தடம் (திரைப்படம்)
தடம் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | மகிழ் திருமேனி |
தயாரிப்பு | இந்தர் குமார் |
கதை | மகிழ் திருமேனி |
இசை | அருண் ராஜ் |
நடிப்பு | அருண் விஜய் வித்யா பிரதீப் தன்யா ஹோப் |
ஒளிப்பதிவு | கோபிநாத் |
படத்தொகுப்பு | என். பி. சிறீகாந்த் |
கலையகம் | ரேதான் – தி சினிமா பீபிள் |
விநியோகம் | இசுகிரீன் சீன் மீடியா என்டெர்டெய்ன்மெண்ட் |
வெளியீடு | 1 மார்ச் 2019 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தடம் (Thadam) 2019ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் மற்றும் குற்றப்புனைவு திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மகிழ் திருமேனி என்ற இயக்குநரால் எழுதி இயக்கப்பட்டு இந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள் அருண் விஜய், தன்யா ஹோப், மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களி்ல் நடித்து்ளனர். இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையை அருண் ராஜ் என்பவர் செய்துள்ளார். ஒளிப்பதிவானது கோபிநாத் என்பவராலும், படத்தொகுப்பு என். பி. சிறீகாந்தாலும் செய்யப்பட்டுள்ளது..[1]
கதைக் களம்
[தொகு]எழில் (அருண் விஜய்) உயர் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு கட்டுமானப் பொறியாளர் ஆவார். அவர் ஒரு பிஎம்டபிள்யூ மகிழுந்தினையும், வசதியான மாளிகையையும் கொண்டுள்ளார். கட்டுமானத் தொழில் சிறப்பாகச் சென்று கொண்டிருக்க வாழ்க்கை சிறப்பாக, சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. திரைப்படத்துறை இதழியலாளரான தீபிகாவுடன் காதலில் விழுகிறார்.
எழிலின் சகோதரன் கவின் (அருண் விஜய்) ஒரு புத்திசாலித்தனமான, தெருவில் சாதாரண வாழ்க்கை வாழக்கூடிய, கடத்தல்காரர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி சுருட்டக்கூடிய, பல பெண்களின் காதலைப் பெற விரும்புபவராக, சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பற்றியெல்லாம் நன்கறிந்த இளைஞனாக இருக்கிறார். இவரது ஒரே பலவீனம் சூதாட்டம். இவரது அன்னையிடமிருந்து சீட்டாட்டத்தைக் கற்றுக்கொண்டிருந்தார். இவர்களின் தாயை இவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே தந்தையார் பிரிந்திருக்கிறார்.
எழில் மற்றும் கவின் இருவரும் எந்தவொரு நேரத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. இருவரும் அவரவர் வழியில் தனித்தனியே பயணிக்கின்றனர். நகரில் நடந்த ஒரு குற்றத்திற்காக காவல் ஆய்வாளர் பெப்சி விஜயன் எழிலைக் கைது செய்கிறார். பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர் எடுத்த ஒரு சுயமி ஒளிப்படத்தில் உள்ள உருவத்தை வைத்து எழில் காவல் ஆய்வாளரால் கைது செய்யப்படுகிறார். தற்செயல் நிகழ்வாக, காவலர்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டிய கவினையும் கைது செய்து அதே காவல் நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர். காவல் அதிகாரிகளுக்கு இவர்களின் உருவ ஒற்றுமை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சகோரர்கள் இருவருமே கொலையில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். கோபால கிருஷ்ணன் தனது உதவியாளர் மலர்விழியை இந்த குழப்பமான வழக்கை விசாரிக்கச் சொல்கிறார்.
நடிப்பு
[தொகு]- எழில் மற்றும் கவின் என்ற இரு வேடங்களில் அருண் விஜய்
- காவல் துணை ஆய்வாளர் மலர்விழியாக வித்யா பிரதீப்
- கவினின் ஒரு தலைக் காதலியாக சுமதி வெங்கட்
- எழில் காதலிக்க விரும்பும் தீபிகாவாக தன்யா ஹோப்[2]
- எழில் மற்றும் கவினின் தாயாக சோனியா அகர்வால்
- காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனாக ஃபெப்சி விஜயன்
- ஆகாசாக எசக்கியப்பன்
- சுருளியாக யோகி பாபு
- காவலர் தனசேகராக ஜார்ஜ் மரியான்
- சேச்சியாக மீரா கிருஷ்ணன்
தயாரிப்பு
[தொகு]2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அருண் விஜய் தான் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் செய்யப்போவதாக தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டில் செய்த தடையறத் தாக்க திரைப்படத்திற்குப் பிறகு இருவரும் இணையும் இரண்டாவது திரைப்படம் ஆகும்.[3] இந்தர் குமாரால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஏப்ரல் 2017 இல் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[3][4] அருண் விஜய் இரு வேடங்களில் நடிப்பதாகவும், இத்திரைப்படம் ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.[5] இத்திரைப்படத்தில் தன்யா ஹோப், வித்யா பிரதீப் மற்றும் இசுமிருதி வெங்கட் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.[6] அருண் ராஜ் இத்திரைப்படத்தின் இசையமைக்க தேர்வு செய்யப்பட்டார். மகிழ் திருமேனி மற்றும் அருண் விஜய் ஆகியோருடன் இணையும் முதல் படமாகும். கோபிநாத் மற்றும் என். பி. சிறீகாந்த் ஆகியோர் முறையே ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[7][8] ஃபெப்சி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோரும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் படப்பிடிப்பு சூன் 2017 இல் தொடங்கும் முன் சேர்க்கப்பட்டனர் [9][10]
வசூல் நிலவரம்
[தொகு]தடம் மூன்றாவது வார இறுதியில் 2.3 கோடி ரூபாய் வசூல் செய்து வசூல்ரீதியான நிச்சய வெற்றியை உறுதி செய்தது, 20 நாட்களில் தமிழ்நாட்டில் இத்திரைப்படத்தின் வசூல் ரூபாய் 18.4 கோடியாக மதிப்பிடப்பட்டது.[11]
இசை மற்றும் பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு அருண் ராஜ் அறிமுக இசை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாடல் வரிகள் அருண் ராஜ், மதன் கார்க்கி, தாமரை மற்றும் மகிழ் திருமேனி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "இணையே" | சித் ஸ்ரீராம், பத்மலதா | 3:35 | |
2. | "தப்புத் தண்டா" | வி. எம். மகாலிங்கம், அருண் ராஜ், ரோகித் ஸ்ரீதர் | 3:40 | |
3. | "வீதி நதியே" | எல். வி. ரேவந்த் | 3:20 | |
4. | "தடம் கருத்து" | அருண் ராஜ் | 2:00 | |
5. | "வீதி நதியே (பதில் பாட்டு)" | அருண் ராஜ் | 3:28 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jun/12/arun-vijays-next-confirmed-to-have-three-heroines-1615878.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
- ↑ 3.0 3.1 https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yet-another-thriller-for-arun-vijay/articleshow/57631341.cms
- ↑ https://www.indiaglitz.com/arun-vijay-magizh-thirumeni-untitled-movie-tamil-movie-preview-21475
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
- ↑ https://www.indiaglitz.com/tanya-hope-soori-and-vidya-pradeep-the-three-heroines-in-arun-vijay-magizh-tirumeni-thadam-tamil-news-191506
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/apr/17/arun-vijays-next-based-on-real-life-incident-1594534.html
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/arun-vijay-magizh-thirumeni-film-gets-a-new-composer/articleshow/59677327.cms
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/events/chennai/aruns-film-with-magizh-is-titled-thadam/articleshow/59105461.cms
- ↑ https://www.indiaglitz.com/fefsi-vijayan-to-play-the-lead-villain-in-arun-vijay-magizh-tirumeni-film-tamil-news-185645.html
- ↑ "Arun Vijay's Thadam continues blockbuster run in Tamil Nadu; Ispade Rajavum Idhaya Raniyum struggles at box-office". Firstpost. 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.