சர்கார் (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்கார்
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
கதைஏ. ஆர். முருகதாஸ்,
ஜெயமோகன்
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புவிஜய், வரலட்சுமி சரத்குமார்
ஒளிப்பதிவுகிரிஷ் கங்காதரன்
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்சன் பிக்சர்ஸ்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடு6 நவம்பர் 2018 (2018-11-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹ 150 கோடி
மொத்த வருவாய்₹ 260 கோடி[1]

சர்கார் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ் ஆவார். விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சனவரி 2018 இல் தொடங்கப்பட்ட இத்திரைப்படமானது, தீபாவளி நாளான நவம்பர் 6, 2018 அன்று வெளியானது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் 2018, அக்டோபர் 19 அன்று மாலை வெளியானது.[2][3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

சர்கார் திரைப்படத்தை சன் படங்கள் நிறுவனம் தயாரிக்க ஏ. ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.[6] இந்தப் படத்தின் தலைப்பானது சூன் 21, 2018 இல் வெளியானது.[7] அதற்கு முன்பு வரை தளபதி 62 எனும் பெயரிலேயே படப்பிடிப்பானது நடந்து வந்தது. கீர்த்தி சுரேஷ் முக்கியப் பெண் கதாப்பத்திரத்திலும் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், டி, சந்தானம் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் ஆனார்கள்.[6][8] ஜெயமோகன் எழுத்தாளராகப் பணிபுரியும் இந்தத் திரைப்படமானது சனவரி, 2018 இல் துவங்கியது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதத் துவக்கத்தில் அமெரிக்காவில் நடத்தினர்.[4][9][10][11]

இசை[தொகு]

பாடல்களுக்கான இசை மற்றும் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் செய்திருந்தார்.[8]

# பாடல் பாடகர்கள் நீலம்
1. "சிம்டாங்கரன்" பாம்பா பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன் 4:44
2. "ஒரு வைரல் புரட்சி" ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீநிதி வெங்கடேஷ் 5:26
3. சி.இ.ஓ இன் தா ஹவுஸ் நகுல் அப்யங்கர், பிளேஸ் 3:52
4. "டாப் டக்கர்" மோஹித் சவுகான் 3:41
5. ஓ.எம்.ஜி.  பொன்னு சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி 4:42

சான்றுகள்[தொகு]

 1. "அடேங்கப்பா, பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா? மெர்சல் சாதனையை முறியடித்த 'சர்கார்'!". Samayam Tamil. 2020-07-01 அன்று பார்க்கப்பட்டது.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-10-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-10-20 அன்று பார்க்கப்பட்டது.
 3. https://indianexpress.com/article/entertainment/tamil/vijay-sarkar-teaser-to-release-6-pm-today-5408794/
 4. 4.0 4.1 "Writer Jeyamohan on board for Thalapathy 62". Sify (ஆங்கிலம்). 21 January 2018. 21 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
 5. "'Yogi Babu Plays an Important Role in Thalapathy 62'". Sify. 21 January 2018. http://www.sify.com/movies/yogi-babu-to-play-an-important-role-in-thalapathy-62-news-tamil-rmeq1ydehgahd.html. பார்த்த நாள்: 21 January 2018. 
 6. 6.0 6.1 MovieBuzz (7 April 2018). "Thalapathy 62 is a political action thriller!". Sify. 8 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. Upadhyaya, Prakash. "Thalapathy 62 title: Sarkar is the name of Vijay's next movie with Murugadoss [First look poster"]. International Business Times, India Edition. https://www.ibtimes.co.in/thalapathy-62-title-vera-level-arasan-name-vijays-next-movie-772628. 
 8. 8.0 8.1 "Vijay’s next kickstarts". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 19 January 2018. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/jan/19/vijays-next-kickstarts-1759040.html. 
 9. "'Thalapathy 62' team to head to the United States". 16 February 2018. https://www.indiaglitz.com/vijay-keerthy-suresh-thalapathy62-song-shooting-schedule-in-america--tamil-news-207056. பார்த்த நாள்: 17 February 2018. 
 10. "Team 'Thalapathy 62' successfully complete Kolkata schedule". 15 February 2018. http://www.sify.com/movies/team-thalapathy-62-back-in-chennai-news-tamil-scpki4gjhccgd.html. பார்த்த நாள்: 15 February 2018. 
 11. "Tamil writer Jeyamohan on board for Thalapathy 62". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 January 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/tamil-writer-jeyamohan-on-board-for-thalapathy-62/articleshow/62601070.cms. 

வெளியிணைப்புகள்[தொகு]