உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியா பாகிஸ்தான் (2015 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாபாகிஸ்தான்
இயக்கம்என். ஆனந்த்
தயாரிப்புபாத்திமா விஜய் ஆண்டனி
கதைN. ஆனந்த்
இசைதீனா தேவராஜன்
நடிப்புவிஜய் ஆண்டனி
சுஷ்மா ராஜ்
பசுபதி
ஒளிப்பதிவுஎன். ஓம்
படத்தொகுப்புஎம். தியாகராஜன்
கலையகம்விஜய் ஆண்டனி சினிமா கூட்டுத்தாபனம்.
விநியோகம்ஸ்ரீ கிறின் தயாரிப்பு
வெளியீடு8 மே 2015 (2015-05-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தியா பாகிஸ்தான் (India Pakistan) 2015 ம் ஆண்டு தமிழில் வெளியான காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை ஆனந்த் எழுதி இயக்கியிருந்தார்.இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சுஷ்மா ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க பசுபதி இணைவேடத்திலும் நடித்திருந்தார். இப்படம் விஜய் ஆண்டனியினால் தயாரித்து மே 8, 2015 ஆம் திகதி வெளியானது. இப்படத்திற்கான இசை தீனா தேவராஜன் அமைத்திருந்தார்.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

இரு வக்கீல்களான கார்த்திக் (விஜய் ஆண்டனி) மற்றும் மெலினா (சுஷ்மா ராஜ்) ஆகியோர் ஒரே வாடகை வீட்டில் வந்து தங்குவதுடன் கதை தொடங்குகிறது. இருவரும் அவ்வீட்டில் தங்க எத்தனிக்க அவர்களுள் யார் புதியவழக்கை பெறுகிறாரோ அவருக்கே அவ்வாடகை வீடு என முடிவெடுக்கிறார்கள். இவ்வாறிருக்க இருவருக்கும் ஒரே வழக்கில் எதிரிகளாக வழக்காட சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதன் அடிப்படையில் யார் அவ்வழக்கில் வெற்றி பெறுவாரா அவருக்கே அவ்வாடகை வீடு என முடிவாகிறது. அவ்வழக்கில் வெற்றிபெற இருவரும் ஆடும் நகைச்சுவை கபடநாடகங்கள் என விறுவிறுப்பாக நகரும் கதையில் நடுவே மெலினாவிடம் வில்லன் கொலை செய்யும் வீடியோ உள்ள இறுவட்டு சிக்கிகொள்ள மெலினா வில்லனிடம் மாட்டிக்கொள்கிறாள். அதன்பின்னர் மெலினாவைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் நடவடிக்கைகள் இறுதியில் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் என கதை நகர்கின்றது.

நடிகர்கள்

[தொகு]

வெளியீடு

[தொகு]

இப்படத்தின் செய்மதி உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது.[2]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2014 ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ள்ளதுடன் படப்பிடிப்பு முடிவதற்கு சுமார் 60 நாட்கள் எடுத்துள்ளது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A secret about Vijay Antony's next – Tamil Movie News". Indiaglitz.com. 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.
  2. "Diwali 2015 Special Premiere Movie Film India Pakistan Zee Tamizh Tv Channel 10-November-2015, Deepavali 2015 Sirappu Thiraipadam Zee Tamil Tv". Intalkies. 2015-11-10. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Vijay Antony's India Pakistan might release by August". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.
  4. "Vijay Antony's upcoming movies - Updates". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.