குப்பத்து ராஜா (திரைப்படம்)
| குப்பத்து ராஜா (திரைப்படம்) | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | பாபா பாஸ்கர் |
| தயாரிப்பு | சரவணன் சிராஜ் சரவணன் |
| இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| நடிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பூனம் பஜ்வா |
| ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசாமி |
| படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
| வெளியீடு | ஏப்ரல் 5, 2019 |
| ஓட்டம் | 120 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குப்பத்து ராஜா (Padaiveeran) பாபா பாஸ்கர் இயக்கத்தில், சரவணன் சிராஜ், சரவணன் தயாரிப்பில், ஜி. வி. பிரகாஷ் குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரின் முன்னணிக் கதைப்பாத்திர நடிப்பில் [1] வெளியான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் கே. எல் படத்தொகுப்பில் 2019-ஆம் ஆண்டில் வெளியானது.
நடிப்பு
[தொகு]இசை
[தொகு]இப்படத்தில் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் ஜி. வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டார்.
திரைப்படப்பணிகள்
[தொகு]நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஜி. வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் தான் இயக்கப்போகும் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பினை 2016-இல் அறிவித்தார். ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் கே. எல் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியது.[2] பூனம் பஜ்வா இத்திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பாத்திரத்தில் நடித்தார்.[3] 1978-இல் ரசினிகாந்த் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்னும் திரைப்படத்தின் தலைப்பே ஜி. வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பார்த்திபன் முதன்மையான பாத்திரத்தில் நடித்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GV Prakash-Parthiepan team up now" (in en-US). Top 10 Cinema. 2017-04-01 இம் மூலத்தில் இருந்து 2019-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190719054019/https://www.top10cinema.com/article/42029/gv-prakash-parthiepan-team-up-now.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-31. Retrieved 2018-02-05.
- ↑ "Poonam Bajwa turns Anglo Indian for GV Prakash’s next" (in en-US). Top 10 Cinema. 2017-04-03 இம் மூலத்தில் இருந்து 2017-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170405171830/https://www.top10cinema.com/article/42042/poonam-bajwa-turns-anglo-indian-for-gv-prakashs-next.
- ↑ http://www.indiaglitz.com/g-v-prakash-kumar-next-new-movie-kuppathu-raja-pooja-today-tamil-news-182441.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/gv-prakashs-kupathu-raja-to-commence-tomorrow.html