உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பனா ராகவேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா
பின்னணித் தகவல்கள்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இணையதளம்முகநூலில் கல்பனா ராகவேந்தர்

கல்பனா ராகவேந்திரா, (Kalpana Raghavendar) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகியாவார். இவர் திரைப்படங்களில் நடிகைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் தனது ஐந்தாவது வயதில் இருந்து பாடத் தொடங்கினார். இதுவரையிலும் கிட்டத்தட்ட 1,500 பாடல்களைப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.[1]

ஏஷ்யாநெட் மலையாளத் தொலைக்காட்சி வழங்கிய ஸ்டார் சிங்கர் என்ற பாட்டுப் போட்டியின் ஐந்தாவது பருவத்தில் வெற்றி பெற்றார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கல்பனா ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, டி. எஸ். இராகவேந்திரா ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும், நடிகரும் இசையமைப்பாளருமாவார். தாயார் சுலோச்சனா ஒரு பாடகியாவார்.[1] கல்பனாவின் இளைய தங்கை பிரசன்னாவும் இசை, நாடகப் பாடகியாவார்.[4] கல்பனா கருநாடக இசையை மதுரை டி. சீனிவாசனிடம் கற்றார்.[5]

தொழில் வாழ்க்கை

[தொகு]

கல்பனா தனது ஐந்து வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆறு வயதில் புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[6] இவரது முதற் பாடல், பி. சுசீலா, மனோ, எம். எம். ஸ்ரீலேகா, இவருடைய தங்கை பிரசன்னா ஆகியோருடன் பாடிய ஒரு குடும்பப் பாடலாகும். இப்பாடலுக்கு இசையமைப்பாளர் சலூரி வாசுராவ் இசையமைத்திருந்தார்.[7] 1999 இல் மணிசர்மா இசையமைத்த மனோகரம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் "மங்களகௌரிகி" என்ற பாடலுடன் ஒரு முழுமையான பின்னணிப் பாடகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், கே. வி. மகாதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா போன்ற பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடனும், பாடகர்களுடனும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு பின்னணிப் பாடகியாக அல்லாமல் ஒரு மேடைப் பாடகியாக பொதுமக்களுக்கு நன்கு தெரிந்தவர். உலகளவில் ஏறத்தாழ 3,000 மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[1][8] 2013 இல், தனது குரு மதுரை டி. சீனிவாசனுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னணிப் பாடகியாக இருந்தார்.[5]

இவர் பாடிய பாடல்களில் சில

[தொகு]
ஆண்டு பாடல் திரைப்படம் மொழி
1991 "போடா போடா புண்ணாக்கு" என் ராசாவின் மனசிலே தமிழ்
1992 "ஏறு மயில் ஏறி " தம்பி பொண்டாட்டி தமிழ்
1997 "மீனாச்சி கையில்" விடுகதை தமிழ்
1999 "திருப்பாச்சி அருவாள" தாஜ் மகால் தமிழ்
2000 " மனசுன பொங்கின" ஸ்பர்ஷா தெலுங்கு
"அலைபொங்கேரா " சகி தெலுங்கு
"சரிகம" வம்ஷி தெலுங்கு
"மங்கள கவுரி" மனோஹரம் தெலுங்கு
2001 "முதேல மந்தேல" நரசிம்மா தமிழ்
"லாலா நந்தலா" நரசிம்மா தமிழ்
"பிரேமண்டே சுலுவ கதுரா" குஷி தெலுங்கு
"மோனலிசா" ஆனந்தம் தெலுங்கு
"குந்தலகடி" செப்பாலானி உந்தி தெலுங்கு
"அரசாண்ட ராமன்" முராரி தமிழ்
2002 " முசுகு வெய்யோது" கட்கம் தெலுங்கு
" லோகம்" பாபி தெலுங்கு
"அம்மாடு அப்பாச்சி" இந்திரா தெலுங்கு
"ஹே மாமா" டக்கரி டோங்கா தெலுங்கு
"அலேபா அலேபா" டக்கரி டோங்கா தெலுங்கு
" செலியா செலியா சிங்காரம்" கலுசுகோவாலானி தெலுங்கு
"ஒரிநயனோ" தொட்டி கேங் தெலுங்கு
"ரெண்டு " கூலி தெலுங்கு
"கு கு கு" கவுரவுடு தெலுங்கு

நடிகையாக

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1986 புன்னகை மன்னன் சிறுமி தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Filmy-carnatic renditions". New Indian Express. February 4, 2013. http://www.newindianexpress.com/cities/chennai/article1448379.ece. 
  2. "Kalpana Raghavendra Wins Idea Star Singer Season 5". International Business Times. 25 September 2011.
  3. "Kalpana Raghavendar Winner Of Idea Star Singer Season 5". Kerala TV. Archived from the original on 2017-07-29. Retrieved 2017-04-05.
  4. "Shekinah shawn opera". தி இந்து. 24 April 2012. http://www.thehindu.com/features/friday-review/music/a-night-at-the-opera/article3349113.ece. 
  5. 5.0 5.1 "Congenially classical". தி இந்து. 10 January 2013. http://www.thehindu.com/features/friday-review/music/congenially-classical/article4268999.ece. 
  6. "என் பாடல்கள் அளவுக்கு முகம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானதில்லை: கல்பனா ராகவேந்தர்!" (in ta). தினமணி. 16 March 2018 இம் மூலத்தில் இருந்து 25 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181125203910/http://www.dinamani.com/cinema/special/2018/mar/16/my-face-is-not-familiar-to-my-fans-singer-kalpana-ragavendhar-2881861.html. 
  7. "Kalpna interview - about her". 21 October 2015 இம் மூலத்தில் இருந்து 10 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310140850/https://www.youtube.com/watch?v=i4mxZgnmtTU. 
  8. "Raining Music for a Cause". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 7 July 2015. http://www.newindianexpress.com/cities/chennai/Raining-Music-for-a-Cause/2015/07/07/article2905783.ece. 

    - "Melodies United by Tune, Divided by Language". New Indian Express. 23 May 2015. http://www.newindianexpress.com/cities/chennai/Melodies-United-by-Tune-Divided-by-Language/2015/05/23/article2828063.ece. 

    - "Rahman and Team Recreate Magic". New Indian Express. 4 October 2014. http://www.newindianexpress.com/entertainment/tamil/Rahman-and-Team-Recreate-Magic/2014/10/04/article2460733.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_ராகவேந்தர்&oldid=4242482" இலிருந்து மீள்விக்கப்பட்டது