிறுவனத்தை சவஎ என்று எழுதலாமா அதாவது சர்வதேச வணிக எந்திரம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அவர்களாக வழங்காத வரை நாம் மாற்றினால் யாருக்கும் புரியாது என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு)

ஐபீஎம் என்பது சொற்குறுக்கம். முழுமையான சொல்லன்று. முழுமையான சொற்பொருளிருந்தாலும் அவர்களே சொற்குறுக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் எயர்லைன்ஸ் என்பது முழுமையான சொல். எனவே, அதனை மொழிபெயர்க்கலாம். ஹார்வார்டு யுனிவர்சிட்டி என்றிருப்பதை நாம் அப்படியே பயன்படுத்துகிறோமா? ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்று பெயரல்லாத சொல்லை அதிலிருந்து மொழிபெயர்க்கிறோம். ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்பது அவர்களாக வழங்கியதல்ல.--பாஹிம் (பேச்சு) 05:36, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

  • ஐ.பி.எம் என எழுதுவது நல்லது. அல்லது ஐபியெம் என்று எழுதவேண்டும். சில வணிகப்பெயர்கள் சிறியபெரிய உரோமன் எழுத்துக்கலவையாகவும் இருக்கும். இவற்றைத் தமிழில் அப்படியே காட்டல் இயலாது. ஆர்வர்டு பல்கலைக்கழகம் என ஒரு பகுதியை மொழிபெயர்ப்பது போல செய்வது தவறன்று. எசுப்பானியத்தில் Universidad de Harvard எனக் குறிக்கின்றனர். யார் எந்தமொழியில் எப்படிச்செய்தாலும், நம்மொழியில் ஒன்றை எப்படி எழுதவேண்டும் என்பது நம் உரிமை. இது வரட்டு கவுரவம் அன்று. தேவையையும் இயைபுடைமையையும் பொருத்தது. சீராக எழுதிவருவது நல்லது. Ivory Coast என ஆங்கிலத்தில் வழங்குவது உண்மையில், அவர்கள் நாட்டில் Côte d’Ivoire. நாம் தந்தக்கரை, கோட்டுக் கரை என ஏதேனும் ஒரு சீரான பெயரால் வழங்குவது தவறு இல்லை. ஐவரி கோசுட்டு என்று எழுதினாலும் பிழையில்லை. ஏர்லைன்சு, ஏர்வேசு என்று எழுதலாம், இந்திய வான்வழிச்சேவை என்பது போலும் எழுதலாம். ஆனால் சீர்மை முக்கியம். சிறீலங்கன் வான்வழிச்சேவை, நேபாள வான்வழிச்சேவை என்பன பொருந்தலாம். --செல்வா (பேச்சு) 05:55, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இன்னுமொன்று: இந்திய இரயில்வே என்பதும் தமிழ்-ஆங்கில கலப்பாகவுள்ளது. இன்டியன் ரயில்வேஸ் என்பதா இந்திய தொடர்வண்டிப் போக்குவரத்து என்பதா? --AntanO 06:03, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இந்திய இரயில்வே என்றாலே போதும். இந்திய இரயில்வேசு என்று எழுதத்தேவையில்லை. தேவையெனில் எழுதலாம். இந்தியத் தொடர்வண்டி (இது ஒருவண்டிதானோ என்னும் ஐயம் எழும், ஆனால் பழக்கத்தால் எதைக் குறிக்கின்றோம் என்பது விளங்கும்) என்றே சுருக்கவும் செய்யலாம். இந்தியத் தொடர்வண்டிநிறுவனம் என்று நீட்டியும் சொல்லலாம். தொடர்வண்டி என்பது ஊடகத்தில் நன்கு பரவி வருகின்றது. oneindia, webdunia, தினமணி, சீனச் செய்தி நிறுவனம், விகடன் இப்படிப் பல செய்தியூடகங்கள் தொடர்வண்டி எனப் பயன்படுத்துகின்றது. ஒவ்வொரு செய்தியிலும் 5 முதல் 10-12 தடவை வரை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.--செல்வா (பேச்சு) 06:23, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Community Wishlist Survey-1

Wikimania 2016 scholarships ambassadors needed

Hello! Wikimania 2016 scholarships will soon be open; by the end of the week we'll form the committee and we need your help, see Scholarship committee for details.

If you want to carefully review nearly a thousand applications in January, you might be a perfect committee member. Otherwise, you can volunteer as "ambassador": you will observe all the committee activities, ensure that people from your language or project manage to apply for a scholarship, translate scholarship applications written in your language to English and so on. Ambassadors are allowed to ask for a scholarship, unlike committee members.

Wikimania 2016 scholarships subteam 10:47, 10 நவம்பர் 2015 (UTC)

தானியங்கி உதவி

நீச்சல்காரனைத் தவிர வேறு எவராவது தமது தானியங்கியை இயக்கக்கூடியவர்கள் உள்ளார்களா? சில பகுப்புகளின் பெயர்களை மாற்ற வேண்டும். அனைத்துக்கும் நீச்சல்காரனைக் கேட்க முடியாது. அவர் பல்லாயிரக்கணக்கணகான தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்கும் பெரும் பணியில் உள்ளார். குறைந்தது பகுப்புகளின் பெயர்களை மாற்றுவதற்கு ஆங்கில விக்கியில் உதவிக் குறிப்புகள் இருந்தால் தொடுப்புத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 23:38, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

http://apps.neechalkaran.com/appswiki இதுவொரு கூகிள் வழியாகச் செயல்படும் தானியங்கி இயக்கி. இதில் பெரிய நுட்ப அனுபவமின்றி, கூகிள் authentication கொடுத்து யாரும் இயக்கலாம். செயல்முறையும் கற்பதற்கு எளிது. பல பக்கங்களில் ஒரே மாதிரியான திருத்தங்களுக்கு இது மிகவும் உதவும். ஏற்கனவே kalaiBOT இதில் இயங்கியது. நீங்கள் விரும்பினால் உங்கள் தானியங்கிக் கணக்கிற்கு அணுக்கம் தருகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:17, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி நீச்சல்காரன், உங்கள்: உதவிக் குறிப்புகளைப் படித்து விட்டு அணுக்கம் கேட்கிறேன்.--Kanags \உரையாடுக 20:05, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
Kanags! இது குறித்து சில மேலதிக விபரங்களைத் தர முடியுமா. நானும் எனது தானியங்கி மூலமாக இதில் உதவ முடியுமா எனப் பார்க்கிறேன். --கலை (பேச்சு) 12:35, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
கலை, ஒரு பெரும் பட்டியல் உள்ளது. தயாரா:)--Kanags \உரையாடுக 20:05, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
பட்டியலுக்கான இணைப்பைத் தாருங்கள். பார்த்துவிடலாம் :).--கலை (பேச்சு) 20:09, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீச்சல்காரனுக்குப் பாராட்டு

நீச்சல்காரன், NeechalBOT மூலமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அளித்து வரும் நுட்பச் சேவையின் உச்சமாக 10,000+ தமிழக ஊராட்சிகள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். அனைவரும் அவரது பேச்சுப் பக்கத்தில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 11:07, 11 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

இயற்கை ஆர்வலர்களுக்கான விக்கிப்பீடியா பயிலரங்கம்

இயற்கை ஆர்வலர்களுக்கான விக்கிப்பீடியா பயிலரங்கம் - வரும் நவம்பர் 14, 15 சனி, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் முன்பதிவு செய்வதுடன் தங்கள் மடிக்கணினிகளை எடுத்து வர வேண்டுகிறோம். தலைசிறந்த ஆங்கில விக்கிப்பீடியரான சியாமல் இப்பயிற்சியை அளிக்கிறார். இதே போன்ற ஒரு பயிலரங்கில் பெங்களூரில் கலந்துகொண்டேன். பல நுணுக்கமான முறைகளைக் கற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இருந்தது. @Rsmn, பரிதிமதி, and Info-farmer:--இரவி (பேச்சு) 08:49, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

அரிய வாய்ப்பாக உள்ளது. ஆனால் ஒரு திருமணம் காரணமாக வெளியூர் செல்லவேண்டியுள்ளதால் கலந்துகொள்ள இயலாது உள்ளது :(--மணியன் (பேச்சு) 10:48, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

சென்னை விக்கிமீடியா மடலாற்குழு

சென்னை விக்கிப்பீடியர்கள் இக்குழுவில் சேர்ந்து தகவல்கள்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. தற்போது நான், சிறீகாந்து, இரவி, மற்றும தினுசெரியன் ஆகியோர் இதன் நிர்வாகிகளாக இருக்கிறோம். இந்த மடலாற்குழுவை நிர்வகிக்க வேறு யாருக்கும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும. நன்றி -- Mdmahir (பேச்சு) 02:22, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பல பொருட்களில் வழங்கும் தலைப்புகளைக் கையாள்வது எப்படி

உரையாடல் இங்கு நகர்த்தப்பட்டுள்ளது: பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர்

Highlight or Discuss your community issues in CIS-A2K's policy handbook

Hello,
Currently at CIS-A2K, we are working on a handbook called "Indic Wikipedia Policies and Guidelines Handbook" where we are discussing a number of things such as: Creating new policies, Modifying existing ones; and to explain these we had to discuss Village Pump, Consensus etc. The book is in English, but we hope to translate and print the book in a few Indian languages.

Now,

a) We are eager to add your frequently asked questions on policies and guidelines, and discuss the difficulties you are facing to manage, enforce or deal with any policy on your Wikipedia.

For this reason, we are inviting you to ask questions or discuss things related to your Wikipedia's policies and guidelines.

Selected questions or discussions will be published in our handbook and askers/participants will be given credits in the book.

and/or

b) We are also inviting you to preview the handbook and give your feedback to improve it.

Please fill this form and let us know if you want to join this survey

Regards. --Titodutta (பேச்சு) 09:10, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Harassment consultation

Please help translate to your language

The Community Advocacy team the Wikimedia Foundation has opened a consultation on the topic of harassment on Meta. The consultation period is intended to run for one month from today, November 16, and end on December 17. Please share your thoughts there on harassment-related issues facing our communities and potential solutions. (Note: this consultation is not intended to evaluate specific cases of harassment, but rather to discuss the problem of harassment itself.)

Regards, Community Advocacy, Wikimedia Foundation

விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள்

விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள் என்பன பல ஆங்கில விக்கிப்பீயாவில் உள்ளதுபோல் இல்லாமல் அல்லது இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. பலவற்றுக்கு ஆ.வி.யை மேற்கோளாகக் கொள்கிறோம். ஆகவே, முக்கியமாகத் தேவையானவற்றை இங்கு பட்டியலிட்டு, பொருத்தமான இடத்தில் உரையாடலாம். சிக்கல் அற்று இருப்பின் உருவாக்கலாம் அல்லது இற்றைப்படுத்தலாம்.

கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

--AntanO 12:55, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இருந்து கொள்கைகளை, வழிகாட்டல்களை பொருத்தமானபடியே இங்கு பயன்படுத்துகிறே. இரண்டு செயற்திட்டங்களின் அளவு, தன்மை வேறு. ஆகவே எல்லாக் கொள்கைகளும் இங்கு பொருந்துவது இல்லை, தேவையானவை இல்லை. தமிழ் விக்கிக்குப் என்ன கொள்வை தேவை, ஏன் தேவை, எப்படிச் செயற்படுத்துவது, எப்படி இங்கு பொருந்தும் என்று பார்த்துச் செய்தல் வேண்டும். குறிப்பான இக் கொள்கையை இற்றைப் படுத்தலாம். படக் காட்சியங்களை பொருத்தமானபடி கட்டுரைகளில் இணைக்கலாம், அல்லது பொதுவகத்துக்கு நகர்த்தலாம். --Natkeeran (பேச்சு) 15:38, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
Antan, இத்தேவை குறித்து கவனம் ஈர்த்தமைக்கு நன்றிதங்கள் துப்புரவுப் பணி அனுபவத்தில் கண்டுணர்ந்த இத்தகைய மற்ற கொள்கைகளையும் பட்டியல் இடுங்கள். அவை குறித்து உரையாடி தமிழ் விக்கிப்பீடியா வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் இற்றைப்படுத்துவோம். படக்காட்சியகம் தொடர்பான என் கருத்துகளை இங்கு இட்டுள்ளேன்.--இரவி (பேச்சு) 17:43, 20 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இரவி, இங்கு அவ்வப்போது குறிப்பிடுவேன். தற்போதைக்கு இதனை இற்றைப்படுத்தலாம். மேலும், ஆ.வி போன்ற வளர்ந்த விக்கிப்பீடியாக்களில் இருந்து பல வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் உள்வாங்குவது நல்லது. வழிகாட்டல்களும் கொள்கைகளும் ஒரு நேர்த்தியான கலைக்களஞ்சியம் உருவாக்க உதவும். அவற்றை மொழிபெயர்க்க உதவி பெறலாமா? இதுபற்றி விரிவாக உரையாடலாம் என நினைக்கிறேன். --AntanO 10:04, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

த. இ. க. - தமிழ் விக்கி கூட்டுமுயற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனான கூட்டு முயற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்று தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 09:37, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஒரு நினைவூட்டல். வாக்கெடுப்பு நாளை நிறைவடைகிறது. நன்றி. --இரவி (பேச்சு) 10:57, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ESEA Newsletter November 2015

ESEA Newsletter Header
ESEA Newsletter Header

ESEA Newsletter is out! Check out some amazing work done by Wikimedia Communities in East and Southeast Asia! Here is the summary of the Newsletter.

-- Addis Wang (WMCN)

This is a message regarding the proposed 2015 Free Bassel banner. Translations are available.

Hi everyone,

This is to inform all Wikimedia contributors that a straw poll seeking your involvement has just been started on Meta-Wiki.

As some of your might be aware, a small group of Wikimedia volunteers have proposed a banner campaign informing Wikipedia readers about the urgent situation of our fellow Wikipedian, open source software developer and Creative Commons activist, Bassel Khartabil. An exemplary banner and an explanatory page have now been prepared, and translated into about half a dozen languages by volunteer translators.

We are seeking your involvement to decide if the global Wikimedia community approves starting a banner campaign asking Wikipedia readers to call on the Syrian government to release Bassel from prison. We understand that a campaign like this would be unprecedented in Wikipedia's history, which is why we're seeking the widest possible consensus among the community.

Given Bassel's urgent situation and the resulting tight schedule, we ask everyone to get involved with the poll and the discussion to the widest possible extent, and to promote it among your communities as soon as possible.

(Apologies for writing in English; please kindly translate this message into your own language.)

Thank you for your participation!

Posted by the MediaWiki message delivery 21:47, 25 November 2015 (UTC) • TranslateGet help

தகவல் உழவனின் உறைவிட விக்கிப்பீடியர் பணி குறித்த வாக்கெடுப்பு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளை நிறைவேற்றும் பொருட்டு ஒருவர் முழுநேரமாக அந்நிறுவனத்தோடு இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இதன் பொருட்டு, தகவல் உழவன் இப்பொறுப்பை ஏற்க முன்வந்துள்ளார். இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். --இரவி (பேச்சு) 11:39, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி. நம் தமிழ் விக்கிப்பீடியர்களின் சார்பாக, நமது எண்ணங்களை உள்வாங்கி, அப்புரிந்துணர்வு ஒப்பந்தபடி செயற்படுவேன்.வாக்கெடுப்பில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 12:49, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவிலே துப்பரவு

தமிழ் விக்கியில் துப்பரவு செய்யப்பட வேண்டிய பக்கங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. விக்கியின் கறுப்புக் பக்கமாகவே விட்டுவிடமுடியாது. ஒரு சில பயனர்களே துப்பரவுகளில் ஈடுபடுகின்றனர். துப்பரவு வார்ப்புருக்களை இடுவதோடு மட்டும் நாம் நின்றுவிடாது கட்டுரைகளை துப்பரவு செய்யவும் முன்வரவேண்டும். இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பணிகளை ஆரம்பிக்கவும் தங்களது கருத்துக்களையும் வாய்ப்புக்களையும் யோசனைகளையும் வேண்டுகிறேன். நன்றி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:07, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

எனது விக்கி பரப்புரைப் பணிகள் முடிவுற்றபடியால் அடுத்து வரும் வாரங்களில் நான் துப்புரவு பணிகளில் ஈடுபடுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி பார்வதிஸ்ரீ :) அதிக ஆட்குழு தேவை :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:54, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
துப்புரவு பணியில், முதலில் கவனிக்க வேண்டியது எது என அறிய விரும்புகிறேன். அப்பணியில் நானும் அவ்வப்போது ஈடுபடுவேன்.--உழவன் (உரை) 01:24, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இது சம்பந்தமாக ஒருபக்கம் உருவாக்கி பங்களிக்கவேண்டும் என்பது என் எண்ணம். விரைவில் உருவாக்கி செய்யவேண்டியவைகள், முதலில் கவனிக்க வேண்டியது போன்ற விடையங்களையும் விழிப்புணர்வு செய்திகளையும் இட்டு அனைவர் வேலைகளையும் சுலபமாக்க விருப்பம். விரைவில் குறிக்கிறேன் உழவன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:27, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Aathavan jaffna: நானும் இந்தப் பணியில் பங்கெடுக்க முடியுமா எனப் பார்க்கின்றேன். தானியங்கி மூலம் செய்யக்கூடிய பணிகள் இருப்பின் எனக்குக் கிடைக்கும் குறுகிய நேரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும். இதுசம்பந்தமான பக்கத்தை உருவாக்குவதாகக் கூறியுள்ளீர்கள். அப்படியானால் இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன். நன்றி. --கலை (பேச்சு) 18:51, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி கலை, உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது. நிறையக் கட்டுரைகளைக் கொண்டுள்ள பகுப்புகளின் தலைப்புகளை மாற்றுவதற்கு தானியங்கிகள் மிகவும் பயன்படும். பயனர்கள் தங்கள் தேவைகளை விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கி வேண்டுகோள்கள் பக்கத்தில் பதியலாம். ஆனாலும், தலைப்புகளை மாற்றுவதற்கு அந்தத்தப் பகுப்புகளின் உரையாடல் பக்கங்களில் உரையாடி முடிவெடுத்த பின்னர் வேண்டுகோள் விடுப்பது நல்லது. @Ravidreams: --Kanags \உரையாடுக 20:04, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Community Wishlist Survey

MediaWiki message delivery (பேச்சு) 14:39, 1 திசம்பர் 2015 -UTC

  • நீங்கள் Community Tech சமூகத்தின், முதலாவது கருத்தாய்வை இங்கு காணலாம்.→The first part of the Community Tech team's on 9 நவம்பர் 2015 (UTC)
  • தமிழ் விக்கிக்குப் பயன்படக் கூடிய சில குறிப்பிடத்தக்க செயற்திட்டங்கள்:
    • Tool to use Google OCRs in Indic language Wikisource [1]
    • Improve the "copy and paste detection" bot [2]
    • Allow categories in Commons in all languages [3]
--Natkeeran (பேச்சு) 15:04, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  1. 👍 விருப்பம்--உழவன் (உரை) 15:26, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கூகுளின் ஒளியுணரிக் கருவியை விக்கிமூலத்துடன் ஒத்தியங்குமாறு செய்வது, தமிழ் உள்ளிட்ட பல தெற்காசிய மொழிகளுக்கு முக்கியமான தேவை. மேற்கண்ட அறிவிப்பில் கூடுதல் வாக்குகள் பெறும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என்கிறார்கள். கூகுள் கட்டற்ற உரிமத்தில் மென்பொருள் சேவைகளைத் தருவதில்லை என்பதால் இக்கோரிக்கைக்குச் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். எனவே, வலுவான, விரிவான பரிந்துரைகளுடன் குறைந்தது 50 ஆதரவு வாக்குகளாவது தமிழ் விக்கிப்பீடியர்கள் பதிவது நல்லது. விக்கிமீடியா அறக்கட்டளையால் இத்தேவையை நிறைவேற்ற முடிகிறதோ இல்லையோ குறைந்தபட்சம் இத்தேவையை நாம் உரத்துக் கூற இது ஒரு வாய்ப்பாக அமையும். இங்கே கருத்திடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:28, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

என்ன விரிவானப் பரிந்துரைகளை வைக்கலாம்? உங்களின் முன்மொழிவுகள் யாது? அறிய ஆவல்.இன்னும் 12 நாட்களே உள்ளது--உழவன் (உரை) 09:52, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
உழவன், இக்கருவியைக் கொண்டு இந்திய விக்கிமூலங்களும் மற்ற விக்கிமீடியா திட்டங்களும் பெறும் பயனின் அளவு குறித்து விவரித்து ஆதரவு வழங்கக் கோரலாம்.--இரவி (பேச்சு) 14:39, 6 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

2015 மழை

  • கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து பெய்து வரும் பெரும் மழை தமிழ்நாடு, இலங்கை உட்பட பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் பாதுகாப்பா இருக்க வேண்டுகிறேன். குறிப்பாக, சென்னையில் உள்ளவர்கள் தங்கள் நலம் பற்றி இங்கு ஒரு குறிப்பு இட்டால் நிம்மதியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 12:33, 7 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  1. சிரமங்கள் சிலவற்றை சந்தித்தாலும், நானும் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்கிறோம். ஏரித் தண்ணீர் எதுவும் எங்கள் பகுதிக்கு வரவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைக்கின்றன; மின்சாரமும், இணைய இணைப்பும் கடந்த 2 நாட்களாக தடையின்றி உள்ளது. என்னால் இயன்ற சில தன்னார்வப் பணிகளையும் செய்தேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:25, 7 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  2. சோடாபாட்டிலிடம் தொடர்பு கொண்டேன். பேச இயலவில்லை. ஆயினும் குறுஞ்செய்தி அனுப்பினார். அவரும், சூர்யாவும் நலமாக இருப்பதாகக் கூறினார். சில பங்களிப்புச் செய்தால், பிறருக்கும் தெரியவரும் என்று கேட்டுக் கொண்டேன். பொதுவன் அய்யா, நீச்சல்காரனிடம் இன்று பேசினேன். கடலூர் மாவட்டத்தில் சில இடங்களுக்கு உதவிகள் செய்வோருக்கு, அவர் கொடுத்த தகவல்களைக் கொடுத்தேன். த. இ. க. நீர் புகுந்தது. அலுவலர் நலம். ஆனால், இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. நமது கூட்டுமுயற்சியில் சற்று காலப்பின்னடைவே ஏற்பட்டுள்ளது. ஆண்டு சராசரி மழையை விட ~158% அதிகம் என்கின்றனர். 3-4 மாதங்களில் பொழிய வேண்டிய மழை. 3-4 நாட்களில் பெய்தது. தமிழகத்தின் இழப்பு இதுவரை 20,000கோடி இருக்கலாம் என்கின்றனர்.--உழவன் (உரை) 16:05, 7 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
திரு. செம்மல் அவர்களின் நலம் கேட்டறிந்தேன். மூன்று நாட்கள் இயல்பற்ற நிலையிருந்து, தற்போது இயல்பு திரும்பியிருக்கிறது என்று தெரிவித்தார். 15 நாட்களாக மின்சாரமும், இணைய இணைப்பும் இல்லா நிலையில் இருக்கிறார். உடல் நலமோடு, அவரும், அவர் குடும்பத்தாரும் உள்ளனர்.--உழவன் (உரை) 15:33, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

புரூவ் இட்

விக்கிப்பீடியா:புரூவ் இட் கருவியை அண்மையில்தான் பயன்படுத்தத் தொடங்கினேன். அடேங்கப்பா. என்ன சிறப்பான கருவி. மேற்கோளை ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளுக்கு ஏற்ப தொகுப்பதை மிகவும் எளிமையாக்கின்றது. இத்தகைய கருவிகளை மேலும் பரவலாக்க ஆவண செய்ய வேண்டுகிறேன். குறிப்பாக பயிற்சிகளில் உள்ளடக்கவும். --Natkeeran (பேச்சு) 14:29, 7 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நிச்சயமாக, இதுபோன்ற கருவிகளை ஒருசில தொகுப்புகள் செய்தபிறகு அறிமுகம் செய்வது கண்டிப்பாக பலனளிக்கும். இதுபோன்ற பிற கருவிகளையும் பயனர்களிடம் அறிமுகப்படுத்தினால் நல்லதொரு பயன் கிடைக்கும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:59, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
திரைக்காட்சிப்பதிவாக செய்யக்கோருகிறேன். குறுகிய காலத்தில் அனைவரும் கற்க ஏதுவாகும். திரைப்பதிவு நிகழ்படத்தின் தரம் முதலில் சரியாக அமையவிட்டாலும் பரவாயில்லை. செய்து தரக்கோருகிறேன். ஆறுமாதங்களுக்கு முன்னால் நானெடுத்த, எனது இந்த முயற்சியை மாதிரிக்காக காணவும்.--உழவன் (உரை) 15:59, 12 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

படிமங்கள் சோ்த்தல்

புத்தகத்தில் உள்ள படிமங்களையோ அல்லது செய்தித்தாள்களில் உள்ள படிமங்களை சோ்க்கலாமா? அவ்வாறு சோ்க்க இயலும் எனில் எவ்வாறு?

புரூவிட் பயன்படுத்தும் போது வெப்சைட் எவ்வாறு காப்பி செய்வது ?−முன்நிற்கும் கருத்து ஞானதீபம் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@ஞானதீபம்: அவை கட்டற்ற படிமங்களாகவும் (அல்லது பதிப்புரிமைக் காலம் முடிந்த படிமங்களாக) கலைக்களஞ்சியத்திற்குப் பயன்படுவனவாகவும் இருந்தால் சேர்க்கலாம். பெரும்பாலான புதிய நூல்களில் உள்ள படிமங்கள் பதிப்புரிமை பெற்றவை. சில படிமங்களை மட்டும் (எ-டு: திரைப்படச் சுவரொட்டி, நூலட்டை, வணிக இலச்சினை...) நியாயப் பயன்பாட்டின் கீழ், தரத்தைக் குறைத்துப் பதிவேற்றலாம். படிமங்களைப் பதிவேற்றஞ் செய்வதற்கு இப்பக்கத்தைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு: விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும், விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும், விக்கிப்பீடியா:படிமம்_பயிற்சி. புரூவு இட்டைப் பற்றி என்ன கேட்க வருகின்றீர்கள் எனச் சரியாகப் புரியவில்லை. இவ்வாறான ஐயங்களை ஒத்தாசைப் பக்கத்தில் கேட்க வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 14:19, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா 2016

விக்கிமேனியா 2016-விற்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவிதேவையெனில் என் பேச்சுப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கவும். விக்கிமேனியா 2016 குறித்த பக்கங்களை தமிழில் மொழிபெயர்க்க உதவி தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:57, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா பயணத்துக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் அளிக்க இன்னும் எட்டு நாட்களே உள்ளன. சனவரி 09, 2016 இறுதித் தேதி. 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியர்கள் இதில் இடைவிடாது கலந்து வருகிறோம். இந்த ஆண்டும் நிறைய பேர் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். புதியவர்கள் பலரும் வாய்ப்பு பெறும் வகையில் ஏற்கனவே விக்கிமேனியா சென்று வந்தவர்கள் (குறிப்பாக, ஒரு முறைக்கு மேல்) மீண்டும் அடுத்த சில ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்காமல் விடலாம். இது தனிப்பட்ட முறையில் முன்வைக்கும் வேண்டுகோள். மயூரநாதன் தவிர இலங்கையில் இருந்து இது வரை எவரும் பங்கேற்றதில்லை. நாடு அல்லது புவிப் பகுதி வாரியாக இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி உதவித் தொகை அளிப்பதால் இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போருக்கு கூடுதல் வாய்ப்புகள் உண்டு. இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். பின்வருவோர் விண்ணப்பித்தால் உதவித் தொகை பெறுவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளதென நினைக்கிறேன்:

ஐரோப்பாவிலேயே வாழும் நந்தக்குமார், கலை, சந்திரவதனா ஆகியோரும் இதில் கலந்து கொள்ள முனைவது சிறப்பாக இருக்கும்.

விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு, அதனைச் சிறப்பாக முன் வைக்கும் வகையில் விண்ணப்பங்களை எழுதுவது உதவித் தொகை பெறும் வாய்ப்பைக் கூட்டும். இதற்கு உதவுவதற்கு என இம்முறை சிறப்புத் தூதர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் உதவியையும் நாடலாம்.--இரவி (பேச்சு) 13:57, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

New Wikipedia Library Accounts Available Now (December 2015)

Hello Wikimedians!

The TWL OWL says sign up today!

The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:

  • Gale - multidisciplinary periodicals, newspapers, and reference sources - 10 accounts
  • Brill - academic e-books and journals in English, Dutch, and other languages - 25 accounts
  • Finnish Literature Society (in Finnish)
  • Magiran (in Farsi) - scientific journal articles - 100 articles
  • Civilica (in Farsi) - Iranian journal articles, seminars, and conferences - 50 accounts

Many other partnerships with accounts available are listed on our partners page, including EBSCO, DeGruyter, and Newspaperarchive.com. Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
--The Wikipedia Library Team 01:01, 11 December 2015 (UTC)

Help us a start Wikipedia Library in your language! Email us at wikipedialibrary@wikimedia.org
This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.

தரக்கட்டுப்பாடு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் தரக்கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பற்றி அறிய விரும்புகிறேன். இதுவரையிலும் உருவாக்கப்படாமல் இருந்தால், தற்போது அதனை உருவாக்க வேண்டுகிறேன். எனக்குத் தெரிந்தவரையில் தற்போது ஆதாரமற்ற கட்டுரைகளை தரமற்றவைகளாகக் கருதுகிறேன். குறுங்கட்டுரைகளுக்கென மூன்று வரியாக உள்ள அளவை ஐந்து முதல் பத்து வரியாக மாற்றவும் வேண்டுகோள் விடுக்கிறேன். கட்டுரையின் அளவு மட்டுமின்றி, தேவையான அடிப்படைத் தகவல்களையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:01, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தரமற்றவை என்றால் என்ன? அவை நீக்கப்பட வேண்டுமா? அல்லது அவை தரமற்ற கட்டுரைகள் எனக் கட்டுரையிலேயே தெரியப்படுத்த வேண்டுமா?--Kanags \உரையாடுக 07:21, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
தரமற்ற கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு அக்கட்டுரைகளின் பட்டியல் தேவை. கூட்டுமுயற்சியாக ஏற்கனவே உள்ள தரமற்ற கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும். புதியதாக உருவாக்கப்படும் கட்டுரைகளுக்கு சில கூடுதல் தேவைகளை உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, புதிய குறுங்கட்டுரைகளை உருவாக்கும் போது ஓரிரன்று சான்று இருத்தல் நலம். குறுங்கட்டுரைகளை விட சற்று பெரிய கட்டுரைகளுக்கு ஒரு படிமம், இரண்டு மூன்று சான்றுகள் என்று நமக்கு நாமே சில தரக்கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும். கடந்த ஓரிரு மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நன்கு உள்ளது. இத்தருணத்தைப் பயன்படுத்தி கட்டுரைகளின் தரத்தையும் உயர்த்த வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:56, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
விக்கியில் கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில் தரம் பிரிக்கலாம். ஆனால் இப்படித்தான் கட்டுரை கட்டாயம் அமைய வேண்டும் என்று உயர் தர நியமத்தை உருவாக்குவது நன்று அன்று. அப்படி என்றால் கல்வியாளர்கள் மட்டும்தான் பங்களிக்க முடியும் போன்ற ஒரு நிலை வரும். அது விக்கியின் பரந்துபட்டவர்களிடம் இருந்து சிறிக சிறுகப் பங்களிப்புக்களை உள்வாங்கி உருவாக்கும் முறையில் இருந்து மாறிவிடும். அதாவது நாங்கள் பங்களிப்புக்கு உயர் தடைகளை உருவாக்குவதை தவிர்த்தல் வேண்டும். தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுப் பரப்புரைகள், கருவிகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகள் பயிற்சியின் ஊடாக வருபவர்களால் உருவாக்கப்படுவதால், பயற்சி மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். பயற்சியுடன் அந்தப் பயன்ர்களை பின்தொடர்ந்து கூடிய ஆதரவினை வழங்குவதற்கான கட்டமைப்புத் தேவை. --Natkeeran (பேச்சு) 14:47, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இப்படித்தான் என்ற குறைந்தபட்ச தர நியமத்திற்கான கொள்கையை உருவாக்க வேண்டும். கல்வியாளர்கள் மட்டும்தான் பங்களிக்க முடியும் என்ற நிலை இராது, ஏனெனில் இது ஒரு கூட்டுமுயற்சியே. கட்டுரை உருவாக்குபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, தரநியமம் குறித்த தகவல்களையே வழங்குகிறது. யார்வேண்டுமானாலும் தரத்தை உயர்த்தலாம். புதியதாக வரும் விக்கிப்பீடியர்களுக்கு நான் காட்டும் கட்டுரைகள் சில, பட்டாம்பூச்சி, இந்தோனேசியா உள்ளிட்டவை. விழிப்புணர்வுப் பரப்புரைகள் மட்டுமின்றி, கட்டுரை தர மேம்பாட்டு வாரம்/ மாதம் என ஒதுக்கி அனைத்து விக்கிப்பீடியர்களின் நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பயிற்சி பட்டறைகளில் கட்டுரைகளின் தரம் குறித்த பயிற்சியையும் வழங்க வேண்டும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:07, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு பக்கத்தில் உரையாடலைத் தொடர்கிறேன்.--இரவி (பேச்சு) 05:44, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

புதிய நிருவாக அணுக்கங்கள்

வழமையாக ஆண்டுக்கு நான்கு பேருக்கு நிருவாக அணுக்கங்கள் அளித்து வந்தோம். ஆனால், 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளாகப் புதிதாக யாருக்கும் நிருவாக அணுக்கம் வழங்கவில்லை. இந்நிலை தொடர்வது தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதில் தேக்க நிலையை உருவாக்கும். எனவே, நிருவாக அணுக்கங்கள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும் நடந்த உரையாடல்கள், பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு நிருவாகப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேவைகளை இறுதி செய்வது நல்லது. குறைந்தபட்சம், இவ்வரையறையை இறுதி செய்தால் நிருவாக அணுக்கம் பெற விரும்புவோர் அதனை நோக்கி உழைக்க முடியும். அனைவரின் கருத்துகளையும் வேண்டுகிறேன். இங்கு வாருங்கள். --இரவி (பேச்சு) 06:49, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

This is a message from the Wikimedia Foundation. Translations are available.

As many of you know, January 15 is Wikipedia’s 15th Birthday!

People around the world are getting involved in the celebration and have started adding their events on Meta Page. While we are celebrating Wikipedia's birthday, we hope that all projects and affiliates will be able to utilize this celebration to raise awareness of our community's efforts.

Haven’t started planning? Don’t worry, there’s lots of ways to get involved. Here are some ideas:

Everything is linked on the Wikipedia 15 Meta page. You’ll find a set of ten data visualization works that you can show at your events, and a list of all the Wikipedia 15 logos that community members have already designed.

If you have any questions, please contact Zachary McCune or Joe Sutherland.

Thanks and Happy nearly Wikipedia 15!
-The Wikimedia Foundation Communications team

Posted by the MediaWiki message delivery, 20:58, 18 திசம்பர் 2015 (UTC)Please help translate to your languageஉதவி[பதிலளி]

த. வி - த. இ. க. கூட்டு முயற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான அழைப்பு

வரும் சனவரி 9, 2016 சனிக்கிழமை காலை இந்திய நேரம் 10:00 மணி அளவில், தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில், த. வி - த. இ. க. கூட்டு முயற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இது தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்று கூடலாக அமைவதுடன் அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக கையெழுத்திட்டுச் சிறப்பிப்பதும் நன்றாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:41, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தரவுத்தள கட்டுரைகள் கொள்கை இற்றை

தரவுத்தள கட்டுரைகள் பதிவேற்றம் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் கட்டற்ற முறையில் அமைந்திருப்பதும் முறைமைகளை ஆவணப்படுத்துவதும் இன்றியமையாததாகிறது. எனவே, இது தொடர்பான கொள்கையில் மாற்றத்தைப் பரிந்துரைத்துள்ளேன். அனைவரும் தங்கள் கருத்துகளை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:46, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியின் தொழிற்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்ட பிறகு இக்கொள்கையை வகுத்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். விக்கி தொழில்நுட்பத்தை, கணினியில் பட்டம் வாங்கியவருக்கு மட்டும் புரியாமல் அனுபவத்தில் கற்றவருக்கும் புரியும் விதத்தில் கற்றுக் கொள்ள வாய்ப்பை வழங்கிவிட்டால் பிற தொழிற்நுட்பத்தை நாடும் அவசியம் இருக்காது. மேலும் விக்கிமீடியாவின் நிதி நல்கை கிடைக்காமல் கைவிடப்பட்ட கட்டற்ற திட்டங்களுக்கு மாறாக நிதி நல்கை எதிர்பார்க்காமல் உருவாகும் நன்நோக்கு திட்டங்களை அனுமதிக்கலாம் என நினைக்கிறேன். ஆங்கில விக்கி தானியங்கி உருவாக்கம் பக்கத்தில் இருந்த கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் தானியங்கி குறிப்பைப் பொருட்டாகக்கூட கொள்ளாமல் நீக்கப்பட்டது. அப்படிப்பட்ட நுட்பத்தில் நானும் தானியங்கியை இயக்க வேண்டியிருக்காது. தற்போது இயங்கிவரும் neechalbot தானியக்கச் செயல்பாடுகள் ஆவணமாக்கப்பட்டாலும் நிரல்கள் கட்டற்ற முறையில் தான் இருக்க வேண்டுமா என இப்போதே முடிவுசெய்தால் அதையும் நிறுத்திவிடுகிறேன். கட்டற்ற நுட்பத்தைக் கற்க முடிந்தால் அங்கே தானியங்கியை உருவாக்குகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)
இங்கு உரையாடலைத் தொடர்கிறேன்.--இரவி (பேச்சு) 07:24, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விடுமுறை வாழ்த்துகள் !!

விக்கிப்பீடியா பயனர்களுக்கு இனிய கிறித்துமசு மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 06:17, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கிறித்துமசைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:06, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.--கலை (பேச்சு) 19:58, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

100,000 கட்டுரைகள்

100,000 கட்டுரைகள்
100,000 கட்டுரைகள்

2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிட திட்டங்களுக்காக முன்மொழிவை இங்கு பதிவிடுகிறேன். நீக்கப்படக்கூடிய கட்டுரைகள் போக 82,200 கட்டுரைகள் உள்ளதாகக் கொள்வோமாயின், 100,000 கட்டுரைகளுக்கு 17,800 கட்டுரைகள் தேவை. ஆகவே, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 48 கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும். இங்கு கிட்டத்தட்ட 30 முனைப்பான பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போதைய புதிய கட்டுரைகளின் சராசரி 15 கட்டுரைகள். முனைப்பான பங்களிப்பாளர் ஒருநாளைக்கு 2 கட்டுரைகள் உருவாக்கினால் 2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிடும்.

ஒரு மாதம் மட்டுமே இடம்பெற்ற ஆசிய மாதம் 2015 திட்டம் 265 (நிகர) கட்டுரைகளை பெற்றுளளது. ஆனால், இதன் மொத்தம் சுமார் 275 இருக்கலாம். கிட்டத்தட்ட 9 கட்டுரைகள் ஒரு நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொரும்பாலான (236) கட்டுரைகள் 300 சொற்களைத் தான்டியவை ஆகும். குறுங்கட்டுரைகளா எழுதியிருந்தால் கிட்டத்தட்ட 500 இற்கு மேலான கட்டுரைகளை உருவாக்கியிருக்கலாம்.

என்ன செய்யலாம்?
  • முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையக் கூட்டுவது.
  • முனைப்பான பங்களிப்பாளர்களை ஒருநாளைக்கு குறைந்தது 2 கட்டுரைகளை எழுத ஊக்குவிப்பது.
அதற்காக:
நன்மைகள்
  • 1000, 2000, ..... கட்டுரைகளை உருவாக்கிய பயனர்கள் பலர் கிடைப்பர்.
  • பல...
இல்லாவிட்டால்
  • தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை அடைய (தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குப்படாதவிடத்து) இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

பயனர்களின் கருத்தும் ஆதரவும் இருப்பின், முதற்கட்டமாக 3 மாதங்களுக்காக விக்கி கோப்பையை ஆரம்பிக்கலாம். --AntanO 07:12, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

AntanO அவர்களே, தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. த. விக்கியின் 60,000மாவது கட்டுரை 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் ஒரு வருடமும் எட்டு மாதங்களும் (20 மாதங்கள்) கடந்த பின்னரே சென்ற ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விக்கியின் 70,000மாவது கட்டுரை உருவாக்கப்பட்டது. அதற்கும் மூன்று மாதங்களும் நிறைவடையாத நிலையில் 12,000த்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது, த.விக்கியின் அபரிமித வளர்ச்சியைக் குறித்து நிற்கின்றது. வெகு விரைவிலேயே 100,000கட்டுரைகள் எனும் இலக்கை எட்டிவிடலாம் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை! நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:47, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிக் கோப்பையை ஆரம்பிக்க எனது ஆதரவை வழங்குகிறேன் அன்டன். 100 விக்கிநாட்கள் மற்றும் 365 விக்கிநாட்கள் என்பன சலிப்பை ஏற்படுத்தக் கூடியன. தனித்துச் செயற்பட வேண்டும். விக்கிக் கோப்பை என்றால் போட்டியாக ஒரு உந்துசக்தியுடன் செயற்பட முடியும். சலிப்பை ஏற்படுத்தாதவாது விக்கிக் கோப்பையை வடிவமைக்கவும் வேண்டும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:14, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
100,000 என்ற இலக்கு நோக்கி இல்லாவிடினும் இத்தகைய போட்டிகள் பயனர்களுக்கு ஓர் உந்துதலாகவும் சலிப்பை அகற்றுவதாகவும் இருக்கும். ஆயினும் போட்டியை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டுரையாக்கத்தினை தவறாகப் பயன்படுத்துவோரை கண்காணிக்க வேண்டியிருக்கும். மாற்றாக ஆசிய மாதம் போல வெவ்வேறு தலைப்புகளில் மாதவாரியாக போட்டி நடத்தலாம். காட்டாக, சனவரி வரலாறு மாதம், பெப்ரவரி ஒலிம்பிக் போட்டிகள் மாதம், மார்ச்சு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்/ அரசியல் மாதம், ஏப்ரல் இலக்கியவாதிகள் மாதம், மே பறவைகள்/தாவரங்கள் மாதம் என்றவாறு...அந்தந்த மாதங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆண்டு நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடையாளப் பரிசுகள் தரலாம். --மணியன் (பேச்சு) 15:32, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 15:34, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 16:08, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
அன்டனுடைய முயற்சியை வரவேற்கிறேன். நிச்சமாக தற்போது கட்டுரைகள் உருவாகும் வேகத்தைக் கூட்டவேண்டியது அவசியமானது. விக்கி கோப்பை போன்றவற்றின் மூலம் கட்டுரை உருவாக்கத்தின் வேகத்தைக் கூட்டவும், அதேவேளை பங்களிப்பவர்களைச் சோர்வின்றி உற்சாகமாக வைத்திருக்கவும் முடியும். ஆனால், இதன்மூலம் ஏறத்தாழ 18,000 கட்டுரைகளை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள், விக்கிப்பீடியா:விக்கி365 போன்றவை ஆதவன் எடுத்துக்காட்டியது போல் சலிப்பூட்டக்கூடியவையே. இதில் போதிய பலன் கிடைப்பது கடினம். எனவே 18,000 கட்டுரைகளை ஒரே ஆண்டில் உருவாக்க வேண்டுமானால் இவ்விடயத்தைப் பல வழிகளில் அணுகவேண்டியிருக்கும். குறிப்பாக, ஏற்கெனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் அப்பால், புதியவர்களின் பங்களிப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் இலக்கை சுலபமாக அடையமுடியும்.
அளவுக்கு அதிகமாகத் தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு கட்டத்திலும் தானியங்கிக் கட்டுரைகள் 10%க்கும் குறைவாக இருப்பது நல்லது என்பது எனது கருத்து. தற்போதைக்கு, அன்டனின் கருத்துப்படி விக்கிக்கோப்பையைத் தொடங்கலாம். இதில் படிப்படியாக பல குழுக்கள் நீக்கப்பட்டுவிடும் ஆதலால், பிற்பகுதியில் உருவாகும் மொத்தக் கட்டுரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வேறு ஏதாவது ஒழுங்குகளின் மூலம் பிற்பகுதியிலும் எல்லோரும் தொடர்ந்து பங்களிப்பதை ஊக்குவிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். மணியனின் முன்மொழிவையும் கருத்தில் கொள்ளலாம். --மயூரநாதன் (பேச்சு) 17:28, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கிக்கோப்பை பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விக்கிக்கோப்பை பற்றிய மேலதிக உரையாடல்களைத் தொடரலாம். அங்கு பெறப்படும் முடிவுகளின்படி இற்றைப்படுத்தலாம். கருத்துக்கள் தேவையான பகுதிகள்: காலம், தலைப்பு, புள்ளி முறை ஆகியன. --AntanO 19:27, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 14:07, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

புதிய முனைப்பான பயனர்களைப் பெறுதல், ஏற்கனவே உள்ளவர்களைத் தக்கவைத்து ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை உறுதி செய்யும் போது எல்லாம் தரமான கட்டுரை எண்ணிக்கை தானாகவே கூடுவதைக் கண்டிருக்கிறோம். 17,800 கட்டுரைகள் என்றால் மலைப்பாக உள்ளது மாதம் 1,500 கட்டுரைகள் என்றால் இலகுவாக இருக்கிறது. பல மாதங்கள் இயல்பாகவே ஆயிரம் கட்டுரைகள் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறோம். பொதுவாக, நாம் கட்டுரை எண்ணிக்கை இலக்குகளை வைப்பதில்லை என்றாலும் பல பயனர்கள் தாமாகவே இந்த இலக்கு நோக்கி உழைப்பதாக தங்கள் பயனர் பக்கங்களில் அறிவித்திருக்கும் பின்னணியில், இம்முனைவு ஏற்புடையதாக இருக்கிறது. கூகுள் ஒளியுணரி துணை கொண்டு, நாம் கொடையாகப் பெற்ற கலைக்களஞ்சியம் தரும் தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொணர்ந்து இற்றைப்படுத்தலாம். இந்த வகையில் முக்கியமான தலைப்புகளில் சில ஆயிரம் கட்டுரைகள் ஏற்றுவதை உறுதி செய்யலாம். தற்போது நடக்கும் விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் திட்டத்திலும் இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:14, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா 15 - யாழ்ப்பாண நிகழ்வு

விக்கிப்பீடியாவின் பதினைந்தாவது பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் நிகழ்வு 2016 சனவரி 16 மாலை 3 மணியளவில் இடம்பெற ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்கள் இங்கு இற்றைப்படுத்தப்படும். மதனாஹரன், உமாபதி, குணேசுவரன் ஆகியோர் கலந்துகொள்ள முடியுமா? --சிவகோசரன் (பேச்சு) 14:17, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Sivakosaran: யாழ். நகரில் ஒழுங்குசெய்யப்பட்டால், பெரும்பாலும் கலந்துகொள்ள முயல்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 14:23, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
அருமை. வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 14:31, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 05:30, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
சிவகோசரன், நிகழ்வு மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சனவரியில் நான் இரண்டு மூன்று நாட்களுக்கு வேறு வேலையாக இலங்கை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், எப்போ என்பது தெரியாது. குறித்த தேதியை அண்டி வந்தால், கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.-- மயூரநாதன் (பேச்சு) 17:43, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். நன்றி இரவி, நந்தகுமார். மயூரநாதன், தங்கள் வருகை நிகழ்வை மேலும் சிறப்பாக்கும். மதனாகரன், ஆம், நகரில் தான். பொருத்தமான இடம் கிடைத்ததும் இற்றைப்படுத்துகின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 14:28, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சிவகோசரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:18, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். நன்றி.--சிவகோசரன் (பேச்சு) 16:01, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

டுவிங்கிள்

டுவிங்கிள் கருவியை இங்கு செயற்படுத்த முனைகிறேன். ஆகவே, இதற்குத் தேவையான மொழிபெயர்ப்பு, தொழினுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --AntanO 20:56, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

HotCat-விரைவுப்பகுப்பி எனப் பெயரிட்டதுபோல், துவிங்கிளுக்கும் ஒரு தமிழ்ப் பெயரைப் பரிந்துரைக்க வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:30, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இரவி எனக்கு மடலில் குறித்த (மின்னல் வேகத்தில் பராமரிப்புப் பணிகளைச் செய்ய உதவலாம் என்பதால்) மின்னல் என்ற பெயரைப் பயன்படுத்துகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:40, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இறக்குமதி

டுவிங்கிள் கருவிக்குத் தேவையான சில நூறு வார்ப்புருக்கள் (கிட்டத்தட்ட 600 வார்ப்புருக்கள்) இறக்குமதி செய்யப்பட அல்லது உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் விக்கியில் இறக்குமதி செய்யும் வசதி இல்லாததால், அவ்வசதியை வழங்குமாறு "phabricator" இல் வழு பதிய விரும்புகிறேன். அங்கு வழு பதிய இங்குள்ள விக்கிச் சமூகத்தின் ஆதரவு தேவை. ஆகவே, ஆதரவு அளிப்பீர்களானால் அங்கு வழு பதிய முடியும். நன்றி. --AntanO 21:26, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இது தற்போது இங்கு நகர்த்தப்பட்டுள்ளது. அங்கு உங்கள் ஆதரவு, எதிர்ப்பு, கருத்து என்பவற்றைத் தெரிவியுங்கள். நன்றி.--AntanO 17:14, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வருவாய்கிராமம்

வருவாய்கிராமங்களின் பட்டியலை தொகுக்க முயற்சித்தபோது அதே பெயரில் கிராமங்கள் அல்லது பேரூராட்சி அல்லது நகராட்சி பற்றி அதே ஊரை பற்றி கட்டுரை உள்ளது. பழைய கட்டுரையில் வருவாய்கிராமம் பற்றி தகவலை சேர்ப்பதா அல்லது (வருவாய்கிராமம்) என புதிய கட்டுரை எழுதுவதா? எது சிறந்தது? விளக்கவும்.--நிர்மல் (பேச்சு) 12:43, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வருவாய் கிராமங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதப் போகிறீர்களா? அல்லது வருவாய் கிராமங்களின் பட்டியல் மட்டும் தரப் போகிறீர்களா? பட்டியல் மட்டும் என்றால் உள்ளிணைப்பு இல்லாமல் பெயரை மட்டும் தாருங்கள். தனித்தனிக் கட்டுரை எழுதுவதாக இருந்தால், ஒரு தனிக் கட்டுரை எழுதுவதற்கு ஏற்ப தகவல்கள் உள்ளனவா? இல்லாவிடில், கிராமம் பற்றிய கட்டுரையில் வருவாய் கிராமத்தின் தகவல்களையும் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 04:05, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பை போட்டித் திட்டத்தை கொண்டு செல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தேவை. உங்கள் பெயர்களை திட்டப்பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள். நன்றி --AntanO 21:07, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Antan அவர்களே என்னாலான உதவிகளை ஒருங்கிணைபாளராக வழங்க முடியும் எனினும் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒருங்கிணைப்பாளரா இருக்கலாமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:52, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆம், நீங்கள் உருவாக்கிய அல்லது விரிவாக்கிய கட்டுரைகளை இன்னொருவர் மதிப்பீடும்படி பார்த்துக் கொள்வோம். ஆகவே அங்கு நல முரண் இருக்காது. ஆசிய மாதப் போட்டியிலும் அவ்வாறே செய்தோம். --AntanO 13:36, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:43, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

tt-ற்ற என்பதைப் பற்றி

பீற்றர் பெர்சிவல் அவர்கள் தொகுத்து 1861 ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தனது Anglo-Tamil Dictionary இல் ஆங்கிலத்தின் tt என வருமிடங்களில் தமிழின் ற்ற ஆகிய எழுத்துக்களைப் பிரதியிடுவதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

ற்ற ŗŗ is similar to tt in pattern—as பற்றி paŗŗi; when ற் ŗ is preceded by ன் n, it has very nearly its natural power—as கன்று kanŗu, பன்றி panŗi; when we mute before a consonant, it has the sound of the cerebral ţ—as கற்பனை kaŗpanai.

--பாஹிம் (பேச்சு) 03:11, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் @Fahimrazick: இலங்கையின் சில பகுதிகளில் ற்ற என்பதை tra என்றும் பலுக்குவதுண்டா? தங்கள் பழைய தொகுப்புகளில் அவ்வாறு கூறியிருக்கிறீர்கள். பாடநூல்களில் Nitrite-நைத்திரைற்று என்றே எழுதப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் ற்ற-tta என்றே பலுக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 03:17, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ற்ற என்பதை tra என்று மொழிவதே முறை. ஆனால் ஆங்கிலத்தின் tt என்பதைத் தமிழில் ற்ற என்றெழுதுவதே பொருத்தமென்கிறார் பெர்சிவல். அப்போது தமிழில் ட்ட என்று மொழியாமல் அதையும் ற்ற (tra) என்றே மொழிய வேண்டும். இம்முறையே இலங்கையில் பின்பற்றப்படுகிறது. tt என்பதை ட்ட என்றெழுதுவது தவறன்று. இவ்விரண்டுக்குமிடையே சிறிது ஒலிப்பு நுணுக்கங்கள் காணப்படுகின்ற போதிலும் தமிழில் அவற்றைக் கருத்திலெடுக்க வேண்டியதில்லை. மாறாக நாம் ஓரிடத்தில் ஒரு மாதிரியும் மற்றோரிடத்தில் இன்னொரு மாதிரியும் எழுதிக் குழப்பக் கூடாது. அதனாலேயே நான் இலங்கை வழக்கைப் பின்பற்றுகிறேன். ட்ட என்பதை ஒரு சிலர் dd என்று மொழிவதுண்டு. ஆனால் அதற்கு எந்த விதியுமில்லை. அவ்வாறே ற் என்பதை ர் எனப் பிழையாக வாசிப்போருமுளர். அத்துடன் tr என்பது தமிழில் ற்ற என்று மாத்திரமே வர முடியும். சிலர் எழுதுவது போல் ட்ர (பெட்ரோல்) என்பது போன்று எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாது.--பாஹிம் (பேச்சு) 03:32, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ட்ர என்பது ஒவ்வாததே. இலங்கையில் traஉம் ற்ற என்பதால் குறிக்கப்படுகின்றது. ட்ட என்பத ttaஇற்கு நெருங்கிய ஒலியே. tta அன்று. tta என்பதைக் குறிப்பதற்கு, சொல்லுக்கேற்ப, ற்ற அல்லது ட்டவைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 03:46, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி

வாழைப்பழம் (Banana), வாழை (Musa acuminata) அப்படியென்றால் Musa × paradisiaca என்ற அறிவியல் வார்த்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 06:07, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]

  1. வாழை (முசா × பாரடைசியாக) என்று கட்டுரைக்கு தலைப்பு இடுங்கள். பின்பு கட்டுரையைத் தொடங்கும் போது, வழமையாக நாம் தொடங்குவது போல, பின்வருமாறு கட்டுரையைத் தொடங்கவும். முசா × பாரடைசியாக (தாவரவியல் பெயர்: Musa × paradisiaca) என்பது வாழையின் கலப்பினங்களில் ஒன்று. இது Musa acuminata என்ற நாட்டு இனச் சிற்றனத்தையும், Musa paradisiaca என்ற காட்டு இன வாழையினத்தையும் கொண்டு கலப்பின முறையில் உருவாக்கப்பட்ட வாழை மரமாகும். இந்த காட்டு இனத்தின் தாவரவியல் பெயர், Musa balbisiana, என தாவரவியல் சமூகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய வகைப்பாட்டியல் முறையை, விக்கியினங்களில், இங்கு உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது பழைய தாவரவியல் வகைப்பாட்டு முறை.இதுபோன்ற தாவரவியல் கட்டுரையை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். en:APG III system என்பதை மொழிபெயரப்பு செய்யுங்கள். பல இலட்சகணக்கான தாவரங்களுக்கு அதுவே தற்போதுள்ள நடைமுறை தாவரவியல் வகைப்பாடு ஆகும்.கூகுளின் ஒலிபெயர்ப்பை விட, இத்தளத்தின் ஒலிப்பெயர்ப்பு 90%சரியாக இருக்கும். மீதமுள்ள10% ஒலிபெயர்ப்பை நாம்தான் சரிசெய்யணும். வணக்கம். --உழவன் (உரை) 01:41, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  2. முசா × பாரடைசியாக்கா என்று தலைப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி 01:52, 3 சனவரி 2016 (UTC)
    நானும் உங்களைப் போன்றே, முதலில் எண்ணினேன். ஆனால், வாழையில் பல சிற்றினங்கள் உள்ளன. நாம் தேடுசாளரத்தில் தேடும் போது, வாழை என்று அடித்தால், அதன் கீழே இதுவும் தோன்ற வாய்ப்புண்டு. தாவரவியல் பெயரில் தேடுபவர் குறைவே, அப்படியே தேடினாலும், மற்ற சிற்றனங்களை, தேடு சாளரத்திலேயே காண இயலாது போகிவிடும் என்பதால் மேற்கண்ட பெயரை பரிந்துரைத்தேன். ஒரு கட்டுரயைத் தேடி வருபவர், அவர் தேடும் போது, நமது கட்டுரை வளத்தையும் காண வைக்க வேண்டியது, நமது கடமையாக எண்ணுகிறேன். --உழவன் (உரை) 02:00, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பயனர்:மதனாகரன்

இந்தச் செய்தியின்படி சிறப்புப் பெறுபேறு பெற்றவர் பயனர்:மதனாஹரன் அல்லவா? உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! கோபி (பேச்சு) 08:36, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]