பீட்டர் பெர்சிவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீட்டர் பெர்சிவல்
Peter Percival.jpg
பிறப்பு1803
இறப்புசூலை 11, 1882
ஏற்காடு, இந்தியா
பணிகல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தி அறிவிப்பாளர்

பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803சூலை 11, 1882) ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும் மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும் ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பெர்சிவல்&oldid=3067251" இருந்து மீள்விக்கப்பட்டது