ஜூங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜூங்கா
இயக்கம்கோகுல் (இயக்குனர்)
தயாரிப்புவிஜய் சேதுபதி
அருண் பாண்டியன்
ஐசரி கே. கணேஷ்
ஆர். எம். ராஜேஷ் குமார்
கதைகோகுல் (இயக்குனர்)
திரைக்கதைகோகுல் (இயக்குனர்)
இசைசித்தார்த் விபின்
நடிப்பு
ஒளிப்பதிவுதட்லி
படத்தொகுப்புவி. ஜே. சாபு ஜோசப்
கலையகம்விஜய் சேதுபதி புரக்டசன்ஸ்
ஏ.& பி குரூப்ஸ்
விநியோகம்அருண் பாண்டியன்
வெளியீடு27 ஜூலை 2018
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு20கோடி

ஜூங்கா (Junga) (2018)இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம்[1] இயக்கம் கோகுல் (இயக்குனர்). இதில் விஜய் சேதுபதி, சாயீஷா சாகல் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோருடைய நடிப்பும், நகைச்சுவையும் நன்கு பேசப்பட்டது[2][3][4][5][6] இசையமைப்பு சித்தார்த் விபின். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படமாக்கப்பட்டுள்ளது.

கதை[தொகு]

தாதா ஜூங்காவை(விஜய் சேதுபதி) என்கவுன்டர் செய்வதற்காக காவல்துறை ஒரு வாகனத்தில் அவரை அழைத்துச் செல்வதிலிருந்து கதை தொடங்குகிறது. உதவி ஆணையாளர் மணிமாறன் (வினோத் முன்னா) மற்றும் துரைசிங்கம் (இராசேந்திரன் (நடிகர்) ஆகியோருடன் காவல் வாகனத்தில் செல்லும் போது தனது கதையைத் தொடங்குகிறார் ஜூங்கா. அவர் பொள்ளாச்சியில் பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார். அவர் தொப்புலியை (மடோனா செபாஸ்டியன்) காதலித்து வருகிறார். இவரது தாத்தாவும், அப்பாவும் சேர்த்து அவர்களுக்கு சொந்தமான " சினிமா பாரடைஸ் " என்ற திரையரங்கத்தை குமாரசாமி செட்டியாரிடம் (சுரேஷ் சந்திர மேனன்) இழந்ததை அவரது தாய் (சரண்யா பொன்வண்ணன்) கூறியதும் அதை மீட்க எண்ணுகிறார். இதற்காக சென்னை சென்று சம்பாதிக்க முயல்கிறார். ஒரு நாள் செட்டியார் தனது திரையரங்கத்தை விற்க முயல்வதை அறிந்து அவரைத் தடுக்கிறார். சொத்தை மீட்க பாரிஸிலிருக்கும் செட்டியாரின் மகள் யாழினியை கடத்தத் திட்டமிட்டு தனது உதவியாளர் யோ யோவுடன் பிரான்ஸ் செல்கிறார். அங்கே ஒரு மாஃபியா கும்பல் யாழினியை கடத்தி செல்கிறது.ஜூங்கா யாழினியை எவ்வாறு அவர்களிடமிருந்து மீட்கிறார், என்பதும், இந்தியா வந்து எவ்வாறு செட்டியாரிடம் பேசி தனது சொத்தை மீட்கிறார். ஏன் காவல் துறை அவரை சுட நினைக்கிறது என்பதுமாக மீதிக்கதை செல்கிறது .

நடிகர்கள்[தொகு]

விஜய் சேதுபதி—தாதா ஜூங்கா, இவருடைய தந்தை தாதா ரங்கா ,அவருடைய தாத்தா தாதா லிங்கா
சாயீஷா சாகல் - யாழினியாக
மடோனா செபாஸ்டியன் தொப்புலியாக
சுரேஷ் சந்திர மேனன் - யாழினியின் தந்தை குமாரசாமி செட்டியாராக
யோகி பாபு - ஜுங்காவின் உதவியாளர் யோ யோவாக
இராசேந்திரன் (நடிகர்) - துரைசிங்கமாக
சரண்யா பொன்வண்ணன் - ஜுங்காவின் தாயாராக
ராதாரவி - சோப்ராஜாக
டெல்லி கணேஷ் - சுகுமாராக
விஜயா பாட்டி - ஜுங்காவின் பாட்டியாக
வினொத் முன்னா
[[கோகுல் (இயக்குனர்) சிறப்புத் தோற்றம்

ஒலித் தொகுப்பு[தொகு]

Junga
Soundtrack by
வெளியீடு13 June 2018
ஒலிப்பதிவு2018
இசைப் பாணிFilm soundtrack
நீளம்23:42
மொழிTamil
இசைத்தட்டு நிறுவனம்Think Music
இசைத் தயாரிப்பாளர்Siddharth Vipin
சித்தார்த் விபின் chronology
Seyal
(2018)
Junga
(2018)

சித்தார்த் விபின் இசையில் 30 ஆகஸ்ட் 2013 இல் ஆறுபாடல்கள் கொண்ட தொகுப்பு வெளியிடப்பட்டது..[7]

அனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் லலித் ஆனந்த். 

Track-List
# பாடல்பாடியோர் நீளம்
1. "அம்மா மேல சத்யம்"  ஜெகதீஸ் குமார், பவித்ரா கோகுல் 04:12
2. "ரைஸ் ஆப் டான்"  சுராஜ் ஜெகன், சித்தார்த் விடின், ராக்ஸ் டார் ராணி அம்மாள், எம்சி ஜெஸி 04:21
3. "பாரீஸ் டூ பாரீஸ்"  அந்தோணிதாசன், கல்பனா ராகவேந்தர் 05:18
4. "லோலிக்ரியா"  மரண கானா விஜி, நாகாஸ் அஜிஸ் 03:50
5. "கூட்டிப்போ கூடவே"  சத்ய பிரகாஷ், ரணினா ரெட்டி 04:53
6. "மக்கள் செல்வம் ஃபேன்"  சுராஜ், ஜெகதீஸ் குமார் 01:08
மொத்த நீளம்:
23:42

வெளியீடு[தொகு]

தமிழ் நாட்டின் பட உரிமை 12 கோடிக்கு விற்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூங்கா_(திரைப்படம்)&oldid=2741561" இருந்து மீள்விக்கப்பட்டது