ஜித்தன் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜித்தன் 2
இயக்கம்ராகுல் பரமஹம்சா
தயாரிப்புராகுல் பரமஹம்சா
கதைவின்சென்ட் செல்வா
இசைசிறீகாந்து தேவா
யஸ்வந்த் ராஜா
நடிப்புஜித்தன் ரமேஷ்
சிருஷ்டி டங்கே
ஒளிப்பதிவுசுரேஷ் குமார்
படத்தொகுப்புமாருதி கிருஷ்
கலையகம்ஆர்.பி.எம். சினிமாஸ்
வெளியீடு8 ஏப்ரல் 2016 (2016-04-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜித்தன் 2 (Jithan 2) என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். வின்சென்ட் செல்வா எழுதி, ராகுல் பரமஹம்சா இயக்கிய இந்த படம் ஜித்தன் (2005) இன் தொடர்ச்சியாகும், இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் மற்றும் சிருஷ்டி டங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்புப் பணிகளானது 2013 திசம்பரில் தொடங்கியது. 2016 ஏப்ரல் 8 அன்று மோசமான விமர்சனங்களுடன் வெளியானது. [1] இந்த படம் தெலுங்கில் பீட்சா 3 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2018 இல் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு பின்னணி இசையை இசைக்கலைஞர்களும் பின்னணி பாடகர்களுமான ஏ. எம். ராஜா, ஜிக்கி ஆகியோரின் பேரனான எஸ்வந்த் ராஜா அமைத்தார்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

2013 செப்டம்பரில், ஆர். பி. எம் புரொடக்சன்ஸ் நிறுவனமானது 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமான ஜித்தனின் தொடர்ச்சியான ஒரு படத்திற்கான பணிகளை செய்யத் தொடங்கியது. அறிமுக இயக்குநர் ராகுல் இயக்குநராக ஆக்கப்பட்டார். முதல் படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா திரைக்கதையை எழுதினார். [2] இப்படத்தின் பணிகள் சென்னையில் முன்னேறி நடந்தது. ஜித்தன் 2 படத்திற்கான கதாநாயகியாக சிருஷ்டி டங்கே உறுதி செய்யப்பட்டார். பாடல்கள் தவிர படத்தின் அனைத்து பகுதிகளும் முடிந்த நிலையில், படம் 2014 சூலையில் நிறைவடையும் நிலையில் இருந்தது. [3] படக் குழு 2014 இன் பிற்பகுதியில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளைத் தொடங்கியது. 2016 ஏப்ரல் 8 அன்று பட வெளியீட்டை இலக்காகக் கொள்ளப்பட்டது. [4]

வரவேற்பு[தொகு]

இந்த படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சிஃபி எழுதியது "பொதுவாக, மோசமாக தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் கூட பேசுவதற்கு ஒருசில நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருக்கும், ஆனால் ஜித்தன் 2 ஒரு கொடுங்கனவு, இது நம் நினைவிலிருந்து விரைவாக அழிந்துவிட விரும்புவோம்". [5] டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது "ஜித்தன் -2 பேயை உள்ளடக்கிய, ஒரு திகில் படமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் படத்தைப் பார்த்தபின் நம்மைத் தொந்தரவு செய்யும் ஒரே விஷயம் - மற்றும் தூக்கமில்லாத இரவுகளில் கூட ஏற்படக்கூடிய - முடிவில்லாத கேள்விகள்." [6]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தன்_2&oldid=3116722" இருந்து மீள்விக்கப்பட்டது