யோகி பாபு
யோகி பாபு | |
---|---|
![]() | |
பிறப்பு | 22 சனவரி 1985 ஆரணி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2008-தற்போது |
வாழ்க்கைத் துணை | மஞ்சு பார்கவி (தி. 2020) [1] |
யோகி பாபு (Yogi Babu) (பிறப்பு 22 சனவரி 1985)[2] என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[3][4]
துவக்ககால வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும்
[தொகு]யோகி பாபு 1985 சூலை 22 அன்று ஆரணியில் பிறந்தார். இவரது தந்தை இந்தியத் தரைப்படையில் அவில்தாராக இருந்தார். எனவே பாபு சிறுவயதில் நிறைய பயணங்களைச் செய்துள்ளார். இதன் விளைவாக அவர் 1990 களின் முற்பகுதியில் இவர் ஜம்முவில் படித்தார்.[5]
பாபு மஞ்சு பார்கவியை 2020 பெப்ரவரி 5 அன்று திருத்தணியில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6][7]
தொழில்
[தொகு]பாபு லொள்ளு சபாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார், மேலும் இரண்டு ஆண்டுகள் காட்சிகளை எழுத உதவினார்.[8][9] அந்த நிகழ்சியில் சில பகுதிகளில் துணை நடிகராக தோன்றினார். அமீர் நடித்த யோகி (2009) திரைப்படத்தில் திரைப்பட நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் படத்தின் பெயரை தனது திரைப் பெயருக்கு முன்னொட்டாக மாற்றினார். பையா படத்தில் ஒரு குண்டராகத் தோன்றினார். பின்னர் இவர் சுந்தர் சியின் கலகலப்பு (2012) இல் ஒரு 'மாமா'வகத் தோன்றினார். 2013 ஆம் ஆண்டில், இவர் முதல் முதலில் நீளமான நகைச்சுவை வேடத்தில் பட்டத்து யானை (2013) படத்தில் நடித்தார்.[10] அதே ஆண்டு சாருக்கானுடன் இணைந்து இந்தி திரைப்படமான சென்னை எக்ஸ்பிரசில் நடித்தார்.[11]
பின்னர் இவர் மான் கராத்தே (2014) படத்தில் சிவகார்த்திகேயனுடன் போட்டியுடுபவராகவும், நகைச்சுவை நடிகராகவும், யாமிருக்க பயமே (2014) படத்தில் விசித்திரமான நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். 2015 ஆம் ஆண்டில், இவர் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். காக்கா முட்டை (2015), கிருமி (2015) ஆகிய படங்களில் இவரது நடிப்புக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[12] யோகி பாபுவுக்கு 2016 ஒரு திருப்புமுனை ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டு 20 படங்களில் நடித்தார், மேலும் ஆண்டவன் கட்டளை (2016) படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[13] இதைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா (2018) படத்தில் இவரது பாத்திரம், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் சித்தரிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது[14]. அந்தப் படத்தில் இவர் இடம்பெற்ற கல்யாண வயசு பாடல்[15], அதில் இவரது குறும்புகள் வைரலானது. இவர் பரியேறும் பெருமாள் (2018) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றினார், இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் யோகி பாபுவின் நகைச்சுவையும், நடிப்பையும் பாராட்டினர்.[16] இவர் முதன்முறையாக தர்மபிரபு (2019) திரைப்படத்தில் நாயகனாக நடித்தார், அதில் இவர் யமனாக நடித்தார். கூர்கா (2019) திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். சாம் ஆண்டன் எழுதி இயக்கிய இந்த பணயக்கைதி நாடகப்படத்ததில் பாபு ஒரு பாதுகாவலராக நடித்தார். He played a key role in Gurkha (2019). Babu is a security guard in this hostage drama written and directed by Sam Anton.[17]
பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்களில் முன்னணி வேடங்களில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார்.[18] 2021 ஆம் ஆண்டு வெளியான அரசியல் நையாண்டித் திரைப்படமான மண்டேலாவில், ஊராட்சித் தேர்தல்களின் முடிவைத் தீர்மாணிக்கும் ஒற்றைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.[19] பின்னர் இவர் பேய் மாமா (2021), பன்னி குட்டி (2022), பொம்மை நாயகி (2023), யானை முகதான் (2023), லக்கி மேன் (2023),[20] தூக்குதுரை (2024), படகு (2024), குழந்தைகள் முன்னேற்றக் கழகம் (2025), ஜோரா கைய தட்டுங்க (2025) பள்ளி (2025) போன்ற படங்களில் முன்னணி வேடங்களில் நடித்தார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "மஞ்சு பார்கவியை திருமணம் செய்த யோகி பாபு: ரஜினி சொன்னது மாதிரியே நடந்துடுச்சு". 5 February 2020. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/yogi-babu-marries-manju-bharghavi/articleshow/73950449.cms.
- ↑ "Happy Birthday Yogi Babu: 25 times the comedian made us ROFL". The New Indian Express. 22 July 2019. https://www.cinemaexpress.com/photos/slideshows/2019/jul/22/happy-birthday-yogi-babu-25-times-the-comedian-made-us-rofl-367.html. பார்த்த நாள்: 14 September 2019.
- ↑ Srinivasan, Sudhir (24 July 2015). "Naalu Policeum Nalla Irundha Oorum: Small joys". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/naalu-policeum-nalla-irundha-oorum-small-joys/article7461001.ece.
- ↑ "Yatchan Review: Hotchpotch of Mistaken Identities".
- ↑ Rao, Subha J. (26 November 2018). "It's okay if people make fun of me, says comedian Yogi Babu" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 25 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211025160518/https://www.thehindu.com/entertainment/movies/yogi-babu-interview/article25595953.ece.
- ↑ "Yogi Babu marries Manju Bhargavi in Tiruttani, grand reception in March" (in en). India Today. 5 February 2020 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205112202/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/yogi-babu-marries-manju-bhargavi-in-tiruttani-grand-reception-in-march-1643456-2020-02-05.
- ↑ "Tamil Actor Yogi Babu Ties the Knot with Manju Bhargavi in Intimate Ceremony, See Pic". News18. 5 February 2020 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205110433/https://www.news18.com/news/movies/yogi-babu-weds-manju-bhargavi-in-intimate-ceremony-2487191.html.
- ↑ Vendhar TV (5 July 2015). "Star Holiday – (05/07/15) -A day out with actor Yugi Babu – [Epi – 9]". Archived from the original on 7 July 2018. Retrieved 10 November 2015 – via YouTube.
- ↑ "Yogi Babu was spotted by Lollu Sabha director Ram Bala" (in en). The Times of India. 17 February 2018 இம் மூலத்தில் இருந்து 7 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211207173830/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/yogi-babu-was-spotted-by-lollu-sabha-director-ram-bala/articleshow/62961317.cms.
- ↑ "Watch: Actor Yogi Babu, Shooting In Ooty, Takes Time To Play Football With Kids". News18. 16 August 2023. Archived from the original on 8 September 2023. Retrieved 8 September 2023.
- ↑ Johnson, David (14 September 2019). "After Shah Rukh Khan, Yogi Babu signed for Aamir Khan's next film" (in en). International Business Times, India Edition இம் மூலத்தில் இருந்து 23 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190923114102/https://www.ibtimes.co.in/after-shah-rukh-khan-yogi-babu-signed-aamir-khans-next-film-805405.
- ↑ "Kaaka Muttai Movie Review {4/5}". The Times of India. 13 May 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Kaaka-Muttai/movie-review/47550069.cms.
- ↑ Vasudevan, K. V. (21 January 2017). "The scene stealer" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 6 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206131626/https://www.thehindu.com/entertainment/movies/The-scene-stealer/article17073956.ece.
- ↑ "Five reasons to watch Nayanthara's Kolamaavu Kokila" (in en-US). The Indian Express. 17 August 2018 இம் மூலத்தில் இருந்து 29 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181029232441/https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-five-reasons-to-watch-nayanthara-film-5310458/.
- ↑ "Kolamavu Kokila song Kalyana Vayasu: This Anirudh Ravichander song featuring Yogi Babu is fun" (in en-US). The Indian Express. 17 May 2018 இம் மூலத்தில் இருந்து 31 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180731123129/https://indianexpress.com/article/entertainment/tamil/kolamavu-kokila-song-kalyana-vayasu-anirudh-ravichander-yogi-babu-5180189/.
- ↑ Ramanujam, Srinivasa (28 September 2018). "Pariyerum Perumal review: caste away" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 3 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220903210455/https://www.thehindu.com/entertainment/movies/pariyerum-perumal-review-caste-away/article25074362.ece.
- ↑ Ramachandran, Mythily (9 July 2019). "Yogi Babu leads the story in Tamil film 'Gurkha'" (in en). Gulf News இம் மூலத்தில் இருந்து 4 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190904060122/https://gulfnews.com/entertainment/south-indian/yogi-babu-leads-the-story-in-tamil-film-gurkha-1.65124055.
- ↑ "Yogi Babu-starrer Kuiko To Be Released By Red Giant Movies: Report". News18. 21 November 2023. https://www.news18.com/movies/yogi-babu-starrer-kuiko-to-be-released-by-red-giant-movies-report-8670966.html.
- ↑ "Did Tamil Actor Yogi Babu Wait for an Hour Outside Thiruttani Temple? What We Know". 2 January 2023. Archived from the original on 14 January 2023. Retrieved 14 January 2023.
- ↑ Chandar, Bhuvanesh (1 September 2023). "‘Lucky Man’ movie review: Yogi Babu pillars a mildly entertaining drama" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/lucky-man-movie-review-yogi-babu-pillars-a-mildly-entertaining-drama/article67259877.ece.