காக்டெயில் (2020 திரைப்படம்)
காக்டெயில் | |
---|---|
Poster | |
இயக்கம் | இரா. விஜய முருகன் |
தயாரிப்பு | பி. ஜி. முத்தையா எம். தீபா |
இசை | சாய் பாஸ்கர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். ஜே. இரவீன் |
படத்தொகுப்பு | எஸ். என். பாசில் |
கலையகம் | பி ஜி மேடியா ஒர்க்ஸ் |
விநியோகம் | ஜீ5 |
வெளியீடு | 10 சூலை 2020 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காக்டெய்ல் (Cocktail) என்பது 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் இரா. விஜய முருகன் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் யோகி பாபு, இராசுமி கோபிநாத், மிதுன் மகேசுவரன், கேபிஒய் பாலா, கவின் ஆகியோர் நடித்துள்ளனர். படம் 10 சூலை 2020 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- டானாக யோகி பாபு [1]
- அம்மு வாக இரேசுமி கோபிநாத்[2]
- அன்புவாக மிதுன் மகேசுவரன்[1]
- பாண்டியாக கேபிஒய் பாலா[1]
- ஏஜாக கவின்[1]
- தமிழினியாக மேக்னா எலன்[1]
- இராசமாணிக்கமாக சாயாஜி சிண்டே [1]
- கும்பல் தலைவன் ஜேபியாக மைம் கோபி[1]
- ஜேபியின் உதவியாளாக மொகமது குரேசி[1]
- வீட்டின் செயலாளராக சுவாமிநாதன்[2]
- சின்ன டானா குக் வித் கோமாளி புகழ்
- பவா இலட்சுமணன்
- சுப்பர் குட் சுப்ரமணியன்
- சரவண சக்தி
வெளியீடு
[தொகு]இந்த படம் ஆரம்பத்தில் மார்ச் 2020 இல் திரையங்க வெளியீட்டை நடத்த திட்டமிடப்பட்டது.[2][3][4] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, தயாரிப்பாளர்கள் 2020 சூலை 10 அன்று ஜீ5 இல் நேரடியாக மேலதிக ஊடக சேவையாக வெளியிட தேர்வு செய்தனர்.[5] இந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக ஒரு காக்டைல் என்ற கிளி இடம்பெறுகிறது. மேலும், பறவை இடம்பெற்ற முதல் இந்திய படமும் இதுவாகும்.[6]
இசை
[தொகு]திரைப்படத்தின் பாடல்களுக்கு சாய் பாஸ்கர் என்பவர் இசையமைத்திருந்தார்.[5][7]
விமர்சனம்
[தொகு]ஹாலிவுட் படமான "தி ஹேங் ஓவர்" படங்களிலிருந்து படத்தின் முக்கிய கதை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது படமாக்கப்பட்ட விதம் சரியாக அமையவில்லை என்று தி இந்து கூறியது.[8] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் "காக்டெய்ல் போன்ற படங்களை மதிப்பாய்வு செய்யப்படும்போது, அவர்களின் வேதனைக்கு நம்மையும் உட்படுத்தியிருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்களை வழங்கும்போது இது ஒரு பாராட்டு" என்று கூறியது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Ravichander, L (10 July 2020). "Cocktail: Non-pretentious light-hearted tale". தெலுங்கானா டுடே.
- ↑ 2.0 2.1 2.2 "Yogi Babu's Cocktail to release on March 20". The Times of India. 14 March 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "Yogi Babu's 'Molotov Cocktail' release date revealed". The Times of India. 18 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "Yogi Babu's 'Cocktail' teaser". The Times of India. 22 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ 5.0 5.1 "Yogi Babu's Cocktail set for an OTT release". The Times of India. 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "Yogi Babu to play the lead in Cocktail, 'India's first film to star a cockatoo'". The New Indian Express. 12 April 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
- ↑ "'Cocktail' movie review: Yogi Babu-starrer is a flawed drink". The Hindu. 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
- ↑ "'Cocktail' movie review: A dreadful brew that stinks of bad humour". The New Indian Express. 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.