நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தை சிறீக்கிருட்டினா இயக்கியுள்ளார். இத்திரைப்படம், நல்ல கதையையும், திரைக்கதையையும் கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
நடிப்பு
[தொகு]- அருள்நிதி
- ரம்யா நம்பீசன்
- சிங்கம்புலி
- திருமுருகன்
தயாரிப்பு
[தொகு]நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய நிறுவனங்களான ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும் லியோ விசன்சு நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. [1]
தொலைக்காட்சி உரிமம்
[தொகு]இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
வரவேற்பு
[தொகு]இப்படம் திரைப்படத் திறனாய்வாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தி இந்துவில் வெளியான திறனாய்வு "இயக்குநர் காட்சிகளை வலு வாகவும் நம்பகத்தன்மையோடும் அமைக்கத் தவறிவிட்டது தான் பெரும் கோளாறு. எனினும் காட்சிகளில் இருக்கும் கலகலப்பு படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது" என்கிறது.[2] ".... இடைவேளைக்கு முந்திய பகுதி மாதிரி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பின்பாதியும் இல்லாதது குறை. ஆனாலும் நாலு பொலீசும் நல்லா இருந்த ஊரும் திரைப்படம் கலர்புல், காமெடி, கமர்ஷியல் படமாகும்" என்பது தினமலரின் திறனாய்வுக் கணிப்பு.[3] தனித்துவமான கருப்பொருளைக் கொண்ட இப்படத்தை இன்னும் சிறப்பாக ஆக்கியிருக்கலாம் எனக் கருதும் "பில்மிபீட்" இணையத்தளத்தின் திறனாய்வின்படி இப்படத்திற்கு 2.5/5 குறியீடு கிடைத்தது.[4]