மிஸ்டர். லோக்கல்
மிஸ்டர். லோக்கல் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | எம். ராஜேஷ் |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா உதயநிதி ஸ்டாலின் |
கதை | எம். ராஜேஷ் |
திரைக்கதை | எம். ராஜேஷ் |
இசை | கிப்கொப் தமிழா |
நடிப்பு | சிவகார்த்திகேயன் நயன்தாரா ராதிகா நாராயண் லக்கி |
ஒளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் ஆர்தர் ஆ. வில்சன் (1 பாடல்) |
படத்தொகுப்பு | விவேக் ஹர்ஷன் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
விநியோகம் | ரெட் ஜியண்ட் மூவீஸ் தன்வீ பிலிம்ஸ் சக்தி பிலிம் பேக்டரி |
வெளியீடு | 17 மே 2019 |
ஓட்டம் | 2மணி நேரம் 34 நிமிடங்கள் |
மொழி | தமிழ் (மொழி) |
ஆக்கச்செலவு | ₹55கோடி |
மிஸ்டர். லோக்கல் (Mr. Local) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக இவர்களிருவரும் வேலைக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3][4] இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2018 மே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படம் பிப்ரவரி 2019 அன்று திரைக்கு வரத் திட்டமிடப்பட்டிருந்தது.[5].
நடிகர்கள்
[தொகு]- மனோகராக சிவகார்த்திகேயன்
- கீர்த்தனா வாசுதேவனாக நயன்தாரா
- பிளேடு பாண்டியாக யோகி பாபு
- அசோக்காக நாராயண் லக்கி
- மனோகரின் அம்மாவாக ராதிகா சரத்குமார்
- சிவாவாக சதீஸ்
- கவினாக ஆர். ஜே. பாலாஜி
- மனநல மருத்துவராக தம்பி ராமையா
- குத்தால சிதம்பரமாக ரோபோ சங்கர்
- ஜோதிடராக மனோபாலா
- எழில்மாறனாக சௌந்தரராஜா
- மனோகரின் சகோதரியாக ஹரிஜா
- ஹரீஷ் சிவா
- கீர்த்தனாவின் வழக்கறிஞராக லிசி ஆண்டனி
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 2018 இல் தொடங்கியது. இது சிவகார்த்திகேயனின் 13 ஆவது திரைப்படம் ஆகும்.[6] இத்திரைப்படத்தின் பெரும்பகுதியானது சென்னையில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரமான சிவகார்த்திகேயனால் ட்விட்டரில் 2019 பிப்ரவரி 2ஆம் நாள் வெளியிடப்பட்டது. இத்திரைப்படமானது 1992 இல் வெளிவந்த மன்னன் திரைப்படத்தின் கதையைப் போன்று ஒரு பணக்கார மனைவிக்கும், ஏழை கணவனுக்கும் இடையிலான பனிப்போரைப் பின்னணியாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இத்திரைப்படம் நானி நடித்த தெலுங்குத் திரைப்படமான நீனு லோக்கல் படத்தின் மறுதயாரிப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்தினர்.[7] இத்திரைப்படமானது அஜர்பைஜானின் பாகுவில் படமாக்கப்பட்டுள்ளது.
இசை
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கிப் கொப் தமிழாவால் செய்யப்பட்டது. இத்திரைப்படத்திற்கான பாடல் வரிகள் கிப் கொப் தமிழா, மிர்ச்சி விஜய் கே. ஆர். தரண், ரோகேஷ், பால் பி சாய்லஸ் மற்றும் சான்கான் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sivakarthikeyan's film with director Rajesh titled 'Mr Local' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "SK13 titled Mr. Local". The News Minute. 4 February 2019. Archived from the original on 7 February 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
- ↑ "Sivakarthikeyan and Nayanthara to share screen space in Mr Local". இந்தியன் எக்சுபிரசு. 3 February 2019. Archived from the original on 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
- ↑ "These stills from Siva-Nayan's Mr Local is breaking the internet!". Weportal (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
- ↑ "Mr Local in its final stage of shooting". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ Subramanian, Anupama (2019-02-02). "Sivakarthikeyan becomes Mr Local". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "Sivakarthikeyan's 'Mr. Local' is not a Telugu remake - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.