விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தரவுத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே போன்று உருவாக்கப்படும் எண்ணற்ற கட்டுரைகளின் உருவாக்கம் தொடர்பாக ஒரு கொள்கையை முன்மொழிகிறோம்:

முன்மொழிவோர்: இரவி, சோடாபாட்டில்

இந்தக் கொள்கை முன்மொழிவு தொடர்பாக அனைவரின் கருத்துகளை அறிய விரும்புகிறோம். நன்றி.--இரவி 12:47, 28 சனவரி 2012 (UTC); --சோடாபாட்டில்உரையாடுக 12:54, 28 சனவரி 2012 (UTC)[]

கொள்கை:

தமிழ் விக்கிப்பீடியா தரவுத்தள கட்டுரைகள் உருவாக்கத்தைத் தடுப்பதில்லை. எனினும், சிறிய சமூகமான தமிழ் விக்கிப்பீடியாவின் வளங்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கட்டுரைகளை முதல் தொகுப்பிலேயே பிழையின்றியும் இலகுவாகவும் பதிவேற்றுவது எப்படி என்பதை முறைப்படுத்த இக்கொள்கை விழைகிறது.

முறைமை:

 • தரவுத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே போன்று குறைந்தது 100 கட்டுரைகளுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உருவாக்கப்படும் கட்டுரைகள் இந்தக் கொள்கையின் கீழ் வரும். பல கட்டுரைகளில் உள்ள எண், பெயர் போன்ற தரவுகளை நீக்கினால், அனைத்துக் கட்டுரைகளும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருந்தால் இவை தரவுத்தள கட்டுரைகள் எனக் கருதப்படும். எடுத்துக்காட்டுகள்: மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரம் அடிப்படையில் ஊர்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகள், ஒவ்வொரு திரைப்படம் குறித்த விவரிப்புகள் ஏதும் இல்லாமல் IMDB அடிப்படையில் எழுதப்படும் கட்டுரைகள், விளையாட்டு வீரர்கள் பற்றிய புள்ளி விவரங்கள், தேர்தல் முடிவுகள் மட்டும் கொண்ட கட்டுரைகள்.
 • ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது மூன்று வரி இருக்க வேண்டும். கூடுதல் தகவலை தகவற்பெட்டி மூலம் தர முனைய வேண்டும்.
 • ஒவ்வொரு கட்டுரையிலும் தகுந்த உசாத்துணை அல்லது வெளி இணைப்பு, விக்கியிடை இணைப்புகள் இருக்க வேண்டும்.
 • கட்டுரைகள் எழுத்து, இலக்கணம், தகவல் பிழைகள் அற்றவையாக இருக்க வேண்டும்.
 • எத்தலைப்பைப் பற்றிய கட்டுரையாகவும் இருக்கலாம். அத்தலைப்பு குறிப்பிடத்தக்கதா, கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றதா என்று மட்டுமே பார்க்கப்படும். எத்தனைப் பேருக்குப் பயன்படும், தமிழருக்குப் பயன்படுமா என்பது போன்ற அடிப்படைகளில் மட்டுறுத்தப்படாது.
 • சில தரவுகளைத் தனித்தனிக் கட்டுரைகளாக இடுவதைக் காட்டிலும் ஒரே பட்டியல் பக்கத்தில் இட்டால், தரவுகளை அடுக்கிப் பார்க்கவும் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஏதுவாக இருக்கும். இது போன்ற வேளைகளில், தனித்தனிக் கட்டுரையாக இடாமல் தகவலை வேறு விதமாக இடுவது சிறப்பாக இருக்குமா என்று பரிந்துரைக்கப்படும். தகவல் மட்டுறுத்தப்படாது. ஆனால், தகவலை விக்கிப்பீடியாவில் சிறப்பாகத் தருவதற்கு ஏற்ற வடிவம் பரிந்துரைக்கப்படலாம்.
 • கட்டுரைகளைத் தானியங்கி கொண்டு உருவாக்க இயலுமானால், அதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப்படும். இதன் மூலம், கட்டுரையை உருவாக்குவோர், கண்காணித்து உரை திருத்துவோர் ஆகிய அனைவருக்கும் நேரம், உழைப்பு மிஞ்சும். கட்டுரைகளை உருவாக்கும் பயனர் தனக்கான ஒரு தானியங்கிக் கணக்கு தொடங்கி அதில் இருந்து கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும்.
 • மேற்கண்ட தேவைகளை நிறைவு செய்த பிறகு, சில மாதிரிக் கட்டுரைகள் உருவாக்கப்படும். வெவ்வேறு தரவுகளுக்கு வெவ்வேறு மாதிரிகள் / படிவங்கள் / வார்ப்புருக்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் சில மாதிரிக் கட்டுரைகள் இங்கு இட வேண்டும்.
 • இந்த மாதிரிக் கட்டுரைகளைக் கவனித்து ஒப்புதல் பெற 14 நாள் காலம் தர வேண்டும். இந்த 14 நாள் காலத்தில் இக்கட்டுரைகளின் மாதிரிகளை மேம்படுத்த தமிழ் விக்கிப்பீடியா பயனர் சமூகம் முனையும்.
 • மாதிரிகளைச் சரி பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, பயனர்கள் கட்டுரைகளைப் பதிவேற்றலாம். ஒரு வேளை இக்கட்டுரைகளின் தன்மையால் இவற்றில் உள்ள தகவலைக் கண்காணிக்க வேண்டிய தேவை இருந்தால், மாதம் 300 கட்டுரைகளை மட்டுமே பதிவேற்றுமாறு வேண்டலாம். இத்தகைய தேவை இல்லாவிட்டால், ஒரே மூச்சில் அனைத்துக் கட்டுரைகளையும் பதிவேற்றலாம்.

பயனர் கருத்துகள்[தொகு]

 • நன்றாக உள்ளது. 2012இன் இன்னொரு நல்ல தொடக்கம். :) வாழ்த்துகள். முடிந்த உதவிகளைச் செய்கிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:51, 28 சனவரி 2012 (UTC)[]
 • நன்றாக வரைந்த முன்வரைவு, இரவி! இப்படி வார்ப்புருவினால் உருவான கட்டுரை என்று ஒரு பகுப்பும் இருந்தால் பயனுடையதாக இருக்கும்.--செல்வா 12:59, 28 சனவரி 2012 (UTC)[]
+1 வழிமொழிகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 13:02, 28 சனவரி 2012 (UTC)[]
பகுப்பு:தரவுத்தள கட்டுரைகள் என்று இடலாமா? திரைப்படங்கள், ஊர்ப்பெயர்கள், துடுப்பாட்டக்காரர்கள் போன்ற ஏற்கனவே உள்ள தலைப்புகளிலும் இதனை இடுவது ஒட்டு மொத்தமாக தமிழ் விக்கிப்பீடியாவில் எத்தனை கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அறியவும் துப்புரவுப் பணிகளுக்கும் உதவும்.--இரவி 08:23, 29 சனவரி 2012 (UTC)[]
 • பயனுள்ள நல்ல முயற்சி --Nan 13:06, 28 சனவரி 2012 (UTC)[]
 • வரவேற்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:20, 28 சனவரி 2012 (UTC)[]
 • தானியங்கிக் கணக்கு தொடங்கி பதிவேற்ற எல்லோருக்கும் தெரியுமா? அதனால் அதனை கட்டாயமாக்காமல் 'தானியங்கி உதவிக்கு மற்ற பயனர்களும் உதவுவார்கள்/உதவலாம்' என்பதையும் சேர்க்கவும். -- மாகிர் 13:50, 28 சனவரி 2012 (UTC)[]
//கட்டுரைகளைத் தானியங்கி கொண்டு உருவாக்க இயலுமானால், அதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்.// என்றே குறிப்பிட்டுள்ளோம். தானியங்கி பயன்படுத்துதல் கட்டாயமாக இருக்காது. ஆனால், அதற்கான வாய்ப்பு இருந்தால் அதற்கான உதவியை வழங்க வேண்டியது பயனர் சமூகத்தின் கடமை. எனவே, இயன்றவரை தானியங்கிப் பயன்பாட்டுக்கு உதவுவோம்.--இரவி 15:24, 28 சனவரி 2012 (UTC)[]
 • மிகவும் பயனுள்ள நல்ல முன்வரைவு. நானும் வழிமொழிகின்றேன்.--கலை 14:05, 28 சனவரி 2012 (UTC)[]
 • நல்ல திட்டம்... நானும் வரவேற்கிறேன்--shanmugam 15:17, 28 சனவரி 2012 (UTC)[]
 • தரவுத்தள கட்டுரைகளைச் சீர்ப்படுத்தும் முகமாக இவண் தரப்படுகின்ற கொள்கைக்கும் முறைமைக்கும் என் ஆதரவைத் தெரிவிக்கிறேன். ஆயினும் கடந்த சில நாள்களாக ஆலமரத்தடியில் நடந்த சில கடுமையான உரையாடல்களின் தரம் கண்டு உளம் சோர்ந்த நிலையில் கீழ்வரும் திருத்தங்களை முன்மொழிகின்றேன். பொருத்தமானவை என்று கண்டால் ஏற்றுக்கொள்க:


1) இந்த வரைவு தமிழ் விக்கிக்கே உரித்தான ஒன்றா, அல்லது வேறு மொழி விக்கிகளும் இத்தகைய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளனவா? பிற மொழிகளுக்கு இல்லாத கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதிப்பதாக இருந்தால் அதனால் விக்கியின் பொதுவான "கட்டற்ற தன்மை" மீறப்படுமா? பிற மொழிகளுக்கும் உண்டு என்றால் அதற்கான ஆதாரத்தை விக்கியிடை இணைப்புகள் வழியாகக் காட்டலாமா?
2) கட்டுரைகள் குறைந்தது 3 வரிகள் என்பதை 5 வரிகள் என்று மாற்றலாம். காரணம்: விக்கிப்பீடியா விக்சனரி அல்ல, மிகக் குறைந்த தகவல் கொடுத்தாலும் 5 வரிகளாவது இருப்பது நல்லது. நானறிந்தவரை வேறெந்த கலைக்களஞ்சியமும் 3 வரியில் கட்டுரைகள் தருவதில்லை.
3) எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தகவல்பிழை எந்தவொரு விக்கி கட்டுரையிலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் ஆதாரம் (உசாத்துணை) தரவேண்டும் என்பதும் விக்கியின் பொதுவான நெறிமுறை. எனவே, அதற்கான விக்கியிடை இணைப்பு கொடுத்தல் நலம்.
4) இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பல உரையாடல்கள் தேவைப்படும். கட்டுரையை எழுதும் பயனர் முதலில் தன் திட்டத்தை அறிவிக்க வேண்டும், அதற்கான இசைவு பெற வேண்டும், மாதிரி கட்டுரை எழுத வேண்டும், வார்ப்புரு உருவாக்க வேண்டும், 14 நாள்கள் காத்திருக்க வேண்டும்.... இக்காரியங்கள் எல்லாம் நடைபெறும்போது பயனர்களிடையே கருத்துகள் பரிமாறப்படும். எனவே, அக்கருத்துப் பரிமாற்றம் "விக்கிப்பீடியா:நற்பழக்கங்கள்" அடிப்படையில் "கண்ணியமாக" நடைபெற வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுவது தேவை என்பது என் கருத்து. கடந்த சில நாள்கள் நடந்த உரையாடல் கண்ணியமான முறையில் நடைபெறத் தடையாக இருந்தது யாது என்பது குறித்து இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. எனவேதான் இதைக் கூறுகின்றேன்.
5) இக்கொள்கை புதிதாக அறிவிக்கப்படவிருப்பதால், இதற்கு முன் எழுதப்பட்ட "தரவுத்தள" மாதிரியான கட்டுரைகளை என்ன செய்வது, எவ்வாறு சீர்ப்படுத்துவது என்பது குறித்து ஒரு வழிமுறை கொடுப்பது நல்லது. அக்கட்டுரைகளை ஆக்கிய பயனர்களின் ஒத்துழைப்பை நாடுவது நல்லது. இதையெல்லாம் புதிய கொள்கையில் இணைத்தால் தமிழ் விக்கியின் தொடர் செயல்பாடு எளிதாகும்.
6) நான் மேலே கூறியது போன்று, இக்கருத்துகள் பயனுள்ளவையாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்புடன் இங்கே தரப்படுகின்றன. இவை பொருத்தமற்றவை என்று கருதி விடப்பட்டால் அதனால் வேறு இடரொன்றும் இல்லை. விக்கிக் குழும பெரும்பான்மை நிலைப்பாட்டினை விவாதங்களில் ஈடுபடுவதை விடுத்து, ஏற்கிறேன். --பவுல்-Paul 16:53, 28 சனவரி 2012 (UTC)[]

👍 விருப்பம் மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் தேவையான பரிந்துரை. பண்பாகச் சொன்னாலும் பகடி செய்யும் பண்பாடாகவும் எடுதெறிந்தாற்போல் "எரிச்சலூட்டுகின்றது" என்றும் "ஒன்றும் சட்டம் கிடையாது", என்னும் போக்கிலே போகும் இக்காலத்தில் நீங்கள் கூறும் "விக்கிப்பீடியா:நற்பழக்கங்கள்" அடிப்படையில் கண்ணியமாக நடைபெற வேண்டும் என்பதை அங்கும் எடுத்துக் கூறி வைப்பது வேண்டும் என்னும் பரிந்துரையை நானும் வரவேற்கின்றேன். --செல்வா 17:13, 28 சனவரி 2012 (UTC)[]

பவுல்,

1. முற்றிலும் இதை ஒத்த கொள்கை வேறு விக்கிப்பீடியாக்களில் உள்ளதா என தெரியாது. உண்மையில், வேறு சில வகைகளில் இதை விட மிகக் கடுமையான விதிமுறைகள் மற்ற விக்கிப்பீடியாக்களில் உள்ளன. இது தமிழ் விக்கியின் தேவை, அனுபவத்தை வைத்து நமக்கு நாமே முன்மொழியும் கொள்கையே. தானியங்கி மூலம் ஊர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கிய போது நாம் மேற்கொண்ட உரையாடலை ஓர் ஒப்பீட்டுக்காகப் பார்க்கலாம். விக்கிக் கொள்கைகளுக்கு முரண்பட்டு கட்டுரைகளை எழுத விரும்பும் பயனரையோ அவர் எழுதும் தகவலையோ எந்த வகையிலும் இக்கொள்கை மட்டுறுத்தவில்லை. மாறாக, முதல் தொகுப்பிலேயே அவற்றைச் சிறப்பாகவும் இலகுவாகவும் பதிவேற்றுவதன் மூலம் அவருக்கும் மற்ற பயனர்களுக்குமான பணிச்சுமையைக் குறைக்க முனைகிறது. எனவே, இது விக்கிப்பீடியாவின் கட்டற்ற தன்மையைப் பாதிக்கவில்லை.

2. தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரை குறைந்தது மூன்று வரியாவது இருக்க வேண்டும் என்பது பொதுவான பரிந்துரை. அதையே இந்தக் கொள்கையும் முன்மொழிகிறது. கூடுதல் கட்டுரை வரிகள் வேண்டும் என்றால் அதனை இந்தக் கொள்கைக்கு அப்பாற்பட்டுத் தனியாகவே அணுகி உரையாட வேண்டும்.

3. சரி.

4. விக்கி நற்பழக்கவழக்கங்களைப் பேணுவது பொதுவாகவே பரிந்துரைக்கப்படும் ஒரு கொள்கை. எல்லா உரையாடல்களும் இதற்கு உட்பட்டனவே. எனவே, அதனை இங்கு திரும்ப வலியுறுத்தத் தேவை இருப்பதாகத் தோன்றவில்லை.

5. இனி வரும் கட்டுரைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையே இக்கொள்கை முன்வைக்கிறது. எனினும் நீங்கள் சுட்டியுள்ளது முக்கியமான பிரச்சினையே. இக்கொள்கை நிறைவேறிய பின்னர், ஏற்கனவே இது போல் உள்ள கட்டுரைப் பகுப்புகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று ஒவ்வொன்றாக (case by case) அணுகலாம். இந்த அணுகுமுறைக்கு உதவியாக இக்கொள்கையின் நீட்டிப்பை உருவாக்க முனையலாம். ஆனால், தற்போதைய சூழலில் இரண்டு பிரச்சினைகளையும் ஒரு மூச்சாக அணுகுவது திறன்மிக்கதாக இருக்காது.

நன்றி--இரவி 18:53, 28 சனவரி 2012 (UTC)[]

 • தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, இரவி. இது கொள்கை வரைவு என்பதால் விக்கி நற்பழக்கவழக்கங்களை அச்சூழலில் குறிப்பிட்டு வைத்தால் புதுவருநர்களுக்கும் தொடக்கநிலையினருக்கும்கூட உதவியாகுமே என்றுதான் எண்ணினேன். தேவையில்லை என்று பட்டால் விட்டுவிடலாம். மீளாய்வு நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.--பவுல்-Paul 21:53, 28 சனவரி 2012 (UTC)[]
 • நல்ல முன்மொழிவு. நன்றி இரவி, சோடாபாட்டில். கணேசின் தானியங்கிக் கட்டுரைத் திட்டத்தின்போது நாம் எவ்வளவோ கவனமாக கட்டுரைகளின் உள்ளடக்கத்தை உரையாடி முடிவு செய்தோம். அத்தகைய கட்டுரைகளனைத்துக்கும் அதே போலச் செய்வது சிறப்பாக இருக்கும். நடுவில் சில ஆயிரம் கட்டுரைகளுக்கு அப்படிச் செய்ய இயலாமற் போனது போகட்டும். இனிமேலாவது செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 16:32, 29 சனவரி 2012 (UTC)[]
சுந்தர், தானியங்கி வழியாக ஏற்றுவது என்ற போது அது குறித்த ஒரு அணுகுமுறைக்கான விழிப்புணர்வு இருந்தது. ஆனால், மனித முறையில் சிறுகச் சிறுக இவ்வாறு ஏற்றப்படும் கட்டுரைகள் குறித்து நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டது. நிரோ உருவாக்கிய 2000+ திரைப்படக் கட்டுரைகளும் தரவுத்தள கட்டுரைகள் தாம். பவுல் பரிந்துரைப்படி, இக்கொள்கை நிறைவேறியவுடன் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்--இரவி 16:40, 29 சனவரி 2012 (UTC)[]
 • இவ்வாறு உருவாகும் கட்டுரைகள் தொடர்ந்தோ அடிக்கடியோ மாறக்கூடியோ தரவுகளைக்கொண்டிருந்தால், அவற்றைத் தானியக்கமாகவோ, பகுதி தானியக்கமாகவோ இற்றைப்படுத்தி வரும் வாய்ப்புகள், அதற்கு ஏற்றவாறு தானியங்கி / தரவுகளைச் சேமிக்கும் முறை குறித்து ஆய வேண்டும் என்பதையும் கொள்கையில் சேர்த்தால் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டு: தற்போது முனைப்பாக ஆடி வரும் விளையாட்டு வீரர்கள், அடிக்கடி மாறக்கூடிய பொறுப்புகள்.

இற்றை[தொகு]

இக்கொள்கையில் பின்வரும் இற்றை தேவைப்படுகிறது:

 • தானியங்கிக் கட்டுரையாக்கத்துக்குப் பயன்படும் நிரல்கள், தரவுகள் கட்டற்ற முறையில் அமைய வேண்டும். நிரல் எழுதப்படும் மொழியே கட்டற்றதாக இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், குறிப்பிட்ட நிரல் மற்றவர்களும் பயன்படுத்தி, மேம்படுத்தும் வகையில் கட்டற்ற முறையில் கிடைக்க வேண்டும்.
 • தானியங்கிக் கட்டுரையாக்கத்தைத் தொடங்கும் முன் கட்டுரைகளை உருவாக்குதல், இற்றைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இது குறித்து அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். இது தொடர்பான இணக்க முடிவுக்கு ஏற்ப இக்கொள்கைப் பக்கம் இற்றைப்படுத்தப்படும்.--இரவி (பேச்சு) 06:43, 17 திசம்பர் 2015 (UTC)[]

விக்கியின் தொழிற்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்ட பிறகு இக்கொள்கையை வகுத்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். விக்கி தொழில்நுட்பத்தை, கணினியில் பட்டம் வாங்கியவருக்கு மட்டும் புரியாமல் அனுபவத்தில் கற்றவருக்கும் புரியும் விதத்தில் கற்றுக் கொள்ள வாய்ப்பை வழங்கிவிட்டால் பிற தொழிற்நுட்பத்தை நாடும் அவசியம் இருக்காது. மேலும் விக்கிமீடியாவின் நிதி நல்கை கிடைக்காமல் கைவிடப்பட்ட கட்டற்ற திட்டங்களுக்கு மாறாக நிதி நல்கை எதிர்பார்க்காமல் உருவாகும் நன்நோக்கு திட்டங்களை அனுமதிக்கலாம் என நினைக்கிறேன். ஆங்கில விக்கி தானியங்கி உருவாக்கம் பக்கத்தில் இருந்த கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் தானியங்கி குறிப்பைப் பொருட்டாகக்கூட கொள்ளாமல் நீக்கப்பட்டது. அப்படிப்பட்ட நுட்பத்தில் நானும் தானியங்கியை இயக்க வேண்டியிருக்காது. தற்போது இயங்கிவரும் neechalbot தானியக்கச் செயல்பாடுகள் ஆவணமாக்கப்பட்டாலும் நிரல்கள் கட்டற்ற முறையில் தான் இருக்க வேண்டுமா என இப்போதே முடிவுசெய்தால் அதையும் நிறுத்திவிடுகிறேன். கட்டற்ற நுட்பத்தைக் கற்க முடிந்தால் அங்கே தானியங்கியை உருவாக்குகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)
நீச்சல்காரன், கூகுள் செயலிகள் நிரல் கொண்டு தாராளமாகத் தானியங்கிப் பணிகளைச் செய்யலாம். அதனை இக்கொள்கை மாற்றம் தடுக்காது. ஆங்கில விக்கிப்பீடியாவில் எந்தப் பக்கத்தில் உங்கள் செயற்பாடு தடுக்கப்பட்டது என்று தெரிவித்தால் அதில் என்ன சிக்கல் என்று பார்த்து தீர்வு பெற முனையலாம்.
கட்டற்ற செயற்பாடு, கட்டற்ற நுட்பம், கட்டற்ற மென்பொருள் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஆனால், தனித்து நடைமுறைப்படுத்தக்கூடியவை. எடுத்துக்காட்டுக்கு, விக்கிமீடியா திட்டங்களை இயக்கும் மீடியாவிக்கி ஒரு கட்டற்ற மென்பொருள். ஆனால், அதனை எழுதப் பயன்படும் PHP ஒரு கட்டற்ற உரிமத்தைக் கொண்டிருக்கவில்லை. இதே போல், கூகுள் செயலிகள் நிரல் மொழி கட்டற்ற உரிமத்தைக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால், அதனைப் பயன்படுத்தி நீங்கள் எழுதும் நிரலை மட்டும் கட்டற்ற முறையில் வெளியிட முடியும்.
ஏன் கட்டற்ற செயற்பாடு தேவைப்படுகிறது? இவ்வாறு கட்டற்ற முறையில் வெளியிடுவதன் மூலம், அந்நிரலைப் பலரும் படித்து இம்முறையில் தேர்ச்சி பெற முடியும். அந்நிரலை மேம்படுத்த உதவ முடியும். பிற மொழி விக்கிப்பீடியாக்களில் அந்நிரலைப் பயன்படுத்த முடியும். ஏதேனும் தனிப்பட்ட காரணங்களால் நிரலை முதலில் எழுதியவர் தொடர முடியாமல் போகும் போது, மற்றவர்கள் அப்பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சியாக இயங்குவதற்கே இக்கட்டற்ற செயற்பாடு தான் அடிப்படை.
பல்வேறு வழமையான பராமரிப்பு, தானியங்கிப் பணிகளை இக்கொள்கை கட்டுப்படுத்தாது. ஆனால், தரவுத்தளம் வழி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உருவாகும் போது, அவற்றின் தொடர் பராமரிப்புக்கு கட்டற்ற செயற்பாடு இன்றியமையாததாகிறது.
எதிர்வரும் விக்கி நுட்பப் பயிற்சி மூலமோ வேறு வழிகளிலோ ஆர்வமுள்ள பயனர்களுக்கு http://tools.wmflabs.org/ முதலிய நுட்பங்களில் பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். உங்கள் நிரல்களைக் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலம், இதே போல் கூகுள் செயலிகள் நிரல் மூலம் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கக் கூடிய பலருக்கு நீங்களே முன்மாதிரியாக உதவலாம்.
//மேலும் விக்கிமீடியாவின் நிதி நல்கை கிடைக்காமல் கைவிடப்பட்ட கட்டற்ற திட்டங்களுக்கு மாறாக நிதி நல்கை எதிர்பார்க்காமல் உருவாகும் நன்நோக்கு திட்டங்களை அனுமதிக்கலாம் என நினைக்கிறேன்.// இதற்கும் இக்கொள்கைப் பரிந்துரைக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டுகிறேன்.
மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறேன். ஆனால், முதலில் இக்கொள்கை பரிந்துரைக்கும் கட்டற்ற செயற்பாடு என்ன என்று தக்க புரிதலுடன் மாற்றுக் கருத்துகளை முன்வைக்க வேண்டுகிறேன். இன்னும் தெளிவு வேண்டும் எனில், உரிய கேள்விகளை முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:46, 20 திசம்பர் 2015 (UTC)[]
கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் தானியங்கி பற்றிய இக்குறிப்புகள் நீக்கப்பட்டன. விக்கிலேப் தளத்திலும் கூகிள் கருவிகளைக் காட்டியும் அனுமதி வழங்கவில்லை. பொதுவகத்திலும் காலம்தாழ்த்தி அணுக்கம் மறுக்கப்பட்டது. இப்படி பின்னால் இருக்கும் உழைப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒருபுறம். இங்கே பல கட்டற்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டு அதற்கு நிதிநல்கை இல்லாததால் பலரும் அத்திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருக்கின்றனர். காரணம் கட்டற்ற நிரலைக் கொண்டு தொழில் செய்வோர், விக்கிமீடியாவில் போன்ற கட்டற்ற கொள்கை கொண்ட நிறுவனத்தில் பணிபுரிவோர், அமைப்புரீதியாக உதவிபெறுவோர் போன்று ஆதாயம் பெறுவோரே பெரும்பாலும் கட்டற்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்ய முடியும். அதனால் பொதுவாகச் செயல்படுபவர்கள் தங்கள் உழைப்பை அபகரிக்கக் கூடாது என நினைப்பதும் வழமை. இந்நிலையில்தான் கட்டற்ற நிரல் பயன்பாட்டைத் திணிக்காமல் இருக்கக் கோரினேன். விக்கியில் கட்டுரை உருவாக்கப் பயன்படும் நுட்பங்கள் கட்டற்றமூலமாக இருக்கவேண்டும் என்று முன்பே கொள்கையில் இருந்திருந்தால் திணிப்பாக இருக்காது. இத்தகைய கட்டற்றமுறை கணித்தமிழுக்கு எதிராகப் பயன்படுவதாக நம்புகிறேன். ஊராட்சிக் கட்டுரைக்கான தானியக்க நிரலெல்லாம் பூட்டி வைக்குமளவிற்கு மதிப்பில்லாவிட்டாலும் இப்புதுக் கொள்கைக்கே எனது எதிர்ப்பு. இருந்தும் தானியங்கிக் கட்டுரையாக்கம் கட்டற்ற நிரலில்தான் இருக்கவேண்டும் என விக்கிச் சமூகம் முடிவு செய்தால் கட்டற்ற முறையில் தாராளமாக வெளியிடுகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 10:52, 20 திசம்பர் 2015 (UTC)[]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 13:49, 20 திசம்பர் 2015 (UTC)[]
நீச்சல்காரன், இத்தொகுப்புச் சுருக்கம் பாருங்கள். இதில் உடன்பாடில்லை என்றால், பேச்சுப் பக்கத்தில் தகுந்த காரணம் சுட்டி மீண்டும் கூகுள் செயலிகள் நிரல் தொடர்பான குறிப்பை அப்பக்கத்தில் சேர்க்க முனையுங்கள். Microsoft .NET பற்றிய குறிப்பெல்லாம் இருக்கும் பக்கத்தில் கூகுள் செயலிகள் நிரல் பற்றிய குறிப்பு இருக்கக்கூடாது என்பதற்கு எந்த ஏரணமும் இல்லை. "Bots can be written in almost any programming language. The choice of a language often depends on the experience of the bot writer (which languages are familiar) or on the availability of pre-developed libraries to perform the desired task." என்று அவர்கள் அப்பக்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்கள் நிரலை எப்படி கட்டற்ற முறையில் வெளியிடலாம் என்பதற்கு https://en.wikipedia.org/wiki/Wikipedia:Creating_a_bot#Open-source_bots பக்கத்தில் வழிகாட்டுதல்கள் உள்ளன. அங்கு குறிப்பிட்டுள்ளபடி (occasionally it may be required before approval for particularly complex bots), சில பணிகளுக்கு இவ்வாறு கட்டற்ற முறையில் வெளியிடுவது இன்றியமையாததாகும். அதனால் தான் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்யும் தானியங்கிகளுக்கு நாம் இதனை வலியுறுத்துவதில்லை. ஆனால், இக்கொள்கைக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான கட்டுரைகளைக் கட்டற்ற முறையில் அனைவரும் இற்றைப்படுத்த வேண்டும் என்றால், அது தொடர்பான நிரல்கள், தரவுகள் அனைத்தும் கட்டற்ற முறையில் கிடைப்பதும் இன்றியமையாததாகும். கட்டற்ற செயற்பாடு என்பது விக்கிப்பீடியா ஐந்து தூண்களில் ஒன்று என்பதால் இதனைப் புதிய கொள்கை என்றோ திணிப்பு என்றோ பார்க்கத் தேவையில்லை. இக்கொள்கையின் அடிப்படையில் இப்போது தான் முதன்முறை செயற்படுகிறோம் என்பதால் தேவை, படிப்பினைக்கு ஏற்ப கொள்கையை இற்றைப்படுத்துகிறோம். அவ்வளவு தான்.
IEG மட்டுமல்ல விக்கிமீடியா அறக்கட்டளையின் எந்த ஒரு நிதி நல்கைக்காகவும் ஒரு திட்டம் ஏற்கப்படுவதற்கும் மறுக்கப்படுவதற்கும் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஏற்கப்படும் அனைத்துத் திட்டங்களும் கட்டற்ற திட்டங்களாகவே இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை.--இரவி (பேச்சு) 06:39, 21 திசம்பர் 2015 (UTC)[]
விக்கிலேப் தளத்தில் நீங்கள் முன்வைத்த வேண்டுகோள் குறித்த கூடுதல் விவரங்களைத் தந்தால் (என்று, என்ன கருவி, மறுத்து வந்த சேதி), அங்குள்ள சிக்கலைத் தீர்க்க முனையலாம்.--இரவி (பேச்சு) 06:54, 21 திசம்பர் 2015 (UTC)[]
விக்கியில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் கட்டற்றவை என்பது தெரியும். ஆனால் விக்கிக்குப் பயன்படுபவையும் கட்டற்றவை என்று எத்தனையாவது தூணில் சொல்லப்பட்டுள்ளது? நீங்கள் குறிப்பிட்டது போல சிக்கலான தானியங்கிகளின் நிரல் கட்டற்று இருக்கலாம் என்றாலும் ஊராட்சிக் கட்டுரைகள் பதிவேற்றுவதற்குத் தான் நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர் இற்றை செய்ய நிரலேதும் உருவாக்கப்படவில்லை. இதர பிழைநீக்கம், சோதனை, json மாற்றி எல்லாம் காப்புரிமை கொண்ட இதர செயலி துணைகொண்டே செய்யப்பட்டது. கட்டாயப்படுத்தி கட்டற்ற முறையில் நிரலாக்கம் செய்ய விரும்பாததால் தொடர் தானியங்கி இற்றையை Neechalbot செய்யமுடியாத நிலையில் உள்ளது. இனி நிரல் எழுதுபவர்தான் கட்டற்ற முறையில் வெளியிடவேண்டும் என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)


பேண்தகு முறையில் கட்டுரைகளை உருவாக்க, பராமரிக்கக் கூடிய வழிமுறை தேவை ஆகும். காப்புரிமைக்கு உட்பட்ட நுட்பங்களில் நாம் சிக்கினால் ஒரு கட்டத்தில் பெரும் செலவுகளை எதிர்நோக்கலாம். படங்கள் தொடர்பாக நாம் எந்தளவு விழிப்புணர்வுடன் இருக்கின்றோமோ, அதே போலேயே நிரல்கள். விக்கியில் பங்களிப்பு அதன் உள்ளடக்கம் மட்டுமன்று, அது சார்ந்த தொழில்நுட்பமும்தான். மாற்றாக கூகிள் கட்டுரையாக்கம் போன்று one off செயற்திட்டங்கள் செயற்படுத்துவதானால், அதற்கான அடைவுகள் தெளிவாக முன்னிறுத்தி செய்யப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 20:38, 21 திசம்பர் 2015 (UTC)[]


இன்று நாம் உருவாக்கும் ஒரு தானியங்கி, பிற மொழி விக்கிகளுக்கும் பிற விக்கித் திட்டங்களுக்கும் பயன்படவதற்குத் தோதாக, விக்கி சார்ந்த நிரல்களும் கட்டற்ற வகையில் இருப்பதே அறிவுப் பரவலுக்கு வழிவகுக்கும்.

பிற மொழி விக்கித் திட்டங்களின் நிரல்களை தமிழுக்கும் பயன்படுத்தியிருப்போம்தானே. தமிழ் விக்கியின் நிரல்கள் பிற விக்கித் திட்டங்களுக்கு மறுப்பது சரியில்லையே.


நீச்சல்காரன் அவர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது. ஆனால் தமது நிரலாக்க அறிவை விக்கி நண்பர்களுக்கு பகிர மறுப்பது வருத்தமே.

அது அவரது விருப்பம்.

கட்டற்ற நிரலாகவே விக்கி சார்ந்த நிரல்கள் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

NeechalBOT இனி செயல்படாது எனில், அது செய்த வேலைகளுக்கான ஆவணங்கள் இருந்தால், புது தானியங்கி உருவாக்கலாம்.

பைதான் மொழியில் சில விக்கி தானியங்கிகளை உருவாக்கியுள்ளேன்.

https://github.com/tshrinivasan/mediawiki-uploader

https://github.com/tshrinivasan/OCR4wikisource

இந்த அனுபவத்தைக் கொண்டு, புது தானியங்கிகளையும் உருவாக்க இயலும்.

தமிழ் விக்கிக்கான நிரலாக்கத் தேவைகளின் பட்டியல் இருந்தால், அவற்றை ilugc, chennaipy, chennaigeeks, chennai.rb போன்ற பல குழுக்களிடம் பகிர்ந்து புது பங்களிப்பாளர்களை விக்கிக்கு கொண்டு வரலாம்.

பைதான் மொழியில் Bot பற்றி என்னால் பயிற்சி அளிக்க இயலும்.

பயிற்சிக்கு மாதிரித் தேவைகள் இருந்தாலும் பட்டியலிடுக. --த.சீனிவாசன் (பேச்சு) 22:03, 21 திசம்பர் 2015 (UTC)[]

@Natkeeran: படங்களைப் போல நுட்பங்களும் பகிர்வுரிமையுடன் இருக்கவேண்டும் என்றால் காப்புரிமைச் சட்டங்களைக் கட்டாயம் மதிக்கவேண்டும். கட்டற்றமுறையில் இல்லாமல் இயங்கும் தானியங்கிக்கு அனுமதியை மறுக்கலாம் ஆனால் அதைக் கட்டற்றமுறையாக மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்துதல் சரியா? முன்பே குறிப்பிட்டது போல கட்டற்றநுட்பங்களை அனைவரும் பயன்படுத்தும் வழிமுறைகளை உருவாக்கிவிட்டு அவ்வாறில்லாத தானியக்கத்தின் அனுமதியைப் திரும்பப் பெறுதலே முறையாகும். @Tshrinivasan: இதற்கு முன்பே தொடர்ந்து பகிர்ந்தே வந்துள்ளேன், ஆனால் கட்டற்றமுறையில் பகிர் என்பது கணித்தமிழுக்கு எதிரானதாக இருப்பதால் கொள்கைத் திணிப்பைத் தான் எதிர்க்கிறேனே தவிர பகிர்வதை அல்ல.//ஆனால் தமது நிரலாக்க அறிவை விக்கி நண்பர்களுக்கு பகிர மறுப்பது வருத்தமே//என்ற கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன். முழுப்பணியும் நிறைவடைந்தவுடன் தானாகவே வழிமுறைகளைப் பகிர்வதாகவே எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குமுன் கட்டாயப்படுத்தி வெளியிடக்கோருவதாலே தொடர் இற்றை செய்வதற்கான நிரலாக்கம் உருவாகவில்லை. நீங்கள் பைத்தான் பயிற்சி அளித்தால் அங்கே வந்து கற்று கட்டற்ற நிரலாக்கம் செய்யவும் ஆர்வமாக உள்ளேன். தமிழ் விக்கிக்கான உடனடி நிரலாக்கத் தேவை என்றால் பயனர்:NeechalBOT#சுயதூண்டல் இங்குள்ள பணிகள்தான். ஒவ்வொரு பணியின் உள்ளிணைப்பில் அதற்கான வழிமுறைகள்/ஆவணங்கள் உள்ளன. நீங்கள் அதற்கான தானியங்கியை உருவாக்கியவுடன் புதுக்கொள்கைக்கேற்ப NeechalBOT தமிழ்விக்கியில் துப்புரவுப் பணிகளையும் நிறுத்திக் கொள்ளும். -நீச்சல்காரன் (பேச்சு) 01:51, 22 திசம்பர் 2015 (UTC)[]
தானியங்கிக் கட்டுரையாக்க நிரல்கள் கட்டற்ற முறையில் இருந்தால் பயனுள்ளதாய் இருக்குமே என்று **வேண்டுகோள்** வைக்கலாம்; ஆனால், அப்படிக் கட்டற்ற முறையில் திறமூலமாகத் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தேவையற்றது. இரவி சுட்டிய ஆங்கில விக்கிப்பக்கத்தில் கூட இதனைக் கட்டாயப் படுத்துவதாய்க் கூறவில்லை (சில complex scripts தவிர்த்து). -இரா. செல்வராசு (பேச்சு) 05:49, 23 திசம்பர் 2015 (UTC)[]

நீச்சல்காரன், முதலில் சில தெளிவுபடுத்தல்கள்:

 • இது தனிப்பட்ட பயனரை நோக்கிய கொள்கை முன்மொழிவு அன்று. அனைத்துப் பயனர்களுக்கும் பொருந்தக்கூடியது.
 • தங்களின் பல்வேறு கருவிகளையும், தானியங்கி நிறைவேற்றிய பணிகளையும், இதே போல் வருங்காலத்தில் செய்ய இருக்கிற பணிகளையும் தொடர்ந்து வரவேற்கிறோம். இவையனைத்தையும் திறமூலத்தில் தர வேண்டும் என்று இக்கொள்கை முன்மொழியவில்லை. இக்கொள்கை என்பது தானியக்கமாக கட்டுரைகளைப் பதிவேற்றுவது தொடர்பாக மட்டுமே.
 • Free Knowledge requires Free Software and Free File Formats என்பது விக்கிப்பீடியா நிறுவனர் சிம்மி வேல்சின் கருத்து. தொடக்க காலம் முதல் இந்த அணுகுமுறைக்குப் பரவலான ஏற்பும் உண்டு. விக்கிமீடியா அறக்கட்டளையும் இதனை வலியுறுத்துகிறது.
 • விக்கிப்பீடியாவின் மூன்றாவது தூண், இது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்கிறது. கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பது யாரும் கட்டற்று தொகுக்கவும் முடியும் என்பதையும் உள்ளடக்கியதே. ஊராட்சிகள் தொடர்பான சான்றை ஒரு PDF கோப்பாகத் தந்திருக்கிறோம்.இது திறந்து பார்க்க முடியாத அளவுக்குப் பெரிய கோப்பாக இருக்கிறது. இது தொடர்பான தரவுகள் ஒரு சிலருக்கு மட்டும் கூகுள் விரிதாளில் பகிரப்பட்டுள்ளது. இதனைத் திறந்தாலும் உலாவி தொங்குகிறது. இதே, இத்தரவினை ஒரு கட்டற்ற தரவுத்தளத்தில் பதிவேற்றி வைத்திருந்தால் நிரல் மூலமாகவோ நேரடியாகவோ தேவையானவர்கள் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அடுத்தடுத்த இற்றைகளுக்கும் நிரல் வழி பயன்படுத்த முடியும். இக்கொள்கை முன்மொழிவு நிரலாக்கம் பற்றியதானது மட்டுமன்று. தரவு தொடக்கம், ஆவணப்படுத்தல் வரை அனைத்தும் கட்டற்ற முறையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு இருந்தால் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வரும் பயனர் கூட தொடர்ச்சியைப் பேணி தானியக்கத் தொகுப்புகளை மேற்கொள்ள முடியும்.
 • சீனி பகிர்ந்துள்ள OCR4wikisource மென்பொருள் கூகுள் Drive API பயன்படுத்துகிறது. நிச்சயமாக, கூகுளின் ஒளியுணரி நுட்பம் கட்டற்றதன்று. ஆனால், அவர்கள் API மூலம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. சீனியின் நிரல் திறந்த முறையில் இருப்பதால் பல்வேறு இந்திய மொழி விக்கிப்பீடியர்களும் கூடி சோதித்து உதவி வருவதை இங்கு காணலாம். இதே அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியர்களின் கூட்டுழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் கட்டற்ற நிரலாக்கத்தை வலியுறுத்துகிறோம்.
 • //இதர பிழைநீக்கம், சோதனை, json மாற்றி எல்லாம் காப்புரிமை கொண்ட இதர செயலி துணைகொண்டே செய்யப்பட்டது// நிச்சயம் இவற்றையும் திறந்த மூலத்தில் வெளியிடக் கோரவில்லை. விக்கியில் இருந்தோ அதற்கு வெளியிலோ இவற்றுடன் ஊடாடும் நிரல் திறந்த முறையில் இருந்தால் போதுமானது. மேலே, சீனியின் நிரல் கூகுள் Drive ஊடாட்டத்தைக் காட்டுவது போன்று. எனினும், இவை கூகுள் போன்று பொது அணுக்கச் சேவை ஆக இன்றி, உங்கள் அல்லது வேறொருவரின் தனிப்பட்ட உழைப்பில் உருவானது என்றால் அதனைப் பகிர்வதில் உள்ள சிக்கலை உணர்கிறோம். குறிப்பாக, இச்செயலிகள் மற்ற காப்புரிமையுள்ள செயலிகளில் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில். எனவே, இதனை வலியுறுத்தவில்லை. அப்படிப் பகிர இயலாத நிலையில், ஊடாடும் நிரலை மட்டும் பகிர்வதும் பயனற்றதாகவே இருக்கும் என்பதால், நிச்சயம் இக்கொள்கை முன்மொழிவினை ஒவ்வொரு திட்டமாகவும், அதற்குப் பயன்படும் அணுகுமுறைகளைப் பொருத்துமே நடைமுறைப்படுத்த முடியும். Case by case exception சாத்தியமே. அதே வேளை, நிரல் காப்புரிமத்துக்கு உரியதாக இருந்தாலும், இயன்றவரை தரவு, ஆவணமாக்கல் ஆகியவற்றை திறந்த முறையில் செய்ய முனையலாம்.
 • உங்களின் ஒரு சில மென்பொருள்களை GitHub இல் இட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தீர்கள். அவற்றைப் பகிர்ந்தால் //ஆனால் தமது நிரலாக்க அறிவை விக்கி நண்பர்களுக்கு பகிர மறுப்பது வருத்தமே// என்பது போன்ற புரிதற் பிழைகளைத் தவிர்க்கலாம்.

இரா. செல்வராசு, உங்கள் கருத்தை ஏற்கிறோம். இத்தேவையை உணர்வது மற்ற கட்டற்ற மென்பொருளாளர்களை இது போன்ற பணிகளின் மீது ஈடுபாடு கொள்ள வைக்க உதவலாம்.

நன்றி.--இரவி (பேச்சு) 14:52, 3 சனவரி 2016 (UTC)[]